ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

"நீர்" குறித்து நீ(வி)ர், சற்றே சிந்திப்பீர்!-நிழற்பட ஆவணம்

Importance of water!  - குடிநீரின் அவசியம் குறித்த அற்புதமான படத்தொகுப்பு. கணிணியின் வாயிலாக நிழற்படங்கள் சற்று மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றினாலும், இன்று விழிப்போடு நாம் இயற்கையினைப் பேணிப் பாதுக்காக்காவிட்டால் நாளை நிச்சயம் பேரழிவினை நோக்கிச்செல்வோம் என்பதில் துளியளவும் ஐயமில்லை. 2002ம் ஆண்டிலிருந்து மின்னஞ்சல் வாயிலாக மரங்களின் வளர்ப்பு குறித்தும் நீரின் மகத்துவம் குறித்தும் உலாவருகின்ற இந்நிழற்படப்புனைவு, 2007ல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. நம் முன்னாள் குடியரசுத்தலைவர். திரு. அப்துல் கலாம் அவர்களின் கருத்தாக்கத்தில் உருவானதாகக் கேள்வி. கீழ்காணும் நிழற்படங்களைக்காண்போம்! சிந்திப்போம்!! 'நீரின்றி அமையாது உலகு' என்பதினை உணர்ந்து செயல்படுவோம்.

இந்நிழற்படப் படைப்பினை உருவாக்கியவர்க்கும், அதனை மின் அஞ்சல் மூலம் பகிர்ந்த நண்பர்களுக்கும் நன்றி!


Download As PDF

வியாழன், 24 பிப்ரவரி, 2011

கார்ட்டூனைப் பாருங்க...நீங்களும் இரசிப்பீங்க-3

நாட்டு நடப்புகளை நகைச்சுவையாகவும், நச்சென்றும், நாசுக்காகவும், நறுக்கு தெறித்தாற்போலவும் கூறுவதில் கேலிச்சித்திரத்திற்க்கு இணை ஏதுமில்லையென்றே கூறலாம். "இசைக்கு மயங்காத உயிரினம் உண்டோ" என்பது போல கார்ட்டூன்களை இரசிக்காத மனிதர்களே கிடையாது. சில இதழ்களின் உள்நோக்கம் வேறாக இருப்பினும் அவர்கள் வெளியிடும் கார்ட்டூன்கள் நமது நடப்பு அரசியலை தெள்ளத்தெளிவாகவும் அதே நேரத்தில் இரசிக்கும்படியும்  அமைவதினால் அவைகளையும் இங்கே தொகுத்துள்ளேன். காப்புரிமை சிக்கலில் எழாத வண்ணம் இருக்கும் கேலிச்சித்திரங்களில் சில.....Download As PDF

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

பார்க்கலாம் ஆனால் பருக இயலாது! -- மனங்கவர் நிழற்படங்கள்! (Coffee Art)

பார்க்கலாம் ஆனால் ... பருக இயலாது!  இரசிக்கலாம் ஆனால்... ருசிக்க இயலாது! 

ஒரு விடுமுறைக் காலைப் பொழுதில்  மனைவியின் கரங்களிலிருந்து மணமணக்கும் காபியினைப் பெற்று அருந்திய வேளையில் அதன் சுவையினில்  அவள் ஒரு "ம.செ." வின் ஓவியமாக தெரிந்தாள் அவள் மட்டுமல்ல, அவள் படைத்த 'குளம்பி'யும் (அதாங்க... 'காபி'யின் செந்தமிழாக்கம்)  ஒரு ஓவியமாகத்தான் தெரிந்தது. நாமென்ன ஓவியரா... உடனே எண்ணத்தில் உள்ளதை வரைந்துக்  காண்பிக்க!?!  இருக்கவே இருக்கின்றது கூகூள் பாபா! சுட்டியவுடன் கொட்டியது பின்வரும் கா(ப்)பி (அடித்த) ஓவியங்கள்.  
 Download As PDF

திங்கள், 14 பிப்ரவரி, 2011

எஸ்.எம். கிருஷ்ணா ஐயா, இது முறையா?! விழித்திருக்கும் போதே உறங்க முயலாதீர்!

விழித்திருக்கும் போதே உறங்க முயலாதீர்! வெளிச்சத்திற்கு வந்தது இது ஒன்று தான். இது போல எத்தனையோ?!அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சார்பில், "பாதுகாப்பு மற்றும் மேம்பாடு' குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த 11 ந்தேதி நடந்தது. அக்கருத்தரங்கில் நம் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு எஸ்.எம். கிருஷ்ணா அவர்கள் தனது (இந்திய நாட்டின்) உரைக்குப் பதிலாக தவறுதலாக போர்ச்சுகல் நாட்டின் உரையினை வாசித்துள்ளார். இதைக் கண்டு பிடிக்கவே நமது அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் 3 நிமிடங்கள் ஆகிவிட்டன. தான் என்ன வாசிக்க இருக்கின்றோம் என்பதினை அறியாமலேயே ஒரு நாட்டின் மிக முக்கிய பொருப்பிலுள்ள அமைச்சர்கள் இருக்கின்றனர் என்பதை இச்சம்பவம் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. 

அதுசரி... போர்ச்சுகல் நாட்டின் உரை எப்படி இவர் கரங்களிற்க்கு வந்தது? அரசு அதிகாரிகளின் கரங்களில் தான் அனைத்துமே உள்ளது.  நம் அமைச்சர்கள்  பெரும்பாலோர் ஏதோ சம்பிராதயமாக செயல்படுவதினால் தான் உலக அரங்கில் நாம் கூனிக் குறுக வேண்டியுள்ளது!

சற்றே சிந்தித்துப்பாருங்கள், நம் ஈழத்தமிழர்களின் அவல நிலையினை! இதிலிருந்து நாம் அறிவதென்ன? மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் தலைவர்கள் தான் புரியும் செயல் என்ன; அதன் விளைவுகள் என்ன என உணர்ந்துச் செய்திருப்பார்களேயானால் முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தினைத் தவிர்த்திருக்கக் கூடும். அதோடு இலங்கையில் சீனர்களின் அதிகாரபூர்வ நடமாட்டத்தினையும், லஷ்கர்-தொய்பா தீவிரவாதிகளின் வளர்ச்சியினையும் அடியோடு தவிர்த்திருக்கக் கூடும்.   இனியேனும் விழித்திருக்கும் போதே உறங்க முயலாதீர்கள்!குறிப்பு: நமது நோக்கம் பிழை கூறுவது அல்ல. மீண்டும் இது போன்று தவறு நிகழ்ந்திடக் கூடாது என்பதே எம்போன்ற குடிமகன்களின் கவலை.

 


Download As PDF

சனி, 12 பிப்ரவரி, 2011

இப்படியும் ஒரு அழைப்பிதழ்!

திருமணமென்னவோ 2009ன் இறுதியில நடப்பதாக இருந்தது. இருப்பினும் அச்சடித்த விதம் சற்று வித்தியாசமாக இருக்கவே தங்களுடன் பகிர்ந்துக்கொள்கின்றேன். திருமண அழைப்பிதழை எனக்கு அனுப்பிய நண்பர் திரு. ஜோசப் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நன்றி!

Download As PDF