திங்கள், 26 செப்டம்பர், 2011

கார்ட்டூன்களைப் பாருங்க...குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க-15

ஐ.நா.வின் பிரதமர் உரை…. சுயமரியாதையா அல்லது தற்காப்பிற்க்காகவா?

ஐ.நா. அரங்கில் நமது பிரதமரின் உரை அகில உலகை அண்ணாந்து பார்க்க வைத்திருப்பதாக இதழ்களில் வந்துள்ள செய்தி வரவேற்கக் கூடியதே என்றாலும் மறைமுகமாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை சுட்டிக்காட்டும் வண்ணம் ஏன் வினாக்களை எழுப்பவேண்டும் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது. கொஞ்சம் அயர்ந்தால் வருங்கால சந்ததியினரையே கபளீகரம் செய்ய வைக்கும் அணுசக்திக்காக ஆட்சியே போனாலும் பரவாயில்லை என அமெரிக்காவின் ஆட்டுவிப்பிற்கு ஆடியவரான அவரின் இன்றைய உரையினை மட்டும் வைத்து சுயமரியாதையுடன் அவர் பேசுவதாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


      அதோடு இன்னமும் குண்டுவெடிப்புகளுக்கு துணை போகும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தினையோ, தமிழினத்தை வேரறுத்த இலங்கைப் படுகொலைப்பற்றியோ உரைகளை தவிர்த்தது மூலம் மேலும் ஐயம் எழுகின்றது. இலங்கையின் மீது போர்க்குற்ற நடவடிக்கை வேண்டும் என ஐ.நா.வின் மனித உரிமை பாதுகாப்பு அமைப்பு குரல் எழுப்பியுள்ள நிலையில் அவ்வாறு ஒரு நிலை ஏற்படுமேயாயின் இன்றைய ஆளும் காங்கிரஸின் தலைகள், இதன் பின்னணியில் பெருமளவு உருளவும் வாய்ப்பு உள்ளதாகவே தெரிகின்றது. மேலும், காங்கிரஸின் ஆட்சிக்கு எதிராக அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு நேரிடையாகவே அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது, வளைகுடா & ஆப்ரிக்கா நாடுகளின் மக்கள் எழுச்சிக்கு தீ வார்த்து தன் நலனைப் பாதுகாக்கும் மேற்கத்திய சூழ்ச்சிகளுக்கு தாமும் இரையாக நேரமிடும் என்கின்ற ஞானம் தற்போது தான் வந்துள்ளது போலும்! ஆதலால் தான் பாகிஸ்தான் பயங்கரவாதத்தினைக்கூட நாங்களே சமாளித்துக் கொள்கின்றோம் என ஐ.நா.வின் உரையில் அதை புறக்கணித்தார் போலும்! (இலங்கை தமிழின அழிப்பு சம்பவத்தில் இராணுவத்திற்கு ஆயுத தளவாடங்கள் உட்பட அனைத்து உதவிகள் புரிந்த வகையில் பாகிஸ்தானுடன் கூட்டுக் களவாணிகளாக கை கோர்த்தது உலகறிந்த விஷயம்). இவ்விவகாரத்தில் இலங்கைக்கு பேரார்வம் கொண்டு ஒத்துழைத்த ஜப்பானை சுனாமியின் பெயரால் இயற்கை தண்டித்துவிட்டது. ஆனால் இந்தியக் குடிமக்களின் எதிர்ப்பையும் மீறி உதவிய தி.மு.க. மெல்ல மெல்ல அனுபவிக்கின்றது. காங்கிரஸும் இனி விரைவில் அனுபவிக்கும் என சமீபத்திய நிகழ்வுகள் கூறுகின்றது.


தனக்கென்று வந்தால் தான் தெரியும் தலைவலியும் திருகு வலியும் என்று சும்மாகவா சொன்னார்கள்!? நமக்கெதுக்கு ஊர் / உலக வம்பு... வாங்க கார்ட்டூன்களைப் பார்க்கலாம்.சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும்,  அதனை பிரசுரித்த தினமலர்தினமணி விகடன், கல்கி, துக்ளக்... போன்ற அனைத்து தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!

Download As PDF

8 கருத்துகள்:

வெளங்காதவன் சொன்னது…

:)

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

இன்றைய நாட்டு நடப்புகள் கார்டூன்ங்கலாக அசத்தல்...

கணேஷ் சொன்னது…

நாட்டு நடப்புகளை இப்படி கார்ட்டுன் வழி தரிசித்தால் குமுறத்தான் வேண்டியிருக்கிறது. அசத்தல்!

suryajeeva சொன்னது…

பிரதமரின் குடும்பம் அமெரிக்காவில் காலாட்டி கொண்டு சோறு சாப்பிடும் பொழுது வேறு எதுவும் யோசனைக்கு வரவில்லை தோழர்...

Ramani சொன்னது…

அருமையான கார்டூன்களாக
தேர்ந்தெடுத்துக் கொடுத்து
அசத்திவிட்டீர்கள்
குறிப்பாக சித்ம்பரம் கார்ட்டூன்
வாழ்த்துக்கள்
த,ம 2

பெயரில்லா சொன்னது…

கலக்கல் கார்டூன்ஸ்...

சென்னை பித்தன் சொன்னது…

அசத்தல் கார்ட்டூன்கள்!

FOOD சொன்னது…

கலக்கலான பகிர்வு. கருத்துக்களும் அருமை.