புதன், 29 டிசம்பர், 2010

கார்ட்டூனைப் பாருங்க... நீங்களும் இரசிப்பீங்க - பகுதி 2

நிறைய பேருக்கு கார்ட்டூன் பார்க்க விருப்பமிருக்கும், ஆனா தேடி எடுக்க கொஞ்சம் பேருக்குத் தெரியாது அல்லது பலருக்கு நேரமிருக்காது.  அந்த என்னைப் போன்ற ஒருவர்களுக்காக நான் இரசித்த, காப்புரிமை சிக்கலில்லாத, நையாண்டியாகவும் அதே நேரத்துல நறுக்கு தெறித்தாற்போலவும் எழுத்தாணியை விட தூரிகை சுவாரசியமாகச் சொல்லும்  இக் கார்ட்டூன்கள் சமர்பிக்கப்படுகின்றது.  


Download As PDF

புதன், 22 டிசம்பர், 2010

அப்ரைசல் என்றொரு அல்வா.... நொந்தவனின் சொந்தப் புலம்பல்!


நேற்றுவரை 'நீ வேறா?! நான் வேறா?!!' எனக் குழைந்து குழைந்து வேலை வாங்கும் என்னுடைய பாஸ் இன்று என்னவோ 'நீ யாரோ? நான் யாரோ?' என மாறி மாறி விரட்ட',  "எலிக்குஞ்சு ஏன் இன்னைக்கு  திடீருன்னு அம்மணமா ஓடுது?"ன்னு காரணம் புரியாம கர்ணம் அடிச்சு யோசிச்சுகிட்டிருந்தேன். (அதென்ன எலிக்குஞ்சு... அம்மணமா... யாரது, இதுக்கெல்லாம் அர்த்தம் கேட்டுகிட்டு...... இது பழமொழி நண்பா பழமொழி!,  அனுபவிக்கணும். ஆனா ஆராயக்கூடாது. அப்பாடா...  கமல் வாழ்க! பம்மல் கே சம்பந்தமும் வாழ்க!வாழ்க!!).

அப்போது என் சகதோழனும் வெளிறிய முகத்துடன் பேந்த பேந்தவென என முழித்தவாறு அவன் துறைத் தலைவனின் அறையிலிருந்து வெளிவந்தான். என்னடா சங்கதி என்று கேட்டேன். அதற்கு அவன் "அப்ரைசல் வந்தாலே போச்சு! காளை மாட்டிலிருந்து பாலைக் கறக்கச்சொன்னாலும் கறந்திடலாம். ஆனா இவனுங்க கொடுக்கற டார்கெட்டை (டார்ச்சரை) அச்சீவ் செய்வது ஆவற காரியமில்லப்பா! " என்றான்.


இது என் நண்பனுக்கு அவர் பாஸ் கொடுத்த டாஸ்க்


ஓ! இது தானா சங்கதின்னு என்னோட பாஸ் ஏன் இந்த கதகளி ஆடுனாருங்கறதுக்கான ஆதாரம் கண்டுபிடிச்சுட்டேன். அப்ப அப்ரைசலுக்காக என்னை  என் பாஸ் விடுத்த அழைப்பு (ஆப்பு?!) என்னை உஷாராக்கிடுச்சு.   தனியா போனா சிக்கல் தான்னு சகாவுடன் அவரை சந்திச்சேன். நாங்க கடுமையா இயந்திரம் போல உழைக்கறதாச் சொன்னேன்.

பிறகு என்னை மட்டும் தனியாக இருக்கச்சொல்லி, நான் எந்தெந்த மாதிரியெல்லாம் ஆணி புடுங்கினேன்னு புட்டு வச்சாரு.  (அருஞ்சொற்பொருள்:  ஆணி - வேலை)

அவராச் சொல்லாம நானா புடுங்கலாமுன்னு சொன்ன ஆணிகளை அக்கு வேறா ஆணி வேறா அலசனாரு.
அதுக்கப்புறம் எனக்கு கொடுத்தாரு பாருங்க அடுத்தாண்டு இலக்கு....

என்னச் செய்யறது... அததுக்கும் ஒரு இது (அதிர்ஷ்டம்) வேணுமுங்க!  வெந்து நொந்து வெளிய வந்த போது என் பாஸோட சொம்பு அவருடைய அறைக்கு நுழைஞ்சானுங்க.

கொஞ்ச நேரம் கழிச்சு அவன் திரும்பி வரும்போது அவன் முகத்துல பல்பு எரியறத பார்த்ததும் புரிஞ்சுப் போச்சு! இந்த வருடம் எனக்கு
அல்வாக் கொடுத்துட்டாங்கடாடோய்!


பி.கு.:  புண்பட்ட மனதை புகைப் (படம்) போட்டு ஆத்தறதுக்கு என் நண்பன் பிஜூ வர்கிஸ் (தற்போது கத்தாரில் உள்ளார்) அஞ்சல் நிழற்படங்கள்  உதவியாக இருந்தது. சிற்சில படங்கள் நெட்டிலே சுட்டது.  இவர்களுக்கு நன்றி!


(மேற்கண்ட புனைவு நகைச்சுவைக்காக ஆக்கமாக்கியது. எவருடைய மனதையும் புண்படுத்துவது நோக்கமல்ல. பல நொந்த உள்ளங்கள் சொந்தம் கொண்டாடினால் அதற்கு நாம் பொருப்பல்ல..)

Download As PDF

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

சொல்லாமல் கொல்லும் சர்க்கரையை இல்லாமல் செய்யும் வெண்டை!

நிழற்படம்:   azhkadalkalangiyam.blogspot.com

"சொல்லாமல் கொல்லும் சர்க்கரையை இல்லாமல் செய்யும் வெண்டை!" யின் மகத்துவம் குறித்து எழுத்தாளர். திரு. ரா.கி. இரங்கராஜன் அவர்களுக்கு அவரின் நண்பர் திரு. பி.எஸ். பஞ்சநாதன் அவர்கள் இயற்கை மற்றும் எளிய பாட்டி வைத்தியம் ஒன்றை பரிந்துரை செய்துள்ளார்.   பக்க விளைவுகளற்ற, பணவிரயமின்றி அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் வெண்டைக்காயினை பின்வருமாறு உண்டதால்  இரண்டு வாரங்களிலேயே 60மில்லி கிராம் வரை அவருக்கும், 30 கிராம் வரை அவரது துணைவியாருக்கும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்ததுக் கண்டு வியந்து அவர் தான் பெற்ற இன்பத்தை பெறுக இவ்வையகம் என அதன் பயன்பாட்டில் அகமகிழ்ந்து தனது நண்பர்களுக்கும் ஊடகம் வாயிலாக மக்களுக்கும் தெரிவித்து பயனடையவும் செய்தார். 

செய்முறை:
"ஒரு வெண்டைக்காயை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் தலையையும், நுனியையும் வெட்டி எறிந்துவிடுங்கள். மீதியுள்ள காயை இரண்டு அல்லது மூன்று துண்டங்களாக நறுக்கிக் கொள்ளுங்கள். இரவு படுக்கப் போகும் முன் அரைடம்ளர் தண்ணீரில் அதை ஊறப்போடுங்கள். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் முதல் வேலையாக வெண்டைக்காய் துண்டங்களை வெளியே எடுத்துப்போட்டுவிட்டு அந்த தண்ணீரைக் குடியுங்கள். (குறைந்தது ஒரு மணி நேரம் காபி, டீ வேறு எதுவும் அருந்த வேண்டாம்.) "

இதைப் படிப்பவர்கள் பின்பற்றிப் பாருங்கள். பலன் இல்லை என்றால் விட்டுவிடுங்கள். செலவே இல்லாத வைத்தியம். ஆனால்  ஒன்று, வெண்டைக்காய்த் தண்ணீர் ஆகையால் வாயில் அரை நிமிடம் கொளகொள என்றிருக்கும். கூடவே ஒரு மடங்கு சாதா தண்ணீர் குடித்தால் அந்த உணர்வும் அகன்றுவிடும். அல்லது ஒரு திராட்சைப் பழத்தை மெல்லலாம்.  இந்த வெண்டைக்காய்த் தண்ணீரை எவ்வளவு நாள் அருந்தி வரவேண்டும்?எப்போது நிறுத்துவது? தற்சமயம் சாப்பிட்டு வரும் மாத்திரைகளை நிறுத்தலாமா?ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து விட்டால் அபாயம் ஆயிற்றே? இப்படி பல சந்தேகங்கள் எழலாம்.  மாதத்திற்கொருமுறை ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுவது அவசியம். அந்த ரிபோர்ட்டைத் தகுந்த டாக்டரிடம் காட்டுங்கள். வெண்டைக்கை வைத்தியத்தைத் தொடரலாமா?அல்லது தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளலாமா? என அவரிடம் கேளுங்கள். அவர் சொல்கிறபடி செய்யுங்கள் - என அறிவுறுத்தியுள்ளார் திரு.ரா.கி.ர அவர்கள்.


இது அனுபவ உண்மை!:  ஜூபைலில் என்னுடன் பணிபுரிந்த  நண்பர் திரு. ஒருவர் அவரின் தாயாருக்கு பரிந்துரை செய்தார். விளைவு: அவரின் மருத்துவரே  வியந்துள்ளார்.  கடந்த ஒரு வருடமாக நிதமும்  அவர் வெண்டைக்காய் வைத்தியத்தை தொடர்வதால் மீண்டும் மாத்திரை எடுக்கும் சூழல்  இதுவரை வரவில்லை. 120 மில்லி கிராம் அளவிற்குள் கட்டுபட்டுள்ளதால் சர்க்கரைக்கான மருந்தை தற்காலிகமாக உண்பதை நிறுத்திக்கொள்ளும்படி கூறியதோடு மறவாமல் மாதமொருமுறை இரத்தப் பரிசோதனையைத் தொடர்ந்திட அறிவுறுத்தியுள்ளார்.  

 வாழ்க நலமுடன்!

Download As PDF

சனி, 18 டிசம்பர், 2010

மூடுபனி மட்டுமல்ல, புழுதிப்புயலும் ஆபத்தே! - பாதுகாப்புடன் ஓட்டுக

வளைகுடாவில் பெரும்பாலான விஷயங்கள் நம் தமிழகத்துடன் ஒப்பிடுகையில் வித்தியாசமாகவே இருக்கும். நாம் எழுதுவதோ அல்லது படிப்பதோ இடமிருந்து வலமாக இருக்கும். ஆனால் இங்கு வலமிருந்து இடமாக இருக்கும்.  அது போல பருவநிலைகளும். பனிப்பொழிவு என்பது மார்கழி மாதக்காலக் குளிரினைத் தான் குறிப்பிடுவோம். வட இந்தியாவில் இருப்பது போல் உறைபனி நிலைக்கோ அல்லது பனிப்பொழிவினையோ பெற்றதில்லை. மூடுபனி கூட சொல்லும்படி கடுமையாக பாதித்ததில்லை. ஆனால் இங்கு அப்படியில்லை இங்கு வாகனங்களில் செல்லும் போது சில இடங்களில் எச்சரிக்கைப் பலகைகள் நமது விழிப்புணர்விற்காக நிறுத்தப்பட்டிருக்கும். அது போன்ற சமயங்களில் அதிகப் பட்சம் 15 கி.மீ  வரை தான் வண்டியின் வேகம் இருக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருக்கும். சாதாரணமாக 120 கி.மீ. - 150 கி.மீ என வாகனத்தை இயக்கி பழகிக் கொண்டவர்கள் திடீரென 15 கி.மீ. க்கு மாறவேண்டுமெனில் மனம் மறுதலிக்கும். ஆதலால் வாகனங்கள் விபத்தில் சிக்கும். இதில் நம்மவர்களும் அரேபியர்களைப்போன்ற மனப்பான்மைக்கு மாறிவிடுவது தான் வருத்தத்துக்குரிய விஷயம்.


கடந்த 13ந் தேதி தமாம் இரண்டாம் தொழிற்சாலை வளாகத்திற்கு செல்வதற்கான நெடுஞ்சாலையினில் திடிரென ஏற்பட்ட புழுதிப் புயலால் ஏற்பட்ட ஒரே நேரத்தில் பனிரெண்டிற்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்குண்ட விபத்தினைக் காண்க!.


என்னதான் நாம் விழிப்புணர்வுடன் இருப்பினும், நமக்கு முன்னரும் பின்னரும் உள்ள நபர்கள் சரியாக இல்லாத பட்சத்தில் நாமும் விபத்தினிலிருந்து தப்பிப்பது கடினமே! 

சாதாரணப் புழுதி எப்படியெல்லாம் சாரதிகளை சாய்த்துள்ளது என்பதைக் கண்டு விழிப்படைக!. பாதுகாப்புடன் இனி உங்கள் மகிழ்வுந்துகளை ஓட்டுவீர் என நம்புவோமாக!


(இணையத்திலிருந்து நிழற்படங்களை அனுப்பி உதவிய நண்பர் திரு. கணேஷ் அவர்களுக்கு நன்றி!) Download As PDF

திங்கள், 13 டிசம்பர், 2010

அறியாமையா அல்லது அறிந்துக்கொள்ளவிருப்பமின்மையா?!


தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடுகளில் பணிபுரிவதால் அவர்களின் நலனுக்காகவும், வெளிநாடுகளில் பணிபுரிகின்றபோது அங்கு அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து அவர்களை மீட்டிடவும், வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காகத் தனித்துறையை ஏற்படுத்திட வேண்டும் எனும் கோரிக்கையை ஏற்கும் வகையில் "வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம்''  அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.  இதற்காக அயல்வாழ் தமிழர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்!சராசரி இந்திய மக்களுக்கு கிடைக்காத சில சேவைகளை கேரள அரசு தங்களுடைய அயல்வாழ் மலையாள மக்களுக்கு புரிகின்றனர். வழக்கம் போல, பெயரளவில் இன்றி, திறன்பட இயங்கும் தனிவாரியமாக செயல்படின் அயல்வாழ் தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாவர். பொதுவாக, வளைகுடாவில் வாழும் இந்தியர்களுக்கு வருடமொருமுறை ஒருமாதம் தான் விடுமுறை கிடைக்கும். இங்கு சொந்தமாக மகிழ்வுந்து வைத்துள்ளவர்கள் நம் இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் கூட பெற இயலாத நிலையினில் சட்ட விதிமுறைகள் உள்ளன. இந்தியாவினிலேயே கேரளாவினில் மட்டும் தான் வளைகுடா ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் அதனை அதிகாரபூர்வ அரபி-ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களிடம் மொழியாக்கம் செய்து அதன் வாயிலாக விரைவினில் இந்திய வாகன ஓட்டுரிமம் பெறுகின்றனர். இதனை மற்ற மாநிலங்களும் பின்பற்றினால் மிகவும் உதவிகரமாக இருக்கும். 

இந்திய அரசியல்வாதிகளோ அல்லது அதிகாரிகளோ வளைகுடா நாடுகளுக்கு வரும்போது பாதிப்பிற்குள் இருக்கும் தொழிலாள சமூகத்தினரை நேரடியாகச் சந்திப்பதில்லை.  நட்சத்திர விடுதிகளிலோ அல்லது தனி அரங்குகளிலோ வருகை தந்து உயர்நிலையிலுள்ளவர்களிடம் மட்டுமே தொடர்புக் கொண்டு சென்றுவிடுகின்றனர். பெரும்பாலான இந்தியர்களுக்கு இவர்கள் வருகைதருவது கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை. இது போன்று நிகழ்வது ஆட்சியாளர்களின் அறியாமையா அல்லது அறிந்துக்கொள்ளவிருப்பமின்மையா!?!? இது ஆளும்வர்க்கத்தினருக்குத் தான் வெளிச்சம்!

சேவை மனப்பான்மையுள்ள நம்மவர்கள் தன்னார்வத்துடன் தனித்தனி அமைப்புகளை உருவாக்கி அரசு இயந்திரங்கள் வாயிலாகவோ அல்லது தனித்தோ இவர்களுக்கு தங்களால் இயன்ற தொண்டுகளை ஆற்றிக்கொண்டிருப்பது தான் சற்று ஆறுதல் தரும் விஷயம்.  எழுதப் படிக்கத்தெரியாத, படித்தசிலருக்கும் ஆங்கில அறிவு இல்லாத உழைக்கும் வர்க்கத்தினரை நேரடியாக அயலகத்தில் உள்ள அரசு இயந்திரங்கள் கருணை உள்ளத்துடன் தொடர்புக்கொண்டு அவர்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனுக்கும் உள்ள விருப்பமாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கத்தாரில் அரசு இயந்திரங்களின் மெத்தனப்போக்கினால் உயிரிழந்த துர்சம்பவம் போல மீண்டும் நிகழ வருங்காலத்தில் வாய்ப்பளிக்கக் கூடாது.

கடுமையான விவாதங்களுக்கு நம் தமிழக முதல்வரின்  சில செயல்கள் அமைந்தாலும் தமிழகத்தின் பல்வேறு நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கும், சாதனைகளுக்கும் முன்னோடியாய் இருக்கின்றார் என்பதனை மறுத்திட இயலாது.  அவரால் அமைய இருக்கும் "வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம்''  ' 108 அவசர ஊர்தி, இலவச மருத்துவ காப்பீடு திட்டம்' போல வெற்றிகரமாக செயல்பட வாழ்த்துக்கள்!
Download As PDF

சனி, 11 டிசம்பர், 2010

சர்தார்ஜி பில்கேட்ஸுக்கு எழுதிய கடிதம்

யாரோ சுட்ட வடை, (நகைச்)சுவையாய் இருக்கு!. வாங்க நாமளும் சேர்ந்து கொறிப்போம்! பி.கு: திருட்டிலேயே மிக மோசமான திருட்டு சிந்தனை திருட்டு தான். ஆனால் சில நேரங்கள்ல அநாமத்தா கிடைக்கிற பொருளை தத்தெடுக்கிற மாதிரி இந்த நகைச்சுவை உணர்வு ததும்பும் சர்தார்ஜி கடிதத்தை தத்தெடுத்து தவழ விடுகிறேன். இக்கடிதத்தை மின் - அஞ்சல் மூலம் பகிர்ந்த திரு. பார்த்திபனுக்கு நன்றி! நகைச்சுவையுடன் எழுதிய அந்த முகம் தெரியாத மூலகர்த்தாவிற்கு நன்றியோ நன்றிகள்!

ஐயா,


சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.
2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன் இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில் அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "Sit" என மாற்றிவிடுங்கள். அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.4. "Recycle Bin" என்பதை  "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால் என்னிடம் சைக்கிள் இல்லை,ஸ்கூட்டர்தான் உள்ளது.5.  "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால்"Find" மெனுவிற்குச் சென்று தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது.. இது ஒரு "Error" என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன் வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே "Mouse"  தரும்போது கூடவே ஒரு "Dog"  தரவும், பூனையை விரட்டுவதற்கு.7. நான் தினமும் "Hearts"  விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில் தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?8.என்னுடைய குழந்தை "Microsoft Word"  கற்று முடித்து விட்டான். நீங்கள் எப்போது "Microsoft Sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer" ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My Pictures"  என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப் போடப்போகிறீர்கள்?11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி "Microsoft Home"கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?


12. முக்கியமாக என்னுடய கம்ப்யூட்டரில் விண்டோஸ் வாங்கிய பின்னரும் ஜன்னல் இல்லை. விரைவாக அனுப்பி வைக்கவும்.இப்படிக்கு,

விண்டோஸ் விரும்பி,

சன்சிங்


Download As PDF

சனி, 4 டிசம்பர், 2010

எளியத் தொகையினில் உலகத்தரம் வாய்ந்தக் பொறியியற் கல்வி...

Be prepare to get international standard Engineering studies (IIT) with Less or Free of Cost!


கற்பதில் ஆர்வமும், கல்வியில் திறனும் கொண்டவரா நீங்கள்... உலகத்தரம் வாய்ந்த பொறியியற்கல்வியினை எளியத்தொகையினில் அல்லது இலவசமாக (அரசு விதிமுறைகளுக்குட்பட்டது) கற்க கவலையை விடுங்கள். உங்கள் வருங்காலத்தைப் ஒளிமயமாக்க மத்திய அரசினால் 15 நகரங்களில்  இயங்கும் சேர்வதற்கு நுழைவுத்தேர்வெழுத தயாராகுங்கள்.

அண்மையில் "ரியாத் தமிழ் சங்கக் குழும"த்திலிருந்து திரு. அஷ்வக் அவர்கள், அவரின் நண்பர் திரு. சித்திக் வாயிலாக பெற்ற மாணவச்செல்வங்களுக்கான விழிப்புணர்வு மின் அஞ்சலை தங்களுடன் பகிர்ந்துக்கொள்கின்றேன். என்னுடைய மாணவப்பருவத்தில் இதுபோன்ற தகவல்  கிடைத்திருந்திருந்தால் என் தலையெழுத்தே மாறியிருந்தாலும். வியப்பிற்கில்லை!  அட அதனாலென்ன.. இன்றைய சந்ததியினருக்காகவது தகவல் புரட்சி மூலம் விடை கிடைத்தது கண்டு மகிழ்கின்றேன்.
 
 
ஐஐடியில் பொறியியல் (B.E/B.Tech) படிக்க IIT-JEE 2011

 

அதிக பணம் கொட்டி கொடுத்து தனியார் கல்லுரிகளில் மாணவரகளை B.E/B.Tech சேர்த்தாலும் தரமான கல்வி இல்லை, படித்து முடித்த பிறகு வேலை இல்லை, வேலை கிடைத்தாலும் படித்ததற்க்கான வேலை கிடைக்கவில்லை என்ற குறைபாடு சமுதாயத்தில் அதிகமாகவே உள்ளது. கற்பனை செய்துபாருங்கள் : மிக குறைந்த செலவில் உலக தரத்தில் நல்ல தரமான கல்வி, கல்வி கட்டணம் (பீஸ்) கட்ட வசதி இல்லாத மாணவர்களுக்கு உடனடியாக இலவச கல்வி உதவி தொகை, படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை, இலவசமாக வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்பு, கேட்க எவ்வளவு நன்றாக இருக்கின்றது. இது கற்பனை அல்ல இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருக்கின்றது. அதுதான் மத்திய அரசால் நடத்தப்படும் சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள ஐஐடி.


தனியார் கல்லூரிகளை விட இங்கு கல்வி கட்டணம் குறைவு, வசதி இல்லாத மாணவர்களுக்கு மத்திய அரசின் இலவச கல்வி உதவி தொகை (ஐஐடி-யில் படிக்கும் முஸ்லீம் மாணவர்களுக்கு மத்திய அரசு சிறப்பான இலவச கல்வி உதவி திட்டத்தை அமல்படுத்தி வருகின்றது). இங்கு உலக தரத்தில் கல்வி கற்று கொடுக்கப்படுகின்றது. படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் சம்பளத்தில் வேலை (தற்போது ஐஐடி-யில் படிக்கும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான மாத சம்பளம் ரூ.1,00,000 இருந்து ரூ.30 ஆயிரம் வரை). மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள்.

இங்கு படிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

இங்கு சேர மத்திய அரசு பல்வேறு நுழைவு தேர்வுகளை நடந்துகின்றது, அந்த நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் போதும்,

இட ஒதுக்கீடு : ஐஐடி-யில் (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கா 27% இட ஒதுக்கீடு உள்ளது.

IIT-JEE 2011 : தற்போது ஐஐடி-யில் (IISc-யையும் சேர்த்து) +2 படித்த மாணவர்கள் 2011 ஆண்டு பொறியியல் படிப்பிற்க்கு சேர்வதற்க்கான நுழைவு தேர்வின் (IIT-JEE 2011) விண்ணப்பம் விணியோகிகப்பட்டு வருகின்றது. (தேர்வை பற்றிய விபரங்கள் அட்டவணை இடம் பெற்றுள்ளது). மேலும் விபரம் http://www.jee.iitm.ac.in/ இந்த இணையதளத்தில் உள்ளது

யார் இந்த தேர்வை எழுத முடியும்?


2010-ல் தேர்சி பெற்ற மாணவர்கள் மற்றும் 2011-ல் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம். மாணவர் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே IIT-JEE தேர்வு எழுத முடியும். +2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள், +2 வொகேஷனல் (vocational) குரூப் படிக்கும் மாணவர்கள். 3 ஆண்டு டிப்ளமோ படித்த மாணவர்கள். +2-வில் குறைந்த்தது 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இது வருடா வருடம் நடக்கும் தேர்வாகும். எனவே `அந்த பாட பகுதிகளை நன்றாக ஆராய்ந்து படித்தாலே போதும். மேலும் CBSC-யின் +2 ஆம் வகுப்பு புத்தகங்கள் வாங்கிபடித்தால் இது போன்ற தேர்வுகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். கடந்த 5 ஆண்டிற்களுக்கான் கேள்வித்தாள்கள்களுடன் விடைகளும் இத்தளத்திலேயே http://www.jee.iitm.ac.in/oldqp.php
தொகுத்தளித்து உள்ளனர். இதனை PDF வடிவில் தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இது தேர்வெழுத இருக்கும் மாணவர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாகும்.

இந்த கேள்விதாள்கள், புத்தகங்கள் முக்கிய புத்தக கடைகளில் கிடைக்கும். குறிப்பாக சென்னை மூர்மார்க்கெட் பகுதியில் உள்ள புத்தக கடைகளில் கிடைக்கும்.

IIT-JEE 2011 தேர்வை பற்றிய விபரம்

விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி :
டிசம்பர் 20, 2010  (ஆன்லைனில் சமர்பிக்க கடைசி தேதி டிசம்பர் 15, 2010)
தேர்வு நடைபெறும் தேதிஏப்ரல் – 10, 2011
இரண்டு தேர்வுகள் (காலை மற்றும் மாலை)
தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதிமே – 25, 2011

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Chairmen,
JEE, IIT Madras, Chennai - 600036
Phone : 044-22578220

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் :சென்னை ஐ.ஐ.டி மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள இந்தியன் வங்கி கிளைகள்

இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு: http://jee.iitm.ac.in/online2011/

விண்ணப்பத்தின் விலை :Rs.1,000,  (ஆன்லைனில் சமர்பிக்கும் விண்ணப்பம் ரூ. 900)

வயது வரம்பு: அக்டோபர் 1, 1986 ஆம் ஆண்டிற்க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்


வாழ்த்துக்கள்!


Download As PDF

வியாழன், 2 டிசம்பர், 2010

அல்லல் படாமல் அங்காடிகளில் பொருட்களை வாங்குவது எப்படி?

How to do Shopping?

என்னக் கொடுமை சரவணன், இதற்குக் கூட ஒரு பதிவா!? என நீங்கள் புலம்ப இருப்பது எனக்குப்புரிகின்றது.பதிவு போட செய்தி ஏதுமின்றி ஏதேதோ எழுதி மொக்கையைப் போடுகின்றானோ என எண்ண வேண்டாம். கடைக்கு கடைக்கு ஒரே பொருள் பல்வேறு விலைகளில் விற்கப்படுகின்றன. சில விற்பனையகத்தில் சிறப்புத்தள்ளுபடியும், பல விற்பனையங்களில் பெயரளவில் மட்டுமே தள்ளுபடி என விளம்பரமிடுவதும் கண்கூடான உண்மை. இதில் சேமிப்பு அல்லது விரயம் என்பது சிறு தொகையாய் இருக்கலாம்.  ஆனால், தான் ஏமாற்றப்பட்டுவிட்டோமே என்கின்ற மனவருத்தமும் /உளைச்சலும் தவிர்க்கமுடியாதது.

 நான் தற்போது சவூதி அரேபியாவில் இருப்பதால் பல்பொருள் அங்காடிக்கு செல்லுமுன்னரே அவ் விற்பனையகத்தின் வலைத்தளத்தில் சென்று நமக்குத் தேவையான பொருட்கள் என்னென்ன விலையில் உள்ளன என்றும் சிறப்புத் தள்ளுபடியில் கிடைக்கும் பொருட்களின் விவரங்களையும் அறிந்துக் கொள்வேன். சில நேரங்களில் மின்னணு சாதனங்கள், விளையாட்டு பொம்மைகள் அல்லது கருவிகள், பரிசுக்குகந்த பொருள்கள் போன்றவை எதிர்பாராத விலையில் மிகவும் குறைவாகக் கிடைக்கும். சில விற்பனையகங்களின் அவர்களுக்கென்றே அதிரடிச்சலுகைகளை உற்பத்தியாளர்களே Promotional Offer  எனும் பெயரில் தருவதுண்டு.  இருப்பிலுள்ள பொருட்களை கழிப்பதற்காகவும் சில நேரங்களில் அதிரடிக் கழிவுகளை (clcearnce Sale!)  குறிப்பிட்ட சில நாட்களுக்கு கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. நாம் நம் நண்பர்களின் பிறந்த நாள், திருமண நாள், விசேஷமான சில சிறப்பு நாட்களுக்கு பரிசளிப்பது வாடிக்கையான விஷயமே. நாம் விரும்பும் பொருளின் விலை மலிவாகக்  கிடைக்கின்ற போதே அதனை முன் கூட்டியே வாங்கி வைத்துக்கொண்டால், விருந்து அழைப்புகளின் போது என்ன பரிசு வாங்குவது என பரபரக்கவும் வேண்டாம்!   நேரத்தை விரயமும் செய்யவும் வேண்டாம்! அதுமட்டுமின்றி  நமது பட்ஜெட்டிற்குள்ளேயே சிறந்த பொருட்களை பரிசாகத்தரவும் இயலுமல்லவா!!

இது ஏதோ சவூதிக்கு மட்டும் பொருந்தும் ஆலோசனையல்ல. உதாரணமாக இந்தியாவிலிருக்கும் நீங்கள் அலைபேசி வாங்க விழைகின்றீர்கள் என்றால் 'யுனிவர்ஸல், பூர்விகா'போன்ற விற்பனையகங்களின் இணையத்தளங்கள் மூலம் விலை மட்டுமல்ல, வாங்க விழையும் பொருளின் செயல் திறனையும் மற்றும் வடிவமைப்பையும் ஒப்பிடலாம்.

இது போல நீங்களும் அங்காடிகளுக்குச் செல்லுமுன்னரே விலையையும் தாங்கள் விரும்பும் பொருள் கிடைக்கும் தகவல்களையும் வீட்டிலிருந்தோ அல்லது அலுவலகத்திலிருந்தோ இணையம் வாயிலாக அறிந்து பின்னர் வாங்க முனைவதன் மூலம் பெரும்பயன்பெறலாமே!


 சவூதியிலுள்ள சிலஅங்காடிகளும், அதற்குரிய வலைத்தளங்களும்:

எண்இணையதள முகவரி சிறப்பம்சம்
1http://www.carrefourksa.com/index.aspHypermarket
2http://saudi.luluhypermarket.comHypermarket
3http://panda.com.sa/english/Hypermarket
4http://www.saco-ksa.com/Hardware, Health care, Home appliances, Toys…
5http://www.farm.com.sa/Grocerry, home appliances, toys…
6http://www.jarirbookstore.com/Electronics, Stationaries, Books, Toys…
7http://www.albaha.com/Electronics and Home appliances
8http://www.extrastores.com/Electronics and Home appliances
9http://www.cityplazasa.com/home.aspxBaby shop, Life Style, Leather goods, Furnitures…
Download As PDF