புதன், 15 ஜூன், 2011

கார்ட்டூன்களைப் பாருங்க...குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க-9!

இன்னமும் ஊடகங்கள் தி.மு.க. வினரைத் தான் கலாய்க்கின்றனறேத் தவிர, கோட்டை மாற்றம், சமச்சீர்க் கல்வி, மருத்துவக் காப்பீடு... எனப் பற்பல விஷயங்கள் கார்ட்டூன் வாயிலாக ஊடகங்கள் பிரதிபலிக்கும் என எதிர்பார்த்திருந்தேன். வழக்கம் போல் ஆளும் கட்சியின் சர்ச்சைகளுக்குரிய முடிவுகளுக்கெதிராக கல்கி வார இதழை தவிர வேறெந்த ஜனரஞ்சக இதழ்களிலும் நானறிந்த வரையில் கார்ட்டூன்களைக் காண முடியவில்லை.   நீதிமன்றங்கள் மட்டுமே எதிர்க்கட்சிக்கான பணியினை அவ்வப்போது புரிகின்றன.  ஊடகங்கள் ஆளும் அரசினைக் குறைக் கூறவேயில்லையே என்பது என் புலம்பலல்ல. எவரெவர் எதைப் புரிந்திடினும் அதைத் தயங்காமல் தன்மைக்கேற்ப வாழ்த்தவும் வீழ்த்தவும் ஊடகங்கள் முனையவேண்டும் என்பதே என் போன்றோரின் அவா.சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தினமணி, தினமலர், கல்கி, விகடன் & துக்ளக் தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!
Download As PDF

5 கருத்துகள்:

மர்மயோகி சொன்னது…

நன்றி நண்பரே

முன்புள்ள ஆட்சியினால் பாதிக்கப்பட்ட ஜால்ரா மற்றும் ஆபாச பத்திரிக்கைகள் எப்போதும்போல தமது கடமையை மறந்து, ஆளும் கட்சிக்கு கூஜா தூக்கிக்கொண்டும், சினிமாக்கூத்தாடிகளுக்கு வால்பிடித்துகொண்டும் அலைகின்றன..

இந்த பதிவையும் பாருங்களேன்.
http://marmayogie.blogspot.com/2011/06/blog-post_15.html#comments

"தாரிஸன் " சொன்னது…

ரொம்ப நல்ல இருக்குங்க...

மாலதி சொன்னது…

ஆளும் கட்சிக்கு கூஜா தூக்கிக்கொண்டும், சினிமாக்கூத்தாடிகளுக்கு வால்பிடித்துகொண்டும் அலைகின்றன.

சமுத்ரா சொன்னது…

ரொம்ப நல்ல இருக்குங்க...

RAMVI சொன்னது…

மூர்த்தி,தங்களின் பதிவு பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு அறிமுகம் செய்து இருக்கிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.