சனி, 28 மே, 2011

தேர்தலில் மட்டுமல்ல தேர்வினிலும் முதலிடம் மகளீரே!இது மகளீர்களுக்கான சிறப்புக்காலம் போலும்! அரசியலில்  மட்டுமல்ல அரசுத்தேர்வினிலும், மெட்ரிக் தேர்விலும் முதலிடத்தினை மகளீரே கைப்பற்றியுள்ளனர். தனி நபர் சாதனையாக இன்றி இம்முறை வரலாறுக் காணாத அளவில் முதலிடத்தினை ஐவர் அரசுப் பாடத்திட்டத்தினிலும், மூவர் மெட்ரிக் பாடத்திட்டத்தினிலும் வெற்றியைப் பகிர்ந்துக் கொண்டனர்.

சிறப்பம்சம்சங்கள்:
 
  • இதுவரை இல்லாத சாதனையாக மாநிலம் முழுவதும் முதலிடத்தினை 5 பேரும், இரண்டாவது இடத்தினை 11 பேரும், மூன்றாவது இடத்தினை 24 பேரும் ஆக 40 மாணவ, மாணவியர் முதல் மூன்று இடங்களைப் பகிர்ந்துள்ளனர்.
  • நாற்பது மாணவர்களில் 27 பேர் மாணவிகள். 
  • 5 மாணவர்களைத் தவிர மற்ற 35 மாணவர்களும் சென்னையினைச் சாராதவர்கள். 
  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூட மாணவர்கள் கணிசமான இடம் பெற்றது, தனியார்க் கல்வி தான் சிறந்தக் கல்வி என்ற மாயையினை உடைத்தெறிந்துள்ளது.
  • தேர்வெழுதியவர்கள்: 8 லட்சத்து 38 ஆயிரத்து 165 பேர் , வென்றவர்கள்: 7 லட்சத்து 14 ஆயிரத்து 786 பேர் 
  • தேர்ச்சி விகிதம்...தமிழக அரசுப்பாடத்திட்டம் 85.3%, மெட்ரிக் 95.9%, ஆங்கிலோ-இந்தியன் 95.50%பேரும், ஓ.எஸ்.எல்.சி. 94.4% 
  • நூற்றுக்கு நூறு... கணிதத்தில் 12,532 பேர் - இது கடந்த ஆண்டை (2,399) விட ஏறத்தாழ 5 மடங்கு கூடுதல், அறிவியலில் 3,677 பேர் - இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 2 மடங்கு கூடுதலாகும். சமூக அறிவியல் பாடத்தில் 756 பேர் சதமடித்துள்ளனர்.
மாணவர்களின் வெற்றிக்கு உழைத்திட்ட ஆசிரியர்களுக்கும், அவர்களது நிர்வாகத்தினருக்கும், கிராம மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் ஒரே கல்வி ஆதாரமான அரசுப் பள்ளிகளில் எத்தகைய அரசியிலிற்க்கும் சிக்காது உழைத்திட்ட ஆசிரியர்களுக்கும் அதன் நிர்வாகத்தினருக்கும், தங்கள் மக்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்!
10ம் வகுப்பு: முதல் 3 இடங்களை பிடித்த 40 மாணவ மாணவிகளின் பெயர் மற்றும் பள்ளி விபரம்
 
500 க்கு 496 மதிப்பெண்கள் பெற்ற 5 மாணவிகள் விவரம் வருமாறு:


1. எம்.நித்யா, எஸ்.எச். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிப்புத்தூர்.

2. எஸ். ரம்யா, ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபி செட்டிப்பாளையம்.

3. எஸ்.சங்கீதா, முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, பெரியயேரி, சேலம்.

4. எம்.மின்னலாதேவி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு.

5. ஆர்.ஹரிணி (496), அவர்லேடி மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர், சென்னை.500க்கு 495 மதிப்பெண்கள் பெற்ற 11 மாணவ மாணவிகள் விவரம் வருமாறு:

1. ஏ.சதாம் உசேன், முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, மேலப்பாளையம்.

2. வி.பாக்யஸ்ரீ, ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.

3. பி.அருண்ராஜா, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, அபிராம், பரமக்குடி.

4. ஜெ.ஜெயப்பிரியா, எஸ்.எச்.என். இதெல்ஹார்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சாத்தூர்.

5. டி.ஹரிபாரதி, நாடார் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்.

6. எம்.பொன்மணி, எஸ்.ஆர்.பகத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்.

7. என்.எம்.கார்த்திக், புனிதமேரி மேல்நிலைப்பள்ளி, மதுரை.

8. ஏ.சுபலட்சுமி, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, செல்ல பெருமாள்பேட்டை, புதுச்சேரி.

9. வி.சீனிரதி, அரசு மேல்நிலைப்பள்ளி, கவரப்பேட்டை, சென்னை.

10. எம்.புவனா, விஜயந்தா மேல்நிலைப்பள்ளி, ஆவடி, சென்னை.

11. ஆர்.சுஷ்மிதா, பென்டிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி, சென்னை.500க்கு 494 மதிப்பெண்கள் பெற்ற 24 மாணவ மாணவிகள் விவரம் வருமாறு:

1. நிம்ருதா (494), செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோயில்.

2. கே.லட்சுமி பிரியா (494), எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, வடசேரி, நாகர்கோயில்.

3. ஜே. உமா (494), எஸ்.எச்.என். எதேல் ஹார்வி மேல்நிலைப்பள்ளி, சாத்தூர், அருப்புக்கோட்டை.

4. லலித் செல்லப்பா கார்ப்பென்டர்(494), பி.ஏ.சி.எம்., மேல்நிலைப் பள்ளி, ராஜபாளையம்.

5. குங்குமால்யா (494), எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி, உடுமலைப்பேட்டை.

6. பி.எம்.இந்து (494), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கவிந்தாபாடி, கோபிச்செட்டிப்பாளையம்.

7. எஸ்.ஹரிபிரபா (494), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்.

8. ஏ.ஷோபனா (494), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்

9. எஸ்.அசோக்குமார் (494), எஸ்.வி.வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, தாசம்பாளையம், கோபிச்செட்டிப்பாளையம்.

10. என்.லோகேஷ்குமார் (494), ஜி.வி. மேல்நிலைப் பல்ளி, மாசிலாபாளையம், சங்ககிரி.

11. கே.விக்னேஸ்வரி (494), வெற்றி விகாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கீரனூர், நாமக்கல்.

12. கே.காவ்யா (494), அரசு மேல்நிலைப்பள்ளி, காரிமங்கலம், தருமபுரி.

13. என்.செந்தில்குமார் (494), சேரன் மேல்நிலைப் பள்ளி, புன்னம்சத்திரம், கரூர்.

14. எஸ்.ஜெயப்பிரகாஷ் (494), ஈ.ஆர். மேல்நிலைப் பள்ளி, திருச்சி.

15. எம்.ஜோதீஸ்வரன் (494), ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி, திருச்சி.

16. எஸ்.காயத்ரி (494), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை.

17. ஏ.பவித்ரா தேவி (494), ஆக்சிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்.

18. சி.அபிநயா (494), கலைமகள் மேல்நிலைப் பள்ளி, வல்லம், தஞ்சாவூர்.

19. ஜே.ஷைனி (494), மௌன்ட் பார்க் மேல்நிலைப் பள்ளி, தியாகதுர்கம், விழுப்புரம்.

20. எம்.ஷபனா பேகம் (494), செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம்.

21. இ.தனசேகர் (494), டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.

22. எச்.சங்கீதா (494), செயின்ட் ஆன்டனி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம்.

23. ஜே.தாமோதரன் (494), பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, சென்னை

24. எஸ்.ஐயப்பன் (494), பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, சென்னை

மாணவசெல்வங்களே.. நீங்கள் வெறும் ஏட்டுச்சுரைக்காயாக, புத்தகப் புழுவாக இன்றி நடைமுறை வாழ்வினில், மற்றும் தேர்ந்தெடுக்கும் துறைகளில் நிபுணத்துவம் பெற வாழ்த்துக்கள்!


நன்றி: தினமணி, நக்கீரன்
Download As PDF

3 கருத்துகள்:

ஷர்புதீன் சொன்னது…

template of your blog is nice and good

Rathnavel சொன்னது…

எல்லா மாணவிகளுக்கும் வாழ்த்துக்கள்.
செல்வி நித்யா எங்கள் ஊர் - ஸ்ரீ வில்லிபுத்தூர் - விசேஷ வாழ்த்துக்கள்.
.

வலைச்சரம் சொன்னது…

அன்புடையீர் தங்களின் வலைப்பதிவு மிகுந்த பரிசீலனைக்குப் பின், தரம்வாய்ந்த ஒன்று என்பதால் வலைச்சரம் தானியங்கி திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது. தயையுடன் எமது இணையப்பட்டையை தங்களின் வலைத்தளத்தில் இணைக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

வலைச்சரத்துடன் தங்கள் பதிவுகள் சிறப்புற வாழ்த்துக்கள்.

இங்ஙனம்,

வலைச்சரம் நிர்வாகக் குழு.