திங்கள், 9 மே, 2011

ஆ. இராசாவிற்கும், உலக அழகி ஐஸ்வர்யா இராயிற்கும் என்ன சம்பந்தம்...?


கனிமொழியுடன் இணைத்து ஆ.இராசாவின் மேட்டரு நாடு முழுக்க ஸ்பெக்ட்ரம்மால ஹாட்டாய்ப் பறக்கறப்ப இடையில அதென்ன கூலா ஐஸ்ஸோட சம்பந்தப்படுத்தி...என என்னைப் போலவே நீங்களும் மண்டைக்காய்வீர்கள் என எனக்கும் தெரியும். கீழ் காணும் நிழற்படங்களைக் பாருங்கள்....


இதுதான் ஆ,இராசாவின் எளிய எழில்மிகு குடிலாம்! என்னுடன் பணிபுரியும் வட இந்தியத் தோழர்கள் பரபரப்புடன் தங்களுக்குள் பகிர்ந்துக் கொண்ட மின் அஞ்சலில் அடியேனுக்கும் ஒன்று வந்துச் சேர்ந்தது. பார்த்தேன்! வியந்தேன்!!அது சரி.. இங்கிட்டு எங்க ஐஸ்வர்யா வந்தாகன்னுதானே கேட்க வாரீக! வந்துவிட்டேன்...

இதே எழில்மிகு குடிலைத்தான் அமிதாப் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராயிற்கு தேனிலவிற்க்காகப் பரிசளித்ததாக அதே வட இந்திய வட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு நம்ம உலக அழகியின் திருமணத்தின் போது மின் அஞ்சலில் பகிர்ந்துக் கொண்டார்கள். 

அட... வாக்காளர் உலகம் வேண்டுமானாலும் மறதியால் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்புவதற்குப் பதில் கோட்டைக்கு அனுப்பலாம்!  ஆனால்,  பரபரப்பாய் ஏதாவது ஒன்றினை பரப்பவேண்டும் என்பதற்காக மின் அஞ்சல் வாசகர் உலகமுமா அப்படி...?!?!இப்போது நீங்களே சொல்லுங்கள்......  ஆ. இராசாவிற்கும்,  உலக அழகி ஐஸ்வர்யா இராயிற்கும் என்ன சம்பந்தம்...?

 

Download As PDF

2 கருத்துகள்:

சமுத்ரா சொன்னது…

ok :)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

டைட்டிலை வெச்சே பதிவை ஹிட் ஆக்குவது எப்படி? என்பதை அறிந்தோம்.. ஹி ஹி நன்றி