செவ்வாய், 25 அக்டோபர், 2011

வாங்க… வளைகுடா கார்ட்டூன்களைப் பார்க்கலாம்! – 5

மாற்றம் என்பதே மாறாத விதி!...
மேற்கத்திய நாடுகளின் மனமாற்றத்தினால் லிபிய அதிபர் கடாபியை ஆட்சியிலிருந்து கடாசி விட்டு, அங்கே புரட்சிக்கு அடிகோலப்பட்டு, அதனால் பொதுமக்களுடன் அவரும் கொல்லப்பட்டார். மற்றும் சில நடப்புகளை வளைகுடாவின் பார்வையில் கார்ட்டூன் வாயிலாக பார்க்கலாம் வாங்க…


வறியவனுக்கும் செல்வந்தனுக்கும் உள்ள வேறுபாடு


ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதார  மீட்பு நடவடிக்கையும்


ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்  மறைவு


இஸ்ரேலின் வன்மத்திற்க்கு ஆதரவளிக்கும் அமெரிக்கா


ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப் மறைவு


மியான்மர் இராணுவ அரசு அரசியற் கைதிகளில் சிலரை விடுவித்தது. 


தாராளாமயமாக்கல் பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக மேற்கத்திய நாடுகளில் பரவலான மக்கள் எழுச்சி


லிபிய அதிபரின் கடாஃபியின் மறைவிற்கு பின் அவரது சகாப்தம் வீழ்ந்ததை சித்தரிக்கும் படம்


என்ன... ஒரு வழியாக நாம் சற்றே வளைகுடாவினை வலம் வந்துவிட்டோமல்லவா! என்ன செய்வது நாளொன்றுக்கு 24 மணி நேரம் போதுமானதாக இல்லாததால் கிடைக்கும் நேரத்தினில் இயன்றதை பகிர்கின்றேன். வழக்கமான தங்களின் ஆதரவிற்கு நன்றி!!


மனிதர்களின் மனதில் ஒரு வலுவான கருத்தாக்கத்தை பதியவைப்பதில் பேச்சின் / எழுத்தின் பங்கை விட, மிக எளிதான முறையிலான கார்ட்டூன்களின் பங்கு முதன்மையிடத்தினைப் பெற்றுவிடுகின்றது. இதனை பிரசுரித்த அரேப் நியூஸ் நாளிதழ் இதழிற்கும், கருத்தோவியம் வரைந்த ஓவியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!

Download As PDF

புதன், 19 அக்டோபர், 2011

இவுகளுக்கு பேதி வரும் போது கொஞ்சம் டீஜண்டா இப்படித்தான்…

அம்பியின் அலப்பறை - 6


தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது கனவு -  முதல்வர் ஜெயலலிதா

 கடந்த 30 வருஷங்களுக்கும் மேலாக திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிந்தாலும் ’ஏழ்மையை ஒழிப்போம்’ங்ற மாதிரியே ‘சிறந்த மாநிலமாக மாற்றுவோம்”ங்றீங்க.தூங்கிகிட்டே இருந்தா தான் கனவு வரும்ன்னு ஜனங்க முழிச்சுகிட்டு கூவறதுக்கு முன்னாடி சட்டுபுட்டுன்னு செயல்ல இறங்கிடுங்க. -------00000-------

 

எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி
அதானே பார்த்தோம்! கைது செய்யப்படும் அரசியல்வாதிகளுக்கு நெஞ்சு வலி வரலைன்னாதானே செய்தி! இவுகளுக்கு பேதி வரும் போது கொஞ்சம் டீஜண்டா இப்படித்தான்... நெஞ்சு வலின்னு சொல்லிக்குவாங்களோ!?
-------00000-------
நம்ம முதல்வர்மாருங்க மாவட்டந்தோறும் வளர்ச்சி பணின்னு அடிக்கல் நாட்டறது, திறப்பு விழா பண்றதுன்னு பொதுமக்கள் மத்தியில ஸீன் போடுவாங்க. குஜராத்துல, அவுக ஸ்டைலு வேறயாக்கும்!
-------00000-------
காங். அதிக இடங்களை கைப்பற்றும்: இளங்கோவன்

ங்கொய்யால… அஞ்சு மேல ஒன்னு வச்சு ஆறுன்னு ஆறுதலடைய வாய்ப்பு வராமலா போயிடும்!  உங்களை மாதிரி ஒவ்வொரு காங்கிரஸ்காரருக்கும் நம்பிக்கை வேணும் பாஸ். ஹி… ஹி.. அப்படி சட்டசபை உறுப்பினர் கூட்டல் கணக்கு ரேஞ்சுக்கு ஒருவேளை நகரத்திலோ இல்ல மாநகரத்துலயோ கெலிக்காட்டி கூட வார்டு மெம்பர் கூட்டல் கணக்கை காமிச்சி விட வேண்டியது தான்.

-------00000-------


அணுமின் நிலையத்தை நேரில் ஆய்வு செய்வேன்: கலாம்


அய்யா… உங்களுடைய ’அணுமின் உலை’ப்பார்வை… அணுமின் துறைக்கோ இல்லது அரசியல் கட்சிகளுக்கோ ஆதாயமாகிற மாதிரி இல்லாம, பொது ஜனங்களுக்கு ஆதாயமா, பாதுகாப்பாங்கறத… இன்னும் பத்து நாளை மேல எடுத்துகிட்டாலும் பளீச்சுன்னு சொல்லுங்க.


அமெரிக்கா, இரஷ்யா, ஜப்பானுக்கு வந்த மாதிரி பெருசா இழப்பு வந்தபிறகு பார்த்துக்கலாம்ன்னு அணுசக்தி துறையை உற்சாகப்படுத்தறதா நினைச்சு தமிழர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களின் வாழ்விற்கும், வாழ்வாதாரத்திற்கும் ‘உலை’ வச்சிடமாட்டீங்கன்னு நாங்க நம்பறோம்! உங்க பதில உலகமே எதிர்நோக்குது!!


-------00000-------
குறிப்பு: சில மக்கள் விரோத ஊடகங்கள் மட்டுமல்ல, அணு மேதாவிகள் உட்பட அவர்கள் வைக்கும் கேள்வி இதுதானாம்! இரஷ்ய / ஜப்பானிய அணு உலை விபத்துக்களால் அந்த இனம் அழிந்து விட்டதா என்ன? - கேட்பதற்கு மிகவும் புத்திசாலித்தனமாக இருந்தாலும் அம் மண்ணில் உள்ள ஒட்டு மொத்த மக்களும் அழிந்தால் தான் ’அழிவு’ எனக் கருதுவது போல் உள்ளது. அப்படியெனில் உலகம் இதுவரை ‘அழிவு’ என்ற ஒன்றையே எந்த மூலையினிலும் சந்திக்கவில்லை என்று தான் பொருள்கொள்ள வேண்டும்.

நன்றி:
செய்தி  -  அனைத்து தமிழ் முன்னணி இதழ்கள்
நிழற்படம் -  கூகுள் தேடல் மற்றும் அதன் வாயிலாக தொடர்புக்கொண்ட வலைப்பூக்கள் / தளங்கள்
அம்பி - பாலா

Download As PDF

திங்கள், 10 அக்டோபர், 2011

கார்ட்டூன்களைப் பாருங்க... குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க-16

நிறையவே எழுதணும்னு நினைச்சாலும் நேரம் இல்லாத காரணத்தால், எழுத்தின் வரிகளை விட, கேலிச்சித்திரங்களானது சொல்ல இயலாத விஷயங்களையும் சொல்லும் என்பதினால் இப்ப நான் ஜூட்… நீங்க கார்ட்டூன்களை பார்க்கலாம் ஸ்டார்ட்…

சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த விகடன், தினமணி, தினமலர், கல்கி, துக்ளக்... போன்ற அனைத்து தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!

குறிப்பு: வழக்கம் போல் மாநில அரசின் செயல்பாட்டினை விமர்சிக்கும் கேலிச்சித்திரங்கள் மிகக்குறைவே என் கண்ணில் தென்பட்டன.


Download As PDF

திங்கள், 3 அக்டோபர், 2011

வாங்க… வளைகுடா கார்ட்டூன்களைப் பார்க்கலாம்! – 4

அதான், அதான், அதேதான்….  அவனவன் அரேபியாவில அஃபிஷியலா  நாலு பொண்டாட்டியை வச்சுகிட்டு அமோகமா லைஃபை எஞ்சாய் பண்ணுறானுங்க, ஆனா இங்க என்னடான்னா, ஒரே ஒரு பொண்ணை கட்டிகிட்டு நாங்க படற பாடு இருக்கே... அய்யய்யயய்யோ…ன்னு புலம்ப வேணாம் அப்பு! அங்கன சோஷியல் ஸ்டேட்டஸ்க்குன்னு கட்டிகிட்டு அவனுங்களும் படற பாடு கொஞ்சநஞ்சமல்ல! வீட்டுக்காரன் கையில நாலு காசு இருப்பு இருந்தா, அத வச்சு நமக்கு இன்னொரு சக்களத்தியைக் கொடுத்துடுவாங்கன்னு அவங்க படுத்தற பாடும், கல்யாண வயசுல பையனோ, பெண்ணோ இருந்தாலும் அவுகளை டீலுல விட்டுட்டு தனக்கு இன்னொரு கல்யாணத்தை பண்ணிக்கற காமெடியும் இங்க உண்டு. ஆனால் தற்போது பரவலா படிச்ச அரேபியர்கள் மத்தியில ஒண்ணே ஒன்னுன்னு மனைவி இருந்தா போதும்ங்கற மனநிலைக்கு திரும்பிகிட்டிருக்காங்க. (யாரது அவங்களோட அன் அஃபிஷியல்  லைஃப் பத்தி கேட்கறது.. இது இப்பதிவின் தலைப்பை விட்டு தள்ளிப் போவதால்… விடு ஜூட்.) நமக்கெதுக்கு ஊர் வம்பு !

பங்கு சந்தையின் போக்கு, உலகம் முழுவதையும் பாடாய்படுத்துகின்றது. வாங்க… நாம கார்ட்டூன்கள் வழியா மத்ததையும் பார்க்கலாம்.


நாலு பெண்டாட்டிகாரனின் சராசரி மனநிலை!


வறுமையில் சோமாலியா


ஐ.நா.வில் பாலஸ்தீனியத்துவக்கு முக்கியத்துவ தர வேண்டி...


வீடோ பவரினைக்கொண்டு பாலஸ்தீனின் ’ஐ.நா.வில் உறுப்பினர்’ எனும் கனவினை நொறுக்கிவிடுமோ இஸ்ரேலும் & மேற்கத்திய நாடுகளும் எனும் அச்சம்!


பங்குச்சந்தையின் நிலையற்றத்தன்மையும்  உலகமும் கிரிஸ் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியும், அதனால்  ஐரோப்பிய உறுப்பு நாடுகளுக்குள்  எழுந்த நெருக்கடியும்

இறங்குமுகப் பங்குச்சந்தையும் உலகப் பொருளாதாரமும்மனிதர்களின் மனதில் ஒரு வலுவான கருத்தாக்கத்தை பதியவைப்பதில் பேச்சின் / எழுத்தின் பங்கை விட, மிக எளிதான முறையிலான கார்ட்டூன்களின் பங்கு முதன்மையிடத்தினைப் பெற்றுவிடுகின்றது. இதனை பிரசுரித்த அரேப் நியூஸ் நாளிதழ் இதழிற்கும், கருத்தோவியம் வரைந்த ஓவியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!


Download As PDF