புதன், 14 செப்டம்பர், 2011

கார்ட்டூன்களைப் பாருங்க...குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க-14

ஆதிக்கசாதி ”தேவர் குருபூஜை”க்கு மாற்றாக அடக்கப்பட்ட சாதியினர் தங்களின் சமூக ஒற்றுமையைக் குறிக்க ”இமானுவேல் சேகரன் குருபூஜை” செய்கின்றனர்.  வாக்கு வங்கிகளுக்காக பிற சமூகத்தில் உள்ள அரசியற்கட்சியினர் (தி.மு.க / அ.தி.மு.க…போன்ற கட்சிகள்) தேவர் குரு பூஜையில் கலந்துக் கொள்ளும்போது இமானுவேல் சேகரன் நினைவு நாளை ஆண்டுதோறும் மறவாமல் மருத்துவர். இராமதாசு நினைவுக் கூர்கின்றார்.
குறிப்பிட்ட சமூகத்தலைவர்களுக்காக ஒவ்வொரு முறையும் குருபூஜை செய்யும், பொழுது தமிழகத்தில் இனம்புரியாத பதற்றம் இருக்கும். இம்முறை அது கலவரத்தில் முடிந்து 10 உயிர்களை பலிகொண்டுள்ளது.  இந் நூற்றாண்டிலும் சாதிவெறியின் தனலை பாதுகாக்கும் இக் குருபூஜைகளுக்கு முடிவு தான் என்ன…? மானிடராய் பிறந்தவர்களுக்கு குருபூஜை செய்யும் வழக்கை அரசு ஆணை இட்டு ஒழிக்க முன்வரவேண்டும்.   அவர்கள் எவ்வளவு புனிதர்களாக இருந்தாலும் ஆன்மீக திலகங்களாக இருந்தாலும் அமரர் ஆனவர்களாக இருப்பினும் அவர்களை நினைவுக் கூர்வதில் தவறில்லை. ஆனால் சமூக ரீதியான பதற்றத்தினைத் தூண்டும் இந்நிகழ்வுகள் வேண்டாமே! இதற்க்கும் ஒரு தில் வேண்டும்! தமிழகம் பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்; சமூக அக்கறையுள்ள துணிச்சலான ஒரு தலைவரை காண்பதற்கு!


சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த (மதன், பாலா, மதி, முத்து...) ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த விகடன், தினமணி, தினமலர், கல்கி... போன்ற அனைத்து தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!

Download As PDF

9 கருத்துகள்:

suryajeeva சொன்னது…

வழக்கம் போலவே
முதலில்
குலுங்கி
பின்பு குமுறி
நல்லா இருந்துச்சு சாமியோ

suryajeeva சொன்னது…

எந்த அரசியல்வாதிகளையும் விடாமல் நொங்கு எடுக்கும் வாங்க பழகுவோம் பேசுவோம்.. வாழ்க..

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

ஒவ்வொரு கார்ட்டூனும் ஆயிரம் கதை சொல்லுது ...

RAMVI சொன்னது…

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

சென்னை பித்தன் சொன்னது…

கார்ட்டூனைக் கருத்துப் படம் எனச் சொல்வது சரிதான்.

Ramani சொன்னது…

அனைத்து படங்களும் அரசியல்வாதிகளின்
அசிங்கமான பக்கத்தை மிக அழகாக
வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன
அருமையான பதிவினைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
த,ம 3

பெயரில்லா சொன்னது…

நல்ல கார்ட்டூ-கருத்துப்பதிவு... வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

//வாக்கு வங்கிகளுக்காக பிற சமூகத்தில் உள்ள அரசியற்கட்சியினர் (தி.மு.க / அ.தி.மு.க…போன்ற கட்சிகள்) தேவர் குரு பூஜையில் கலந்துக் கொள்ளும்போது இமானுவேல் சேகரன் நினைவு நாளை ஆண்டுதோறும் மறவாமல் மருத்துவர். இராமதாசு நினைவுக் கூர்கின்றார்.//

ஓ... அவனா நீயீ.....

மஞ்சுபாஷிணி சொன்னது…

அன்பு வணக்கங்கள் உங்கள் தளம் வந்து பார்த்தேன்.. மிக அருமையாக இருக்கிறது...

நிதானமாக படித்து கருத்திடுவேன்பா...