சனி, 18 டிசம்பர், 2010

மூடுபனி மட்டுமல்ல, புழுதிப்புயலும் ஆபத்தே! - பாதுகாப்புடன் ஓட்டுக

வளைகுடாவில் பெரும்பாலான விஷயங்கள் நம் தமிழகத்துடன் ஒப்பிடுகையில் வித்தியாசமாகவே இருக்கும். நாம் எழுதுவதோ அல்லது படிப்பதோ இடமிருந்து வலமாக இருக்கும். ஆனால் இங்கு வலமிருந்து இடமாக இருக்கும்.  அது போல பருவநிலைகளும். பனிப்பொழிவு என்பது மார்கழி மாதக்காலக் குளிரினைத் தான் குறிப்பிடுவோம். வட இந்தியாவில் இருப்பது போல் உறைபனி நிலைக்கோ அல்லது பனிப்பொழிவினையோ பெற்றதில்லை. மூடுபனி கூட சொல்லும்படி கடுமையாக பாதித்ததில்லை. ஆனால் இங்கு அப்படியில்லை இங்கு வாகனங்களில் செல்லும் போது சில இடங்களில் எச்சரிக்கைப் பலகைகள் நமது விழிப்புணர்விற்காக நிறுத்தப்பட்டிருக்கும். அது போன்ற சமயங்களில் அதிகப் பட்சம் 15 கி.மீ  வரை தான் வண்டியின் வேகம் இருக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருக்கும். சாதாரணமாக 120 கி.மீ. - 150 கி.மீ என வாகனத்தை இயக்கி பழகிக் கொண்டவர்கள் திடீரென 15 கி.மீ. க்கு மாறவேண்டுமெனில் மனம் மறுதலிக்கும். ஆதலால் வாகனங்கள் விபத்தில் சிக்கும். இதில் நம்மவர்களும் அரேபியர்களைப்போன்ற மனப்பான்மைக்கு மாறிவிடுவது தான் வருத்தத்துக்குரிய விஷயம்.


கடந்த 13ந் தேதி தமாம் இரண்டாம் தொழிற்சாலை வளாகத்திற்கு செல்வதற்கான நெடுஞ்சாலையினில் திடிரென ஏற்பட்ட புழுதிப் புயலால் ஏற்பட்ட ஒரே நேரத்தில் பனிரெண்டிற்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்குண்ட விபத்தினைக் காண்க!.


என்னதான் நாம் விழிப்புணர்வுடன் இருப்பினும், நமக்கு முன்னரும் பின்னரும் உள்ள நபர்கள் சரியாக இல்லாத பட்சத்தில் நாமும் விபத்தினிலிருந்து தப்பிப்பது கடினமே! 

சாதாரணப் புழுதி எப்படியெல்லாம் சாரதிகளை சாய்த்துள்ளது என்பதைக் கண்டு விழிப்படைக!. பாதுகாப்புடன் இனி உங்கள் மகிழ்வுந்துகளை ஓட்டுவீர் என நம்புவோமாக!


(இணையத்திலிருந்து நிழற்படங்களை அனுப்பி உதவிய நண்பர் திரு. கணேஷ் அவர்களுக்கு நன்றி!) Download As PDF

2 கருத்துகள்:

பனித்துளி சங்கர் சொன்னது…

விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் பதிவும் புகைப்படங்களும் சிறப்பு

நெல்லி. மூர்த்தி சொன்னது…

நன்றி பனித்துளி சங்கர் அவர்களே! தங்களின் பின்னூட்டம் எமக்கு ஊக்கத்தினைத் தருகின்றது.