புதன், 22 டிசம்பர், 2010

அப்ரைசல் என்றொரு அல்வா.... நொந்தவனின் சொந்தப் புலம்பல்!


நேற்றுவரை 'நீ வேறா?! நான் வேறா?!!' எனக் குழைந்து குழைந்து வேலை வாங்கும் என்னுடைய பாஸ் இன்று என்னவோ 'நீ யாரோ? நான் யாரோ?' என மாறி மாறி விரட்ட',  "எலிக்குஞ்சு ஏன் இன்னைக்கு  திடீருன்னு அம்மணமா ஓடுது?"ன்னு காரணம் புரியாம கர்ணம் அடிச்சு யோசிச்சுகிட்டிருந்தேன். (அதென்ன எலிக்குஞ்சு... அம்மணமா... யாரது, இதுக்கெல்லாம் அர்த்தம் கேட்டுகிட்டு...... இது பழமொழி நண்பா பழமொழி!,  அனுபவிக்கணும். ஆனா ஆராயக்கூடாது. அப்பாடா...  கமல் வாழ்க! பம்மல் கே சம்பந்தமும் வாழ்க!வாழ்க!!).

அப்போது என் சகதோழனும் வெளிறிய முகத்துடன் பேந்த பேந்தவென என முழித்தவாறு அவன் துறைத் தலைவனின் அறையிலிருந்து வெளிவந்தான். என்னடா சங்கதி என்று கேட்டேன். அதற்கு அவன் "அப்ரைசல் வந்தாலே போச்சு! காளை மாட்டிலிருந்து பாலைக் கறக்கச்சொன்னாலும் கறந்திடலாம். ஆனா இவனுங்க கொடுக்கற டார்கெட்டை (டார்ச்சரை) அச்சீவ் செய்வது ஆவற காரியமில்லப்பா! " என்றான்.


இது என் நண்பனுக்கு அவர் பாஸ் கொடுத்த டாஸ்க்


ஓ! இது தானா சங்கதின்னு என்னோட பாஸ் ஏன் இந்த கதகளி ஆடுனாருங்கறதுக்கான ஆதாரம் கண்டுபிடிச்சுட்டேன். அப்ப அப்ரைசலுக்காக என்னை  என் பாஸ் விடுத்த அழைப்பு (ஆப்பு?!) என்னை உஷாராக்கிடுச்சு.   தனியா போனா சிக்கல் தான்னு சகாவுடன் அவரை சந்திச்சேன். நாங்க கடுமையா இயந்திரம் போல உழைக்கறதாச் சொன்னேன்.





பிறகு என்னை மட்டும் தனியாக இருக்கச்சொல்லி, நான் எந்தெந்த மாதிரியெல்லாம் ஆணி புடுங்கினேன்னு புட்டு வச்சாரு.  (அருஞ்சொற்பொருள்:  ஆணி - வேலை)





அவராச் சொல்லாம நானா புடுங்கலாமுன்னு சொன்ன ஆணிகளை அக்கு வேறா ஆணி வேறா அலசனாரு.




அதுக்கப்புறம் எனக்கு கொடுத்தாரு பாருங்க அடுத்தாண்டு இலக்கு....





என்னச் செய்யறது... அததுக்கும் ஒரு இது (அதிர்ஷ்டம்) வேணுமுங்க!  வெந்து நொந்து வெளிய வந்த போது என் பாஸோட சொம்பு அவருடைய அறைக்கு நுழைஞ்சானுங்க.





கொஞ்ச நேரம் கழிச்சு அவன் திரும்பி வரும்போது அவன் முகத்துல பல்பு எரியறத பார்த்ததும் புரிஞ்சுப் போச்சு! 



இந்த வருடம் எனக்கு
அல்வாக் கொடுத்துட்டாங்கடாடோய்!


பி.கு.:  புண்பட்ட மனதை புகைப் (படம்) போட்டு ஆத்தறதுக்கு என் நண்பன் பிஜூ வர்கிஸ் (தற்போது கத்தாரில் உள்ளார்) அஞ்சல் நிழற்படங்கள்  உதவியாக இருந்தது. சிற்சில படங்கள் நெட்டிலே சுட்டது.  இவர்களுக்கு நன்றி!


(மேற்கண்ட புனைவு நகைச்சுவைக்காக ஆக்கமாக்கியது. எவருடைய மனதையும் புண்படுத்துவது நோக்கமல்ல. பல நொந்த உள்ளங்கள் சொந்தம் கொண்டாடினால் அதற்கு நாம் பொருப்பல்ல..)

Download As PDF

11 கருத்துகள்:

பனித்துளி சங்கர் சொன்னது…

அருமையான நகைச்சுவைப் பதிவு , புகைப்படத் தேர்வும் வர்ணனைகளும் சிறப்பு

பெயரில்லா சொன்னது…

இரசிக்கும்படி இருந்தது. நன்றிகள்..............

shabi சொன்னது…

ithuthan nijam

dondu(#11168674346665545885) சொன்னது…

வேண்டாதவங்க அப்ரைசல் பண்ணினால் சச்சின் டெண்டுல்கருக்கே ஆப்புதாண்டின்னு சமாதானப் படுத்திக்குங்க. பார்க்க: http://dondu.blogspot.com/2010/02/blog-post_28.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

அரபுத்தமிழன் சொன்னது…

சூப்பரா இருக்கே. எல்லோருக்கும்தான் இந்தப் படங்கள் வந்தன, ஆனா இத வச்சு ஒரு நல்ல நகைச்சுவைப் பதிவு உங்களைப் போல எல்லோருக்கும் எழுத வருமா என்ன.

நையாண்டி நைனா சொன்னது…

hahahaha unmai unmai....

Saravanan சொன்னது…

இதை எனக்கு e-mail அனுப்ப முடியுமா....email address latestravanan@gmail.com

Rajez சொன்னது…

இதுல எனக்கு அனுபவம் அதிகம் பாஸ். புண் பட்ட நெஞ்சை புகை விட்டு ஆத்திகிட்டு இருக்கேன்

பெரோஸ் கான் சொன்னது…

இதல நெறைய பாடங்கள் இருக்கு!!!

Karthik சொன்னது…

unmai

சிவபார்கவி சொன்னது…

முன்னாடியே சொன்னீங்களே...


http://sivaparkavi.wordpress.com/
சிவபார்க்கவி