சனி, 7 மே, 2011

ஒசாமாவின் இறுதிப் படம் - பலகீனமானவர்கள் பார்க்க வேண்டாம்...அமெரிக்காவிற்கு எதிரானவர் என்பதாலோ அல்லது  அவர் சார்ந்த மதத்தினராலோ, ஏதோ ஒன்றினால் அவருக்கு குறிப்பிட்ட மக்களின் ஆதரவு இன்னமும் இருக்கின்றது எவரும் மறுப்பதற்கில்லை.  ஒசாமா தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்ட செய்தி சில நாட்களுக்கு முன்பு பரப்பரப்பாக அனைத்து ஊடகங்களிலும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஊடகங்களில் வந்த புகைப்படம் கணிணியால் (மார்ப்பிங்) புனையப்பட்ட படம் என தெரியவந்தது. 

தேடுதல் வேட்டையில் அவர் நிராயுதப் பாணியாக இருந்தகாவும், அவரின் நடவடிக்கைகளை பல நாட்களாகவே தொடர்ந்து ஒரு குழு  கண்காணித்து வந்தது எனவும் அமெரிக்காவின் "மத்திய புலனாய்வுக் குழு" கூறுகின்றது. மக்களின் உணர்வலைகள் சற்று ஓய்ந்த பின்   தற்போது  பிரபலமான நக்கீரன் வார இதழில் அவரைக் கொன்றபின் எடுத்தப்  படம் வெளிவந்துள்ளது.பலகீனமானவர்கள் கீழே பார்க்க வேண்டாம்...

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
V

கீழே காணும் படம் கொடூரமாகவும், மனதைப்பாதிக்கும் வகையினில் இருந்ததாலும்.... பல நண்பர்களின் அறிவுறுத்தல்களுக்கிணங்க, அப்படத்தினை இவ் வலைப்பூவிலிருந்து அகற்றியுள்ளேன். "நாங்களெல்லாம் அஞ்சா நெஞ்சர்கள்; ரிஸ்க் எடுப்பதெல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி" எனும் எண்ணம் உள்ளவர்கள்..   அந் நிழற்படத்தினைக் கண்டே ஆக வேண்டுமென அடம்பிடித்தால்...

உங்களுக்கான நக்கீரனின் தள முகவரி:
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=53142


குறிப்பு: ஒரு முறைக்கு இரு முறை யோசித்து சுட்டுக!  மென்மையான உள்ளம் கொண்டவர்களும், வயதானவர்களும் அவசியம் தவிர்க்கவும். பின்னூட்டம் வாயிலாக பனித்துளி சங்கர் அவர்களும், தொலைபேசி மற்றும் மின் அஞ்சல் வாயிலாக ஏனைய நண்பர்களும் அறிவுறுத்தியமைக்கு நன்றி! இனி இது போன்ற பதிவுகள் தவிர்க்கப்படும்.Download As PDF

2 கருத்துகள்:

! ♥ பனித்துளி சங்கர் ♥ ! சொன்னது…

அன்பு நண்பருக்கு வணக்கம் ஒரு அன்பான வேண்டுகோள் இதுபோன்ற புகைப்படங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும் . இதுபோன்ற புகைப்படங்களின் பயன்படுத்தல் உங்கள் தளத்தில் வாசிக்க வரும் அனைவரையும் மிகவும் கஷ்ட்டப்படுத்தும் என்று நம்புகிறேன் குறிப்பாக இதயம் பலவீனமாக இருப்பவர்கள் மிகவும் தாக்கத்திற்கு உள்ளாவார்கள் . புரிதலுக்கு நன்றி

நெல்லி. மூர்த்தி சொன்னது…

நன்றி நண்பரே! ஏதோ ஒரு பதிவு என்றிடாமல் அக்கறையுடன் பிழையினைச் சுட்டிக்காட்டியமை... தங்களின் நல்லிதயத்தையும், மெல்லிய உள்ளத்தையும் கண்டு நெகிழ்கின்றேன் ! ஆர்வக் கோளாறினில் நான் பதிவிலிட்டுவிட்டேன். புரியவைத்தமைக்கு நன்றி! நிழற்படத்தினை அகற்றிவிட்டேன். இனி இது போன்ற பதிவுகள் நம் வலைப்பூவினில் தவிர்க்கப்படும்.