ஞாயிறு, 19 டிசம்பர், 2010

சொல்லாமல் கொல்லும் சர்க்கரையை இல்லாமல் செய்யும் வெண்டை!

நிழற்படம்:   azhkadalkalangiyam.blogspot.com

"சொல்லாமல் கொல்லும் சர்க்கரையை இல்லாமல் செய்யும் வெண்டை!" யின் மகத்துவம் குறித்து எழுத்தாளர். திரு. ரா.கி. இரங்கராஜன் அவர்களுக்கு அவரின் நண்பர் திரு. பி.எஸ். பஞ்சநாதன் அவர்கள் இயற்கை மற்றும் எளிய பாட்டி வைத்தியம் ஒன்றை பரிந்துரை செய்துள்ளார்.   பக்க விளைவுகளற்ற, பணவிரயமின்றி அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் வெண்டைக்காயினை பின்வருமாறு உண்டதால்  இரண்டு வாரங்களிலேயே 60மில்லி கிராம் வரை அவருக்கும், 30 கிராம் வரை அவரது துணைவியாருக்கும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்ததுக் கண்டு வியந்து அவர் தான் பெற்ற இன்பத்தை பெறுக இவ்வையகம் என அதன் பயன்பாட்டில் அகமகிழ்ந்து தனது நண்பர்களுக்கும் ஊடகம் வாயிலாக மக்களுக்கும் தெரிவித்து பயனடையவும் செய்தார். 

செய்முறை:
"ஒரு வெண்டைக்காயை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் தலையையும், நுனியையும் வெட்டி எறிந்துவிடுங்கள். மீதியுள்ள காயை இரண்டு அல்லது மூன்று துண்டங்களாக நறுக்கிக் கொள்ளுங்கள். இரவு படுக்கப் போகும் முன் அரைடம்ளர் தண்ணீரில் அதை ஊறப்போடுங்கள். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் முதல் வேலையாக வெண்டைக்காய் துண்டங்களை வெளியே எடுத்துப்போட்டுவிட்டு அந்த தண்ணீரைக் குடியுங்கள். (குறைந்தது ஒரு மணி நேரம் காபி, டீ வேறு எதுவும் அருந்த வேண்டாம்.) "

இதைப் படிப்பவர்கள் பின்பற்றிப் பாருங்கள். பலன் இல்லை என்றால் விட்டுவிடுங்கள். செலவே இல்லாத வைத்தியம். ஆனால்  ஒன்று, வெண்டைக்காய்த் தண்ணீர் ஆகையால் வாயில் அரை நிமிடம் கொளகொள என்றிருக்கும். கூடவே ஒரு மடங்கு சாதா தண்ணீர் குடித்தால் அந்த உணர்வும் அகன்றுவிடும். அல்லது ஒரு திராட்சைப் பழத்தை மெல்லலாம்.  இந்த வெண்டைக்காய்த் தண்ணீரை எவ்வளவு நாள் அருந்தி வரவேண்டும்?எப்போது நிறுத்துவது? தற்சமயம் சாப்பிட்டு வரும் மாத்திரைகளை நிறுத்தலாமா?ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து விட்டால் அபாயம் ஆயிற்றே? இப்படி பல சந்தேகங்கள் எழலாம்.  மாதத்திற்கொருமுறை ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுவது அவசியம். அந்த ரிபோர்ட்டைத் தகுந்த டாக்டரிடம் காட்டுங்கள். வெண்டைக்கை வைத்தியத்தைத் தொடரலாமா?அல்லது தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளலாமா? என அவரிடம் கேளுங்கள். அவர் சொல்கிறபடி செய்யுங்கள் - என அறிவுறுத்தியுள்ளார் திரு.ரா.கி.ர அவர்கள்.


இது அனுபவ உண்மை!:  ஜூபைலில் என்னுடன் பணிபுரிந்த  நண்பர் திரு. ஒருவர் அவரின் தாயாருக்கு பரிந்துரை செய்தார். விளைவு: அவரின் மருத்துவரே  வியந்துள்ளார்.  கடந்த ஒரு வருடமாக நிதமும்  அவர் வெண்டைக்காய் வைத்தியத்தை தொடர்வதால் மீண்டும் மாத்திரை எடுக்கும் சூழல்  இதுவரை வரவில்லை. 120 மில்லி கிராம் அளவிற்குள் கட்டுபட்டுள்ளதால் சர்க்கரைக்கான மருந்தை தற்காலிகமாக உண்பதை நிறுத்திக்கொள்ளும்படி கூறியதோடு மறவாமல் மாதமொருமுறை இரத்தப் பரிசோதனையைத் தொடர்ந்திட அறிவுறுத்தியுள்ளார்.  

 வாழ்க நலமுடன்!

Download As PDF

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

i feel good, ladies finger reduces sugar in blood

colins

curesure4u சொன்னது…

இதற்க்கு எந்த வித ஆதாரமும் இல்லை ...சிலருக்கு வேலை செய்கிறது என்பதால் அதை எல்லாரும் உபயோகிக்கும் போது கவனம் தேவை ..
உங்கள் கட்டுரைகள் நன்றாக உள்ளது ..பாராட்டுக்க்கள் ..

நெல்லி. மூர்த்தி சொன்னது…

தங்களின் "வெண்டை" குறித்த கருத்து உண்மையாகவும் இருக்கலாம். எழுத்தாளர் ரா.கி. ர அவர்கள் மட்டுமல்ல, நேரடியாகவே என் நண்பரின் தாயார் பலன் அடைந்ததால் இதனை வலைத்தளம் மூலம் நம்மவர்களுடன் பகிர்கின்றேன்.

ஆயுர்வேதமருத்துவத்தில் நிபுணரான தாங்கள், அதனை உலகறியச் செய்ய வலைத்தளத்தின் வாயிலாகவும், இலவச ஆலோசனைகளை வழங்கியும் தொண்டாற்றுவது கண்டு சக தமிழனாகவும், ஆயுர்வேத மருத்துவத்தின் ஆர்வலனாகவும் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
தங்களின் பின்னூட்டத்திற்கும், பாராட்டிற்கும் நன்றிகள்!