திங்கள், 25 ஜூலை, 2011

நம்புங்கய்யா நம்புங்க…ஆம்பளைங்களும் இராஜஸ்தானில் குழந்தையை பெத்திருக்காங்க…
வருஷத்திற்கு அதிகபட்சம் 2 குழந்தைகளைப் பெத்துக்கலாம் ஆனால் 24 முடியுமா? ஆண்களும் மகப்பேறு அடைய முடியுமா? உலக அதிசயமா இல்ல… இராஸ்தான் அரசு ஊழியர்களின் அற்புத சாதனையா என்பதை இனிவரும் செய்திகள் மூலம் உங்களுக்கே தெரியும்.

ராஜஸ்தான் கோட்டா நகரில் உள்ள கோகுண்டா மகப்பேறு மையத்தின் பதிவேடுகளின் படி குறைந்தது 32 ஆண்கள் குழந்தை பெற்றிருப்பதாக இதை விசாரிக்கும் விசாரணை அதிகாரி சொல்றாரு!.இம்மையத்தின் இயக்குநர்கள் வறுமை கோட்டுக்குக் கீ வாழபெண்களின் பிரசவத்திற்காக அரசு கொடுக்கும் உதவி தொகையைப் பெறுவதற்காக இதுமாதிரி கோல்மால்களில் ஈடுபட்டிருக்காங்க!
துல இன்னொரு கொடுமை என்னன்னா... சில ஆண்கள் பல தடவை குழந்தை பெத்திருக்காங்க!. இதில்லாம 60 வயசான மூதாட்டி ஓரே வருஷத்துல இரண்டு முறை தனித்தனியா குழந்தை பெத்துக்கிட்டிருக்காங்க. சீதாங்ற பெண் ஊழியர் லவா.. குசா..ன்னு இதிகாசத்துல வர்ற மாதிரி இரண்டோட நிறுத்திக்காம அவர் மட்டுமே ஓரே வருஷத்தில 24 தடவை குழந்தை பெத்திருக்காரு. இந்த ஊழலை குறித்து விசாரிக்க மூன்று மூத்த மருத்துவர்களைக் கொண்ட குழுவை அரசு நியமிச்சிருக்கு.
எப்படித்தான் இப்படி புதுசு புதுசா யோசிக்கறாங்களோ..!?!?

மூலம்: http://www.inneram.com/2011072318041/males-delivering-babies-in-india  இத்தகவல் தளத்திற்கு  நன்றி!


Download As PDF

11 கருத்துகள்:

அம்பாளடியாள் சொன்னது…

என்ன கொடும சரவணா இது!...சமயல்க்கட்டில பங்கெடுத்தா
அது சமாச்சாரம் வேற.பிரசவத்திலயுமா!......கலி முத்திப்போச்சு....
வியப்பான தகவல்களை அள்ளி வழங்கிய உங்களுக்கு எனது
நன்றியும் பாராட்டுக்களும் சகோ.

RAMVI சொன்னது…

எதுல எல்லாம் தில்லுமுல்லு செய்யறதுன்னே இல்லாம போயிடுத்து.கஷ்டகாலம். செய்தி புதிது பகிர்வுக்கு நன்றி.

கடம்பவன குயில் சொன்னது…

நம்ம அரசாங்கத்தோட சலுகைகள் மற்றும் நலத்திட்டங்களெல்லாமே இப்படித்தான் முறைகேடாக அரசு ஊழியர்களின் வழிகாட்டுதல்களோடு உண்மையான பயனாளிகளுக்குப் போய்ச்சேராமல் வீணாகிறது. அரசு அதிகாரிகளின் ஆசிர்வாதத்தோடுதான் இது நடக்கிறது. மனிதர்களாய் பார்த்து திருந்தினால்தான் உண்டு.

அதிரைக்காரன் சொன்னது…

அன்புள்ள சகோதர்/சகோதரி,

மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே!

பரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.

தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

மேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்நேரம்.காம் செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

நன்றி.

அன்புடன்,
அதிரைக்காரன்
adiraiwala@gmail.com

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

எப்படித்தான் இப்படி புதுசு புதுசா யோசிக்கறாங்களோ..!?!?

பெயரில்லா சொன்னது…

எப்படித்தான் இப்படி புதுசு புதுசா யோசிக்கறாங்களோ..
பகிர்வுக்கு நன்றி மூர்த்தி...

A.R.ராஜகோபாலன் சொன்னது…

எல்லாம் கால கொடுமை நண்பரே
நல்ல தகவல்,

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

காலம் கலி காலம்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

ஹாஹாஹா இண்டரஸ்டிங்..;))

அப்புறம் நெல்லி மூர்த்தி நீங்க கேட்ட முதலீடு பத்தி பங்குச் சந்தை இயக்குனர் நாகப்பனிடம் ஆலோசனை கேட்டு என் ப்லாகிப் போட்டு இருக்கேன். பாருங்க.

http://honeylaksh.blogspot.com/2011/07/7.html

vidivelli சொன்னது…

ஆமா இப்படியே மாறிச்சுதென்றால் பெண்கள் ஓய்வெடுத்திடுவாங்க...
நல்ல ஐடியா...hahaha...
நல்ல பதிவு..
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்..

♔ம.தி.சுதா♔ சொன்னது…

காலம ரொம்பவே மாறிடிச்சுல்ல... இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ...