திங்கள், 4 ஜூலை, 2011

அரைவேக்காடு அம்பியின் அலப்பறை - 1

ஹி.. ஹி… நான் எம்புட்டு தான் புத்திசாலியாயிருந்தாலும் நம்மள “அரைவேக்காடு அம்பி”ன்னு தான் செல்லமா கூப்பிடறாங்க.  வீட்டுல தான் வாயைத் திறந்து தகிரியமா எதுவும் பேசமுடியலை. ”வாங்க பழகுவோம்.. பேசுவோம்..!”ன்னு தம்பி மூர்த்தி கூப்பிட்டதால, இந்த வலைப்பூவுல வந்தாவது வாயாற அனத்துலாமுன்னு கிளம்பி வந்துட்டேனுங்க… மக்கா... என்னைக் கொட்டறதும் ஷொட்டறதும் உங்க இஷ்டமுங்கோ...

-------------------------------------------------------------------------------------------------------------உள்ளாட்சி தேர்தலுக்கு முன் கூட்டணிகுறித்து முடிவு: ராமதாஸ்

அரைவேக்காடு  அம்பி:  ங்கொய்யால யார்ர்ராஅது... பார்ர்ய்ய்ய்யா...”மனிதன் மாறிவிட்டான், மரத்தில் ஏறிவிட்டான்” எனப் பாடுவது?! அட... மறுபடியும் பார்ர்ய்ய்ய்யா...”சுச்சுவேஷன் சாங்” ன்னு சுழிச்சுகிட்டு போறதை!?
-------------------------------------------------------------------------------------------------------------
ஆந்திராவில் தனி தெலுங்கானா மாநில விவகாரம் கூண்டோடு ராஜினாமா செய்ய காங்கிரஸ் எம்.பி.,க்கள் முடிவு

அரைவேக்காடு  அம்பி: எப்படியும் வர்ற தேர்தல்ல இருக்கு ஆப்பு! இப்படி ஏதாவது தகால் தக்கடி வேலை செஞ்சாலாவது “கொள்கை”க்காக துறந்தோம்ன்னு ‘டெபாசிட்’டையாவது தேத்திக்கலாம் மாப்பு!.

-------------------------------------------------------------------------------------------------------------
பீகாரில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பாதித்தகுடும்பத்தினரை சந்தித்து ராகுல் ஆறுதல்

அரைவேக்காடு  அம்பி:  ஹி..ஹி... அதே போல அப்பா காலத்து ‘அமைதிப்படையால” அப்புறமா அம்மா காலத்து மத்திய அரசின் மங்குனி அயலுறவுக் கொள்கையால, மறைமுகமாக (?!?!) இலங்கையில் நேரிட்ட மனிதப் பேரவலத்தினில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை சந்தித்து ஆறுதலையும் நிவாரணத்தையும் அளிக்க ஆவனச் செய்வாரா நம்ம இராகுல்ஜி?!
-------------------------------------------------------------------------------------------------------------


ரீசார்ஜ் செய்து புகைக்கலாம் : வந்தாச்சு இ-சிகரெட் இனி, வராது கேன்சர்!
சிகரெட்டின் முனை மேல் நெருப்பு போல இருக்கும். ஆனால் அது எல்.ஈ.டி எனும் மின்னணு சாதனம். சுடாது. புகைவரும் ஆனால் கேடு வராது
அரைவேக்காடு  அம்பி:  ஹி.. ஹி... அப்படியே ’இ-சரக்கு’க்கும் கொஞ்சம் ஏற்பாடு பண்ணினா ரொம்ப புண்ணியமாப் போகும் நைனா! குடல் வெந்து குடும்பங்களும் நொந்து போகாம இருக்குமில்ல...

-------------------------------------------------------------------------------------------------------------
சீனாவின் கரன்சிக்கு இலங்கை அனுமதி

அரைவேக்காடு  அம்பி:  ஈழத் தமிழர் நிலப்பரப்பினில் பெரும்பான்மை விடுதலைப்புலிகள் ஆண்ட வரை சீனாக்காரன் ஏதேனும் சீன் போட முடிஞ்சாதான்னு நீங்களே யோசிச்சுப் பாருங்க..
-------------------------------------------------------------------------------------------------------------இலங்கை போர் குற்றம் செய்ததாக ஐ.நா குழு கூறியுள்ளது: ஜெயலலிதா

அரைவேக்காடு  அம்பி:  முதல்வர் இருக்கையில் இருக்கற நீங்க ஒருத்தராவது உண்மையைக் கூற முனைந்துள்ளது சற்று ஆறுதலை தருகின்றது. இந்த விஷயத்துல காந்திஜியின் குரங்குப் பொம்மைப் போல (காணாமல், பேசாமல், கேட்காமல்... ஆனால் தந்தி மட்டும் அடித்துக் கொண்டு) மு.க. அமைதியா இருந்ததால இருந்ததால நீங்க சீன் போடறிங்களோன்னு ஒரு டவுட்டு இருக்கு. ஏன்னா ஒரு பக்கம் சட்டசபையில பொருளாதாரத் தடைன்னு தீர்மானம் போட்டுட்டு மறுபக்கம் வர்த்தக நோக்கிற்காக இலங்கைக்கு கப்பல் ஓட்ட அனுமதி கொடுத்திருக்கீங்களே! எங்களை வச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலை தானே...!?

-------------------------------------------------------------------------------------------------------------
முதல்வர் ஜெயலலிதா பெயரில் திடீர் நகர்: புறம்போக்கு இடம் ஆக்கிரமிக்க முயற்சி

அரைவேக்காடு  அம்பி: ஆரம்பிச்சுட்டாங்கய்யா... ஆரம்பிச்சுட்டாங்க! ஆட்சி மாறினாலும் காட்சி மாறலையே! இவுக போன ஆட்சியில பறிகொடுத்த இடங்களை மீட்கப் போறேன்னு பீளா விடறது இருக்கட்டும். இரத்தத்தின் இரத்தங்களை அடக்கிவாசிக்கச் சொல்லுங்க. இல்லன்னா... உள்ளாட்சி தேர்தல்ல இளம் வாக்காளர்கள் தி.மு.க. வுக்கு ஆப்பு வச்ச மாதிரி உங்க கட்சிக்கும் பெரிய ஆப்பா வச்சிடுவாங்க..

-------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு: இதிலுள்ள செய்திகள், ஓவியங்கள் அனைத்தும் முன்னணி நாளிதழ்களிலும், இணையத்தளங்களிலும் சேகரிக்கப்பட்டது. அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். அரைவேக்காடு அம்பியின் பிரதிபலிப்பாக இருக்கும் கார்ட்டூனை வரைந்த பாலா அவர்களுக்கு சிறப்பு நன்றிகள்!

Download As PDF

7 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

haa haa haa ஹா ஹா கலக்கல் காமெடி

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.

Ramani சொன்னது…

அரை வேக்காடு அம்பி ஜமாய்க்கிறாரே
1 ன்னு இருக்கிறதாலே தொடர்ந்து ஜமாய்ப்பாருன்னு நினைக்கிறேன்
எடுத்துக்கொண்ட பிரச்சனைகளும் படங்களும்
அம்பியின் கமெண்டுகளும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

A.R.ராஜகோபாலன் சொன்னது…

மனம் நிறைந்து ரசித்தேன் நண்பரே
அதிலும் அந்த இ -சரக்கு வு விட்டு சிரித்தேன் ஆயினும் மனதில் ஒரு நெருடல் இருக்கத்தான் செய்கிறது நம் அரசியல்வாதிகளின் அரசியலை நினைத்து, மதி நிறைந்த பதிவு அமர்க்களம்

பெயரில்லா சொன்னது…

அலப்பறைகள் தொடரட்டும்! ஓவியர் பாலாவின் உருவாக்கத்தில் அமைந்த அம்பியிடம் 'மதன்'அவர்களின் பாதிப்பு பளிச்சென தெரிகின்றதே!

பெயரில்லா சொன்னது…

அந்தப் 'பெயரில்லா' புண்ணியவான் நாந்தேன்! - சுரேஷ் சீனு :)

suryajeeva சொன்னது…

இனி மேல் அம்பின்னு பேர் வச்ச கேரக்டர நான் பயன் படுத்த முடியாதோ..