சனி, 4 டிசம்பர், 2010

எளியத் தொகையினில் உலகத்தரம் வாய்ந்தக் பொறியியற் கல்வி...

Be prepare to get international standard Engineering studies (IIT) with Less or Free of Cost!


கற்பதில் ஆர்வமும், கல்வியில் திறனும் கொண்டவரா நீங்கள்... உலகத்தரம் வாய்ந்த பொறியியற்கல்வியினை எளியத்தொகையினில் அல்லது இலவசமாக (அரசு விதிமுறைகளுக்குட்பட்டது) கற்க கவலையை விடுங்கள். உங்கள் வருங்காலத்தைப் ஒளிமயமாக்க மத்திய அரசினால் 15 நகரங்களில்  இயங்கும் சேர்வதற்கு நுழைவுத்தேர்வெழுத தயாராகுங்கள்.

அண்மையில் "ரியாத் தமிழ் சங்கக் குழும"த்திலிருந்து திரு. அஷ்வக் அவர்கள், அவரின் நண்பர் திரு. சித்திக் வாயிலாக பெற்ற மாணவச்செல்வங்களுக்கான விழிப்புணர்வு மின் அஞ்சலை தங்களுடன் பகிர்ந்துக்கொள்கின்றேன். என்னுடைய மாணவப்பருவத்தில் இதுபோன்ற தகவல்  கிடைத்திருந்திருந்தால் என் தலையெழுத்தே மாறியிருந்தாலும். வியப்பிற்கில்லை!  அட அதனாலென்ன.. இன்றைய சந்ததியினருக்காகவது தகவல் புரட்சி மூலம் விடை கிடைத்தது கண்டு மகிழ்கின்றேன்.
 
 
ஐஐடியில் பொறியியல் (B.E/B.Tech) படிக்க IIT-JEE 2011

 

அதிக பணம் கொட்டி கொடுத்து தனியார் கல்லுரிகளில் மாணவரகளை B.E/B.Tech சேர்த்தாலும் தரமான கல்வி இல்லை, படித்து முடித்த பிறகு வேலை இல்லை, வேலை கிடைத்தாலும் படித்ததற்க்கான வேலை கிடைக்கவில்லை என்ற குறைபாடு சமுதாயத்தில் அதிகமாகவே உள்ளது. கற்பனை செய்துபாருங்கள் : மிக குறைந்த செலவில் உலக தரத்தில் நல்ல தரமான கல்வி, கல்வி கட்டணம் (பீஸ்) கட்ட வசதி இல்லாத மாணவர்களுக்கு உடனடியாக இலவச கல்வி உதவி தொகை, படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை, இலவசமாக வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்பு, கேட்க எவ்வளவு நன்றாக இருக்கின்றது. இது கற்பனை அல்ல இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருக்கின்றது. அதுதான் மத்திய அரசால் நடத்தப்படும் சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள ஐஐடி.


தனியார் கல்லூரிகளை விட இங்கு கல்வி கட்டணம் குறைவு, வசதி இல்லாத மாணவர்களுக்கு மத்திய அரசின் இலவச கல்வி உதவி தொகை (ஐஐடி-யில் படிக்கும் முஸ்லீம் மாணவர்களுக்கு மத்திய அரசு சிறப்பான இலவச கல்வி உதவி திட்டத்தை அமல்படுத்தி வருகின்றது). இங்கு உலக தரத்தில் கல்வி கற்று கொடுக்கப்படுகின்றது. படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் சம்பளத்தில் வேலை (தற்போது ஐஐடி-யில் படிக்கும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான மாத சம்பளம் ரூ.1,00,000 இருந்து ரூ.30 ஆயிரம் வரை). மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள்.

இங்கு படிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

இங்கு சேர மத்திய அரசு பல்வேறு நுழைவு தேர்வுகளை நடந்துகின்றது, அந்த நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் போதும்,

இட ஒதுக்கீடு : ஐஐடி-யில் (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கா 27% இட ஒதுக்கீடு உள்ளது.

IIT-JEE 2011 : தற்போது ஐஐடி-யில் (IISc-யையும் சேர்த்து) +2 படித்த மாணவர்கள் 2011 ஆண்டு பொறியியல் படிப்பிற்க்கு சேர்வதற்க்கான நுழைவு தேர்வின் (IIT-JEE 2011) விண்ணப்பம் விணியோகிகப்பட்டு வருகின்றது. (தேர்வை பற்றிய விபரங்கள் அட்டவணை இடம் பெற்றுள்ளது). மேலும் விபரம் http://www.jee.iitm.ac.in/ இந்த இணையதளத்தில் உள்ளது

யார் இந்த தேர்வை எழுத முடியும்?


2010-ல் தேர்சி பெற்ற மாணவர்கள் மற்றும் 2011-ல் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம். மாணவர் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே IIT-JEE தேர்வு எழுத முடியும். +2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள், +2 வொகேஷனல் (vocational) குரூப் படிக்கும் மாணவர்கள். 3 ஆண்டு டிப்ளமோ படித்த மாணவர்கள். +2-வில் குறைந்த்தது 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இது வருடா வருடம் நடக்கும் தேர்வாகும். எனவே `அந்த பாட பகுதிகளை நன்றாக ஆராய்ந்து படித்தாலே போதும். மேலும் CBSC-யின் +2 ஆம் வகுப்பு புத்தகங்கள் வாங்கிபடித்தால் இது போன்ற தேர்வுகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். கடந்த 5 ஆண்டிற்களுக்கான் கேள்வித்தாள்கள்களுடன் விடைகளும் இத்தளத்திலேயே http://www.jee.iitm.ac.in/oldqp.php
தொகுத்தளித்து உள்ளனர். இதனை PDF வடிவில் தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இது தேர்வெழுத இருக்கும் மாணவர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாகும்.

இந்த கேள்விதாள்கள், புத்தகங்கள் முக்கிய புத்தக கடைகளில் கிடைக்கும். குறிப்பாக சென்னை மூர்மார்க்கெட் பகுதியில் உள்ள புத்தக கடைகளில் கிடைக்கும்.

IIT-JEE 2011 தேர்வை பற்றிய விபரம்

விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி :
டிசம்பர் 20, 2010  (ஆன்லைனில் சமர்பிக்க கடைசி தேதி டிசம்பர் 15, 2010)
தேர்வு நடைபெறும் தேதிஏப்ரல் – 10, 2011
இரண்டு தேர்வுகள் (காலை மற்றும் மாலை)
தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதிமே – 25, 2011

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Chairmen,
JEE, IIT Madras, Chennai - 600036
Phone : 044-22578220

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் :சென்னை ஐ.ஐ.டி மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள இந்தியன் வங்கி கிளைகள்

இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு: http://jee.iitm.ac.in/online2011/

விண்ணப்பத்தின் விலை :Rs.1,000,  (ஆன்லைனில் சமர்பிக்கும் விண்ணப்பம் ரூ. 900)

வயது வரம்பு: அக்டோபர் 1, 1986 ஆம் ஆண்டிற்க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்


வாழ்த்துக்கள்!


Download As PDF