செவ்வாய், 28 ஜூன், 2011

கார்ட்டூன்களைப் பாருங்க...குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க-10!

தற்போதைய பரபரப்பான செய்திகளில் பெரிதும் அடிபடுவது கார்ப்பரேட் (ஆ)சாமிகளின் கொட்டங்கள் தான். புட்டபர்த்தி சாய்பாபா இறந்தப் பின்பு ஆசிரமத்தின் சில அறைகளில் கிடைத்த கோடிக்கணக்கில் மதிப்புள்ள தங்கங்களும், ரூபாய் கட்டுக்களும் பிடிபட, அவரின் வழிநடக்கும் பக்தர்கள் பலருக்கும், அவரின் புனிதத் தன்மைக் குறித்து சந்தேகம் எழ ஆரம்பித்துள்ளது.115 நாட்களாக கங்கை நதியை தூய்மைப் படுத்தக்கோரியும், நிலக்கரி சுரங்க திருட்டுக்களை தடுக்கக் கோரியும் உண்ணாநோன்பினை மேற்கொண்டு உயிர் துறந்த சுவாமி நிகம் ஆனந்தை ஆன்மிகத்தின் போர்வாளாகக் கருதும் தேசியக் கட்சிகளோ, இயக்கங்களோ கண்டுக்கொள்ளவே இல்லை. ஆனால் போலி பாபா இராம் தேவ் 9 நாட்கள் கூட தொடர இயலாமல் ஜகா வாங்கியதை ஏதோ பெரிய சாதனையாக ஊடகங்கள் திரித்துக் கூறுகின்றன. உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாகவே ஒருபடி மேலே சென்று தில்லியில் உண்ணாநோன்பில் நடந்தது என்ன விசாரிக்க விழைந்ததை வரவேற்கும் நிலையினில், சுவாமி நிகம் ஆனந்தின் உண்ணா நோன்பிற்கு காந்தி பிறந்த நாட்டிலேயே மதிப்பின்றி அதனால் உயிர் துறக்க நேரிட அது குறித்து ஏன் மௌனம் சாதிக்கின்றது என்பது தான் வியப்பாக இருக்கின்றது!சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தினமணி, தினமலர், கல்கி, & துக்ளக் தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!


Download As PDF

சனி, 25 ஜூன், 2011

தமிழகத்திலேயே முதன்முறையாக... ஓ போட வைக்கும் முதல்வர்!


உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதன்முறையாக.... என்பது போல் அதென்ன... தமிழகத்திலேயே முதல்முறையாக...? யாரந்த முதல்வர்?!

விழி இருந்தும் மதி மயங்கும் மனிதர்களைத் தான் நாம் கேள்விப் பட்டிருக்கின்றோம். ஆனால் விழி இழந்தும் விதியினை எண்ணி நொந்துவிடாமல் மதியுடனே சோதனைகளையும் சாதனைகளாக்கிய ஒரு அபூர்வ மனிதரை இப்போது நாம் காண இருக்கின்றோம். திருப்பூரில் உள்ள சிக்கன்னா அரசு கலைக் கல்லூரியில் புதிய முதல்வராக, ஆங்கில இலக்கியம் படித்த பேராசிரியர் டாக்டர் கே.எம். பிரபு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். ஆமாம் இதிலென்ன சிறப்பு? இவருக்கு மட்டும் ஏனிந்த வரவேற்பு?!

இவர் பள்ளியில் படிக்கும் போதே லேசாக பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. என்றாலும் சமாளித்துக் கொண்டு பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். ஆனால் அதன் பிறகு முற்றிலும் பார்வை இழந்து விட்டார். இதனால் அவர் மனம் தளர்ந்து விட வில்லை. தொடர்ந்து பள்ளிப் படிப்பை முடித்தார். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். பின்னர் பி.எச்.டி. பட்டம் பெற்றார். சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பல ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்தார். பின்னர் அரியானாவில் உள்ள பி.பி.எஸ். கல்லூரிக்கு பணி மாற்றமடைந்தார். அங்கே அவர் ஆங்கில மொழி ஆயவகங்களை அமைத்தார், இதன் மூலம் மாணவர்களை ஆறே மாதங்களில் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறனை வளர்த்தார் என்பது குறிப்பிடத் தக்கது. 3G போன்ற நவீனத் தொழிற் நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது இவரது சிறப்பம்சம். இவருக்குப் பக்கபலமாக இவரது குடும்பத்தினரும், உடன் பணிபுரியும் பேராசிரியர்களும் உள்ளமை இவரின் சேவையினை இன்னமும் செம்மை செய்கின்றது.

மீண்டும் சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகவும், ஆங்கிலமொழித் துறைத் தலைவராகவும் பொறுப்பேற்றவர், தற்போது திருப்பூரில் உள்ள சிக்கன்னா அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக பதவி உயர்வுப் பெற்று பணி நியமணம் செய்யப்பட்டுள்ளார். உடலில் உள்ள ஊனமெல்லாம் ஒருவரின் உயர்விற்க்கும் வெற்றிக்கும் தடையல்ல என்பதை தன்வாழ்வின் மூலம் நிருபித்துக் கொண்டிருக்கும் பேராசிரியர், முனைவர் பிரபு அவர்கள் மென்மேலும் சாதனைகள் பல புரிய வாழ்த்தி மகிழ்வோம்!

ஊனமுற்றோர் எனும் சொல்லொழித்து "மாற்றுத் திறனாளிகள்" எனும் பெயரிட்டு அவர்களுக்கென்று தனித்துறையினை அமைத்தது முந்தைய தி.மு.க. அரசு. இதை விட ஒரு படி மேலே சென்று, ஒரு மாற்றுத்திறனாளிக்கு பதவி உயர்வளித்து அதனை உயிர்ப்பிக்கின்றது இன்றைய அ.தி.மு.க அரசு. இச் செயலிற்க்காக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வோம்!
 
 
குறிப்பு: தன் பணிப்பளுவிற்க்கு இடையினிலும், தான் அறிந்த இச் செய்தினை மறவாமல் எனக்குத் தெரியப்படுத்தி வலைப்பூவில் பதிவிட வித்திட்ட  நண்பர் திரு. இராஜா அவர்களுக்கு நன்றி!
Download As PDF

ஞாயிறு, 19 ஜூன், 2011

ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியாஸ்பெக்ட்ரம் புகழ் "நீரா ராடியா"விற்க்காக, தலைவர்களையும் அறிஞர்களையும் சிறப்பித்து அஞ்சல் தலை வெளியிடுவது போல தற்போது இன்டெல் நிறுவனம் அவரின் மதியூகத்தையும், செயலாக்கத்தையும் கௌரவிக்கும் பொருட்டு ஒரு மதர் போர்டு உருவாக்கினால் எப்படியிருக்கும்? சிந்தித்தவரின் கைவண்ணத்தினைக் காணுங்கள்!தொலை தகவல் தொடர்பு துறை மட்டுமின்றி, எரிவாயு, ஆற்றல், விமானப் போக்குவரத்து மற்றும் சுரங்கத்துறை என சகலத் துறைகளுக்கும் நீரா ராடியா மையப்புள்ளியாய் இருந்து அரசியல்வாதிகளுக்கும், தொழிலபதிர்களுக்கு உறவுப்பாலமாக திகழ்ந்ததை சித்தரிக்கின்றது

மின் அஞ்சல் மூலம் எனக்கு அனுப்பி வைத்த நண்பர்களுக்கு நன்றி! அதீத கற்பனையுடன் எளிய பாமரர்கள் முதல் கற்றறிந்த கல்வியாளர்கள் வரை ஓவியம் மூலம் மிகவும் எளிதாக புரியவைத்த அந்த முகம் தெரியாத கலைஞனுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்!குறிப்பு: ஸ்பெக்ட்ரம் என்றாலே அகில இந்திய அளவில் கனிமொழியையும், கருணாநிதியையும் முதன்மைப்படுத்தி ஆ. இராசாவினை பலிகடாவாக்கியது போல இந்திய ஊடகங்கள் அனைத்தும் சித்தரிக்கின்றன . உண்மையென்னவெனில், இவர்களையும் தாண்டி கட்சி பாகுபாடின்றி, வர்க்க பேதமின்றி, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தொழில் அதிபர்களும் இணைந்த 'கை'களுடன் மக்களைக் கூட்டணியாக சுரண்டியது தெரியவரும்.

ஒளிக்கற்றை ஊழலுக்காக ஆ.இராசா, கனிமொழி என பல முக்கியத் தலைகளும் உள்ளே இருக்க, ஜாமீனும் மறுக்கப்பட  தரகரான நீரா இராடியா மட்டும் எப்படி வெளியே உல்லாசமாக உலா வருகின்றார் என நீங்கள் சிந்தித்தால்... சில புதிர்களும் காங்கிரஸின் கயமைத்தனமும் புலப்படும்.


Download As PDF

புதன், 15 ஜூன், 2011

கார்ட்டூன்களைப் பாருங்க...குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க-9!

இன்னமும் ஊடகங்கள் தி.மு.க. வினரைத் தான் கலாய்க்கின்றனறேத் தவிர, கோட்டை மாற்றம், சமச்சீர்க் கல்வி, மருத்துவக் காப்பீடு... எனப் பற்பல விஷயங்கள் கார்ட்டூன் வாயிலாக ஊடகங்கள் பிரதிபலிக்கும் என எதிர்பார்த்திருந்தேன். வழக்கம் போல் ஆளும் கட்சியின் சர்ச்சைகளுக்குரிய முடிவுகளுக்கெதிராக கல்கி வார இதழை தவிர வேறெந்த ஜனரஞ்சக இதழ்களிலும் நானறிந்த வரையில் கார்ட்டூன்களைக் காண முடியவில்லை.   நீதிமன்றங்கள் மட்டுமே எதிர்க்கட்சிக்கான பணியினை அவ்வப்போது புரிகின்றன.  ஊடகங்கள் ஆளும் அரசினைக் குறைக் கூறவேயில்லையே என்பது என் புலம்பலல்ல. எவரெவர் எதைப் புரிந்திடினும் அதைத் தயங்காமல் தன்மைக்கேற்ப வாழ்த்தவும் வீழ்த்தவும் ஊடகங்கள் முனையவேண்டும் என்பதே என் போன்றோரின் அவா.சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தினமணி, தினமலர், கல்கி, விகடன் & துக்ளக் தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!
Download As PDF