திங்கள், 3 அக்டோபர், 2011

வாங்க… வளைகுடா கார்ட்டூன்களைப் பார்க்கலாம்! – 4

அதான், அதான், அதேதான்….  அவனவன் அரேபியாவில அஃபிஷியலா  நாலு பொண்டாட்டியை வச்சுகிட்டு அமோகமா லைஃபை எஞ்சாய் பண்ணுறானுங்க, ஆனா இங்க என்னடான்னா, ஒரே ஒரு பொண்ணை கட்டிகிட்டு நாங்க படற பாடு இருக்கே... அய்யய்யயய்யோ…ன்னு புலம்ப வேணாம் அப்பு! அங்கன சோஷியல் ஸ்டேட்டஸ்க்குன்னு கட்டிகிட்டு அவனுங்களும் படற பாடு கொஞ்சநஞ்சமல்ல! வீட்டுக்காரன் கையில நாலு காசு இருப்பு இருந்தா, அத வச்சு நமக்கு இன்னொரு சக்களத்தியைக் கொடுத்துடுவாங்கன்னு அவங்க படுத்தற பாடும், கல்யாண வயசுல பையனோ, பெண்ணோ இருந்தாலும் அவுகளை டீலுல விட்டுட்டு தனக்கு இன்னொரு கல்யாணத்தை பண்ணிக்கற காமெடியும் இங்க உண்டு. ஆனால் தற்போது பரவலா படிச்ச அரேபியர்கள் மத்தியில ஒண்ணே ஒன்னுன்னு மனைவி இருந்தா போதும்ங்கற மனநிலைக்கு திரும்பிகிட்டிருக்காங்க. (யாரது அவங்களோட அன் அஃபிஷியல்  லைஃப் பத்தி கேட்கறது.. இது இப்பதிவின் தலைப்பை விட்டு தள்ளிப் போவதால்… விடு ஜூட்.) நமக்கெதுக்கு ஊர் வம்பு !

பங்கு சந்தையின் போக்கு, உலகம் முழுவதையும் பாடாய்படுத்துகின்றது. வாங்க… நாம கார்ட்டூன்கள் வழியா மத்ததையும் பார்க்கலாம்.


நாலு பெண்டாட்டிகாரனின் சராசரி மனநிலை!


வறுமையில் சோமாலியா


ஐ.நா.வில் பாலஸ்தீனியத்துவக்கு முக்கியத்துவ தர வேண்டி...


வீடோ பவரினைக்கொண்டு பாலஸ்தீனின் ’ஐ.நா.வில் உறுப்பினர்’ எனும் கனவினை நொறுக்கிவிடுமோ இஸ்ரேலும் & மேற்கத்திய நாடுகளும் எனும் அச்சம்!


பங்குச்சந்தையின் நிலையற்றத்தன்மையும்  உலகமும்



 கிரிஸ் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியும், அதனால்  ஐரோப்பிய உறுப்பு நாடுகளுக்குள்  எழுந்த நெருக்கடியும்

இறங்குமுகப் பங்குச்சந்தையும் உலகப் பொருளாதாரமும்



மனிதர்களின் மனதில் ஒரு வலுவான கருத்தாக்கத்தை பதியவைப்பதில் பேச்சின் / எழுத்தின் பங்கை விட, மிக எளிதான முறையிலான கார்ட்டூன்களின் பங்கு முதன்மையிடத்தினைப் பெற்றுவிடுகின்றது. இதனை பிரசுரித்த அரேப் நியூஸ் நாளிதழ் இதழிற்கும், கருத்தோவியம் வரைந்த ஓவியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!


Download As PDF

5 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

சூப்பர்.,

K சொன்னது…

கார்டூன்கள் கலக்கல்!

SURYAJEEVA சொன்னது…

சூதாட்டம் [பங்கு சந்தை] ஆடியவர்கள் என்றும் நிலைத்ததில்லை, அது அரசாக இருந்தாலும் சரி...

Yaathoramani.blogspot.com சொன்னது…

வழக்கம்போல அருமையான கார்டூன்களாகத்
தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளீர்கள்
அதிக மனைவி விஷயங்களை விளக்கிவிட்டு
கார்டூனைப் பார்த்ததுதான் புரிந்தது
இல்லையேல் வேறு அர்த்தம்தான் புரிந்திருக்கும்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//ஆனால் தற்போது பரவலா படிச்ச அரேபியர்கள் மத்தியில ஒண்ணே ஒன்னுன்னு மனைவி இருந்தா போதும்ங்கற மனநிலைக்கு திரும்பிகிட்டிருக்காங்க.//

வர வேற்கபட வேண்டிய மாறுதல்.

கார்ட்டூன்களின் தேர்வு மிக அருமை.