திங்கள், 5 செப்டம்பர், 2011

கார்ட்டூன்களைப் பாருங்க...குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க-13

இன்றைய இந்தியாவை ஓரளவிற்க்கு நல்வழியில் நடத்துவது மத்திய அல்லது மாநில அரசுகளோ அல்ல...நீதித்துறை தான் என்பது போல பல சம்பவங்கள் நிகழ்ந்துக் கொண்டு வருகின்றன.  சமச்சீர் கல்வி, ஊழல் எதிர்ப்பு என்பதோடு நின்றிடாமல் மனிதநேயத்துடன் இராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகள் எனக் கருதப்படும் பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்குத் தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதை வரவேற்கின்றோம்.

இராஜீவ் இறந்தபின்பும் ஆளுங்கட்சியாக காங்கிரஸ் தொடர்கின்ற போதும் இது வரை ”கொலைச் சதி” குறித்து விசாரணையைத் தொடரவில்லை என்பது இந்தியா அறிந்த ஒன்று. இராஜீவ் படுகொலையின் போது காங்கிரஸின் முக்கியப் பிரமுகர்களீல் ஒருவர் கூட இறக்கவில்லை.  சுப்ரமணிய சுவாமிக்கும், சந்திராசுவாமிக்கும் தொடர்பு உண்டு என்று பகிரங்கமாக புகார் எழுந்தபோதும் இதுவரை அவர்கள் விசாரிக்கப் படவில்லை.

இந்திராவின் மறைவிற்குப் பின்னர் எழுந்த கலவரத்தில் கொல்லப்பட்ட 3500 சீக்கியர்களுக்கு காரணமான காங்கிரஸாரில் இதுவரை  ஒரு நபர் கூட தண்டிக்கப்படாத / இவர்கள் தான் குற்றவாளிகள் எனச் சுட்டிக்காட்ட படாதபோது, இராஜீவ் வழக்கில் முழுமையான விசாரணை முடிவடையாத நிலையில் 21 ஆண்டுகள் தனிமைச் சிறையினை அனுபவித்தவர்களுக்கு நீதி மறுக்கப்படக்கூடாது என்பதே மனிதநேயம் கொண்டோரின் ஆதங்கம் மட்டுமல்ல... உண்மையானக் குற்றவாளிகளை அடையாளங்காண காங்கிரசு ஏன் முன் வரவில்லை என்பது பெரும் சந்தேகத்தினை வரவழைக்கின்றது. 

  இன்னமும் நிறைய செய்திகள், இதுகுறித்த அய்யங்களை தனிப்பதிவினில் எழுதலாம் என நினைக்கின்றேன். இப்போது கார்ட்டூன்களுக்குள் செல்வோமே..!
சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த (பாலா, மதி, இராமு...) ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தினமணி, தினபூமி, தினமலர், துக்ளக், குமுதம் .. போன்ற அனைத்து தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!Download As PDF

13 கருத்துகள்:

RAMVI சொன்னது…

எல்லாமே ரொம்ப எஅன்னயிருக்கு.
அதிலும் அந்த காந்தி,நேரு கார்டூன் சூப்பர்.

RAMVI சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
RAMVI சொன்னது…

மன்னிக்கவும்,ரொம்ப நன்னாயிருக்கு.(எழுத்துப்பிழை)

suryajeeva சொன்னது…

இந்த தடவையும் அம்மா பற்றி எந்த கார்டூனும் கிடைக்கலியா.. நம்பிட்டோம் சார்

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

இந்த படங்கள் பல விஷயங்களை விளக்குகிறது..

நெல்லி. மூர்த்தி சொன்னது…

" suryajeevaகூறியது...
இந்த தடவையும் அம்மா பற்றி எந்த கார்டூனும் கிடைக்கலியா.. நம்பிட்டோம் சார்"

மன்னிக்கவும்! தங்களைப் போன்றே எமக்கும் ஆதங்கம் உள்ளது. நான் மட்டும் ஓவியராக இருந்திருந்தால் நிறைய கார்ட்டூன்கள் அரசியற்வாதிகளை மட்டுமல்ல, ஆன்மீகவாதிகள், சமூக சேவகர்கள் என அவர்களின் செயலிற்கேற்ப “ஷொட்டுக்களாகவோ அல்லது கொட்டுக்களாகவோ” ஓவியங்களை வரைந்திருப்பேன். எனக்கு கிடைத்த நேரத்தினில், காப்புரிமை சிக்கலில்லாத கேலிச்சித்திரங்களை தேடுவதால் எம் பணி முழுமையடையவில்லை. தங்களுக்கு தெரிந்த இணைய தளங்கள் வேறு ஏதேனுமிருப்பின் அவசியம் தெரிவிக்கவும். மறவாமல் நம்மவர்களுடன் பகிர்ந்துக் கொள்வேன்.

suryajeeva சொன்னது…

காப்புரிமை சிக்கலெல்லாம் பாக்காத தலைவா.. அதெல்லாம் தலைவலி.. இஷ்டத்துக்கு போடு.. அப்படி ஏதாவது பிரச்சினை வரும் சமயத்தில் தூக்கிடலாம்.. ஏதாவது கண்ணில் பட்டால் தங்களுக்கு தெரிவிக்கிறேன்...

பெயரில்லா சொன்னது…

கார்ட்டூன்...நல்லாயிருந்தது...தொடர்ந்து கலக்குங்க..

பெயரில்லா சொன்னது…

super

விக்கியுலகம் சொன்னது…

கார்ட்டூன்sssssssssssssss super!

Katz சொன்னது…

super collection

பெயரில்லா சொன்னது…

we enjoyed the cartoons...nice....keep it up

thalir சொன்னது…

எல்லாமே நல்லாயிருக்கு! சூப்பர்!