அம்பியின் அலப்பறை - 6
தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது கனவு - முதல்வர் ஜெயலலிதா
எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி
காங். அதிக இடங்களை கைப்பற்றும்: இளங்கோவன்
ங்கொய்யால… அஞ்சு மேல ஒன்னு வச்சு ஆறுன்னு ஆறுதலடைய வாய்ப்பு வராமலா போயிடும்! உங்களை மாதிரி ஒவ்வொரு காங்கிரஸ்காரருக்கும் நம்பிக்கை வேணும் பாஸ். ஹி… ஹி.. அப்படி சட்டசபை உறுப்பினர் கூட்டல் கணக்கு ரேஞ்சுக்கு ஒருவேளை நகரத்திலோ இல்ல மாநகரத்துலயோ கெலிக்காட்டி கூட வார்டு மெம்பர் கூட்டல் கணக்கை காமிச்சி விட வேண்டியது தான்.
அணுமின் நிலையத்தை நேரில் ஆய்வு செய்வேன்: கலாம்
அய்யா… உங்களுடைய ’அணுமின் உலை’ப்பார்வை… அணுமின் துறைக்கோ இல்லது அரசியல் கட்சிகளுக்கோ ஆதாயமாகிற மாதிரி இல்லாம, பொது ஜனங்களுக்கு ஆதாயமா, பாதுகாப்பாங்கறத… இன்னும் பத்து நாளை மேல எடுத்துகிட்டாலும் பளீச்சுன்னு சொல்லுங்க.

நிழற்படம் - கூகுள் தேடல் மற்றும் அதன் வாயிலாக தொடர்புக்கொண்ட வலைப்பூக்கள் / தளங்கள்
அம்பி - பாலா
Download As PDF
தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது கனவு - முதல்வர் ஜெயலலிதா
கடந்த 30 வருஷங்களுக்கும் மேலாக திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிந்தாலும் ’ஏழ்மையை ஒழிப்போம்’ங்ற மாதிரியே ‘சிறந்த மாநிலமாக மாற்றுவோம்”ங்றீங்க.தூங்கிகிட்டே இருந்தா தான் கனவு வரும்ன்னு ஜனங்க முழிச்சுகிட்டு கூவறதுக்கு முன்னாடி சட்டுபுட்டுன்னு செயல்ல இறங்கிடுங்க.
-------00000-------
அதானே பார்த்தோம்! கைது செய்யப்படும் அரசியல்வாதிகளுக்கு நெஞ்சு வலி வரலைன்னாதானே செய்தி! இவுகளுக்கு பேதி வரும் போது கொஞ்சம் டீஜண்டா இப்படித்தான்... நெஞ்சு வலின்னு சொல்லிக்குவாங்களோ!?
-------00000-------
நம்ம முதல்வர்மாருங்க மாவட்டந்தோறும் வளர்ச்சி பணின்னு அடிக்கல் நாட்டறது, திறப்பு விழா பண்றதுன்னு பொதுமக்கள் மத்தியில ஸீன் போடுவாங்க. குஜராத்துல, அவுக ஸ்டைலு வேறயாக்கும்!
-------00000-------
காங். அதிக இடங்களை கைப்பற்றும்: இளங்கோவன்
ங்கொய்யால… அஞ்சு மேல ஒன்னு வச்சு ஆறுன்னு ஆறுதலடைய வாய்ப்பு வராமலா போயிடும்! உங்களை மாதிரி ஒவ்வொரு காங்கிரஸ்காரருக்கும் நம்பிக்கை வேணும் பாஸ். ஹி… ஹி.. அப்படி சட்டசபை உறுப்பினர் கூட்டல் கணக்கு ரேஞ்சுக்கு ஒருவேளை நகரத்திலோ இல்ல மாநகரத்துலயோ கெலிக்காட்டி கூட வார்டு மெம்பர் கூட்டல் கணக்கை காமிச்சி விட வேண்டியது தான்.
-------00000-------

அமெரிக்கா, இரஷ்யா, ஜப்பானுக்கு வந்த மாதிரி பெருசா இழப்பு வந்தபிறகு பார்த்துக்கலாம்ன்னு அணுசக்தி துறையை உற்சாகப்படுத்தறதா நினைச்சு தமிழர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களின் வாழ்விற்கும், வாழ்வாதாரத்திற்கும் ‘உலை’ வச்சிடமாட்டீங்கன்னு நாங்க நம்பறோம்! உங்க பதில உலகமே எதிர்நோக்குது!!
-------00000-------
குறிப்பு: சில மக்கள் விரோத ஊடகங்கள் மட்டுமல்ல, அணு மேதாவிகள் உட்பட அவர்கள் வைக்கும் கேள்வி இதுதானாம்! இரஷ்ய / ஜப்பானிய அணு உலை விபத்துக்களால் அந்த இனம் அழிந்து விட்டதா என்ன? - கேட்பதற்கு மிகவும் புத்திசாலித்தனமாக இருந்தாலும் அம் மண்ணில் உள்ள ஒட்டு மொத்த மக்களும் அழிந்தால் தான் ’அழிவு’ எனக் கருதுவது போல் உள்ளது. அப்படியெனில் உலகம் இதுவரை ‘அழிவு’ என்ற ஒன்றையே எந்த மூலையினிலும் சந்திக்கவில்லை என்று தான் பொருள்கொள்ள வேண்டும்.
நன்றி:
செய்தி - அனைத்து தமிழ் முன்னணி இதழ்கள்நிழற்படம் - கூகுள் தேடல் மற்றும் அதன் வாயிலாக தொடர்புக்கொண்ட வலைப்பூக்கள் / தளங்கள்
அம்பி - பாலா
7 கருத்துகள்:
ஹி ஹி ஹி....
ரைட்டு...
வழக்கம் போலவே கலக்கல்..
அப்புறம்
பேதி தானா அது, இன்னிக்கு தாங்க தெரிஞ்சிகிட்டேன்...
இத்தனை நாளா நெஞ்சு வலின்னு நம்பி ஏமாந்து இருந்திருக்கேன்...
வாக்குரிதியில் தான் பொய் நு பாத்தா வியாதியிலுமா?
நல்ல அலசல் மூர்த்தி.பகிர்வுக்கு நன்றி.
செய்திகளும் அதற்கான அலசல்
விமர்சனமும் அசத்தல்
தொடர வாழ்த்துக்கள்
நல்ல அலசல்கள்
"கலக்கல்" பதிவு..... ஹி,ஹி,ஹி,ஹி....
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், மூர்த்தி.
கருத்துரையிடுக