வியாழன், 2 டிசம்பர், 2010

அல்லல் படாமல் அங்காடிகளில் பொருட்களை வாங்குவது எப்படி?

How to do Shopping?

என்னக் கொடுமை சரவணன், இதற்குக் கூட ஒரு பதிவா!? என நீங்கள் புலம்ப இருப்பது எனக்குப்புரிகின்றது.பதிவு போட செய்தி ஏதுமின்றி ஏதேதோ எழுதி மொக்கையைப் போடுகின்றானோ என எண்ண வேண்டாம். கடைக்கு கடைக்கு ஒரே பொருள் பல்வேறு விலைகளில் விற்கப்படுகின்றன. சில விற்பனையகத்தில் சிறப்புத்தள்ளுபடியும், பல விற்பனையங்களில் பெயரளவில் மட்டுமே தள்ளுபடி என விளம்பரமிடுவதும் கண்கூடான உண்மை. இதில் சேமிப்பு அல்லது விரயம் என்பது சிறு தொகையாய் இருக்கலாம்.  ஆனால், தான் ஏமாற்றப்பட்டுவிட்டோமே என்கின்ற மனவருத்தமும் /உளைச்சலும் தவிர்க்கமுடியாதது.

 நான் தற்போது சவூதி அரேபியாவில் இருப்பதால் பல்பொருள் அங்காடிக்கு செல்லுமுன்னரே அவ் விற்பனையகத்தின் வலைத்தளத்தில் சென்று நமக்குத் தேவையான பொருட்கள் என்னென்ன விலையில் உள்ளன என்றும் சிறப்புத் தள்ளுபடியில் கிடைக்கும் பொருட்களின் விவரங்களையும் அறிந்துக் கொள்வேன். சில நேரங்களில் மின்னணு சாதனங்கள், விளையாட்டு பொம்மைகள் அல்லது கருவிகள், பரிசுக்குகந்த பொருள்கள் போன்றவை எதிர்பாராத விலையில் மிகவும் குறைவாகக் கிடைக்கும். சில விற்பனையகங்களின் அவர்களுக்கென்றே அதிரடிச்சலுகைகளை உற்பத்தியாளர்களே Promotional Offer  எனும் பெயரில் தருவதுண்டு.  இருப்பிலுள்ள பொருட்களை கழிப்பதற்காகவும் சில நேரங்களில் அதிரடிக் கழிவுகளை (clcearnce Sale!)  குறிப்பிட்ட சில நாட்களுக்கு கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. நாம் நம் நண்பர்களின் பிறந்த நாள், திருமண நாள், விசேஷமான சில சிறப்பு நாட்களுக்கு பரிசளிப்பது வாடிக்கையான விஷயமே. நாம் விரும்பும் பொருளின் விலை மலிவாகக்  கிடைக்கின்ற போதே அதனை முன் கூட்டியே வாங்கி வைத்துக்கொண்டால், விருந்து அழைப்புகளின் போது என்ன பரிசு வாங்குவது என பரபரக்கவும் வேண்டாம்!   நேரத்தை விரயமும் செய்யவும் வேண்டாம்! அதுமட்டுமின்றி  நமது பட்ஜெட்டிற்குள்ளேயே சிறந்த பொருட்களை பரிசாகத்தரவும் இயலுமல்லவா!!

இது ஏதோ சவூதிக்கு மட்டும் பொருந்தும் ஆலோசனையல்ல. உதாரணமாக இந்தியாவிலிருக்கும் நீங்கள் அலைபேசி வாங்க விழைகின்றீர்கள் என்றால் 'யுனிவர்ஸல், பூர்விகா'போன்ற விற்பனையகங்களின் இணையத்தளங்கள் மூலம் விலை மட்டுமல்ல, வாங்க விழையும் பொருளின் செயல் திறனையும் மற்றும் வடிவமைப்பையும் ஒப்பிடலாம்.

இது போல நீங்களும் அங்காடிகளுக்குச் செல்லுமுன்னரே விலையையும் தாங்கள் விரும்பும் பொருள் கிடைக்கும் தகவல்களையும் வீட்டிலிருந்தோ அல்லது அலுவலகத்திலிருந்தோ இணையம் வாயிலாக அறிந்து பின்னர் வாங்க முனைவதன் மூலம் பெரும்பயன்பெறலாமே!


 சவூதியிலுள்ள சிலஅங்காடிகளும், அதற்குரிய வலைத்தளங்களும்:

எண்இணையதள முகவரி சிறப்பம்சம்
1http://www.carrefourksa.com/index.aspHypermarket
2http://saudi.luluhypermarket.comHypermarket
3http://panda.com.sa/english/Hypermarket
4http://www.saco-ksa.com/Hardware, Health care, Home appliances, Toys…
5http://www.farm.com.sa/Grocerry, home appliances, toys…
6http://www.jarirbookstore.com/Electronics, Stationaries, Books, Toys…
7http://www.albaha.com/Electronics and Home appliances
8http://www.extrastores.com/Electronics and Home appliances
9http://www.cityplazasa.com/home.aspxBaby shop, Life Style, Leather goods, Furnitures…
Download As PDF