அம்பியின் அலப்பறை - 2! (நகைச்சுவையுடன் சமூக / அரசியல் அலசல்)
ஜல்லிக்கட்டு என்பது, விலங்குகளை கொடுமைப்படுத்துவதை தடுக்கும் சட்ட விதிகளை மீறும் நிகழ்வாக உள்ளது. பொழுதுபோக்கிற்காக, காளைகள் கொடுமைப் படுத்தப்படுகின்றன - பா.ஜ., எம்.பி.,யும், பாலிவுட் நடிகையுமான ஹேமமாலினி:
அம்பி: …ங்கொய்யால, என்ன ஒரு மிருக சிந்தனை! ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியால வீரம் என்கின்ற பெயரில் எத்தனை பேர் தங்கள் அங்கங்களை இழந்து “மாற்றுத் திறனாளி”களா மாற்றப்படறாங்கன்னு மனிதச் சிந்தனையோடு சொல்லியிருப்பீங்களோன்னு சித்த நேரத்துல சித்தம் தடுமாற இருந்தேன். சபாஷ்! மேனகா காந்திக்கு அடுத்தபடியா “மிருக சிந்தனை மாமேதை!”ன்னு உங்களுக்கு பட்டமே கொடுக்கலாமுங்க…--------------------------------------------------------------------------------------------------------------
சட்ட அமைச்சர் சுப்பையா நீக்கம்! ஒன்றரை மாதத்தில் தமிழக அமைச்சரவையில் 2 வது முறையாக இன்று மாற்றம் - அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்:
அம்பி: ஒவ்வொரு நாளும் கோட்டைக்கு போறதுக்கு முன்னாடி மந்திரிகள் அனைவரும் தினமும் காலையில் செய்தித் தாள் படிக்கறது ரொம்ப நல்லது. இல்லைன்னா, இலாகா போச்சா இல்ல…. இருக்கையே போச்சான்னு கண்டுபிடிக்கறது ரொம்பவும் கஷ்டப்பட வேண்டிவரும்!
--------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை கடற்படையில் சீன வீரர்கள்? உஷாரான உளவு பிரிவுகள் விசாரணை
அம்பி: இன்னமும் ஒன்னும் கெட்டுப்பொயிடலை. இந்திய இறையாண்மைக்காகவும் பாதுகாப்பிற்காகவுமாவது இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைத்திட இந்தியா முயற்சிக்கணும். இன்னமும் சோனியாஜியின் ஈகோவிற்கு சோரம் போகாம நாட்டின் நலனை பார்க்கலைன்னா தானா வச்சு கிட்ட ’ஆப்பு’வை, சீனாக்காரன் அப்பப்ப அசைச்சு அசைச்சுத்தான் பார்ப்பான் மாப்பு!
--------------------------------------------------------------------------------------------------------------
போதையில் அட்டகாசம் சிறப்பு எஸ்ஐயை புரட்டி எடுத்த ஏட்டு
அம்பி: ஹி..ஹி… இது டிரைலர் பீஸ்! இதுக்கே இப்படின்னா… இன்னும் போகப் போக பார்க்கத்தான போறீங்க… மாஸ்டர் பீஸை!
--------------------------------------------------------------------------------------------------------------
சூரிய சக்திக்கு தமிழக அரசு வழங்குகிறது முக்கியத்துவம் : ஜெயலலிதா உறுதி
அம்பி: உதய சூரியனை முடக்க நினைச்சாலும், நிஜ சூரிய ஒளியின் வாயிலா மின்சாரம் சேமிக்கும் பணியை நல்லாவே முடுக்கி விடுங்க. சென்ற முறை ‘நிலத்தடி நீர் சேமிப்பு’ க்கு முக்கியத்துவம் கொடுத்தீங்க! அந்த எபிசோட் முடிஞ்சுடுதுன்னு விட்டுடாம அதையும் தொடர்ந்து கடைபிடிக்க வழி செய்யுங்க!
--------------------------------------------------------------------------------------------------------------
லோக்சபாவில் கற்றதை விட, விவசாயிகளிடம் அதிகம் கற்றேன்:ராகுல்
அம்பி: ஹி ஹி… இதுக்கே ஏன் இப்படி சந்தோஷப்படறீங்க. வர்ற எலெக்ஷன்ல வாக்காளர்களாகிய நாங்க புகட்டற பாடத்தையும் சேர்த்து இன்னும் நல்லா கத்துக்கத் தானே போகப்போறீங்க!
--------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு: இதிலுள்ள செய்திகள், ஓவியங்கள் அனைத்தும் முன்னணி நாளிதழ்களிலும், இணையத்தளங்களிலும் சேகரிக்கப்பட்டது. அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். அரைவேக்காடு அம்பியின் பிரதிபலிப்பாக இருக்கும் கார்ட்டூனை வரைந்த பாலா அவர்களுக்கு சிறப்பு நன்றிகள்! Download As PDF
9 கருத்துகள்:
ஒரே இடத்தில் பல சுவைகளையும் காண்முடிகிற பல்சுவைப் பகிர்வுக்குப் பாராட்டுக்க்ள். வாழ்த்துக்கள்.
பல்சுவை மிளிரும் பரிணாம படைப்பு நண்பரே
அமர்க்களம்
சுவாரசிகமான அழகான படைப்பு...
வாழ்த்துக்கள்,,,,
can you come my said?
டவுட் தனபாலுவை (தினமலர்) நினைவுபடுத்துகிறீர்கள் நண்பரே! இருப்பினும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
சமச்சீர் கல்வியும், புதனும்
-------------------------
ஓர் ஜோதிட ஆய்வு.
http://www.tamiljatakam.blogspot.com/
அந்த ஏட்டு மேட்டர் செம..
நல்ல முயற்சி.
வாழ்த்துக்கள்.
பல்சுவைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
பேஷ் பேஷ் . நான்னாயிருக்கு அம்பி..
கருத்துரையிடுக