திங்கள், 25 ஜூலை, 2011

நம்புங்கய்யா நம்புங்க…ஆம்பளைங்களும் இராஜஸ்தானில் குழந்தையை பெத்திருக்காங்க…




வருஷத்திற்கு அதிகபட்சம் 2 குழந்தைகளைப் பெத்துக்கலாம் ஆனால் 24 முடியுமா? ஆண்களும் மகப்பேறு அடைய முடியுமா? உலக அதிசயமா இல்ல… இராஸ்தான் அரசு ஊழியர்களின் அற்புத சாதனையா என்பதை இனிவரும் செய்திகள் மூலம் உங்களுக்கே தெரியும்.

ராஜஸ்தான் கோட்டா நகரில் உள்ள கோகுண்டா மகப்பேறு மையத்தின் பதிவேடுகளின் படி குறைந்தது 32 ஆண்கள் குழந்தை பெற்றிருப்பதாக இதை விசாரிக்கும் விசாரணை அதிகாரி சொல்றாரு!.இம்மையத்தின் இயக்குநர்கள் வறுமை கோட்டுக்குக் கீ வாழபெண்களின் பிரசவத்திற்காக அரசு கொடுக்கும் உதவி தொகையைப் பெறுவதற்காக இதுமாதிரி கோல்மால்களில் ஈடுபட்டிருக்காங்க!
துல இன்னொரு கொடுமை என்னன்னா... சில ஆண்கள் பல தடவை குழந்தை பெத்திருக்காங்க!. இதில்லாம 60 வயசான மூதாட்டி ஓரே வருஷத்துல இரண்டு முறை தனித்தனியா குழந்தை பெத்துக்கிட்டிருக்காங்க. சீதாங்ற பெண் ஊழியர் லவா.. குசா..ன்னு இதிகாசத்துல வர்ற மாதிரி இரண்டோட நிறுத்திக்காம அவர் மட்டுமே ஓரே வருஷத்தில 24 தடவை குழந்தை பெத்திருக்காரு. இந்த ஊழலை குறித்து விசாரிக்க மூன்று மூத்த மருத்துவர்களைக் கொண்ட குழுவை அரசு நியமிச்சிருக்கு.
எப்படித்தான் இப்படி புதுசு புதுசா யோசிக்கறாங்களோ..!?!?

மூலம்: http://www.inneram.com/2011072318041/males-delivering-babies-in-india  இத்தகவல் தளத்திற்கு  நன்றி!


Download As PDF

வியாழன், 21 ஜூலை, 2011

கார்ட்டூன்களைப் பாருங்க...குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க-11!

உள்ளூர் கார்ட்டூன்கள் மட்டுமல்ல… இம் முறை வளைகுடா நாட்டு கார்ட்டூன்களை கண்டும் குலுங்கவோ குமுறவோ செய்யலாம். 







































சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தினமணி, தினமலர், தினக்குரல், கல்கி, & துக்ளக் தமிழ் இதழ்களுக்கும், அரேப் நியூஸிற்க்கும் நன்றியோ நன்றிகள்!!

குறிப்பு: நேரமின்மையால் ஒரு கோர்வையாக இம்முறை கேலிச்சித்திரங்களை வகைப்படுத்த இயலவில்லை. பொருத்தருளவும்.




Download As PDF

திங்கள், 18 ஜூலை, 2011

நம்மாளுங்கக் கிட்ட தான் பாடம் படிச்சிருப்பாங்களோ இந்த உலக அரசியல்வாதிகள்?!

சிரித்து சிரித்து வயிறு புண்ணானால் அதற்கு நம் கம்பெனி பொறுப்பல்ல!…  படங்களைப்பாருங்க….’உலகிலுள்ள அரசியல்வாதிகளின் மக்கள் மன்ற நடவடிக்கைகளைப் பார்க்கறப்போ ’ நம்மாளுங்கக் கிட்ட தான் பாடம் படிச்சிருப்பாங்களோ ’ன்னு நினைக்க வைக்குது!

சீனாக்காரன் மட்டும் எந்தச் சிக்கலுமில்லாம எப்படி முன்னேறுகின்றான் என்பதை கடைசிக் காட்சியைக் கண்டால் புரியும். – ஹி… ஹி… அதுவும் நம்மாளுங்ககிட்ட இருந்து காப்பியடிச்சது மாதிரித்தான் தெரியுது!











கடைசியாக சீனா…
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

என்னே…
அமைதி!

என்னே…ஆதரவு!

என்னே…ஒத்துழைப்பு!
  •  
  •  
  •  
  •  
  •  
  •  




இவுகளும் நம்ம முன்னாள் பிரதமர் தேவகவுடாவிடம் தான் பாடம் படிச்சாங்களோ?!?!


இச்சுவாரசியமானக் காட்சிகளை என்னுடன் பகிர்ந்த நண்பர் திரு. பாலமுருகன் அவர்களுக்கு நன்றி!
Download As PDF