புதன், 24 ஆகஸ்ட், 2011

“மாப்பு…. வச்சுட்டான்யா ஆப்பு!" - அம்பியின் அலப்பறை – 4

ங்கொய்யால… நிசமாவே நம்மள வச்சு காமெடி பண்ணீட்டாங்களே..!



போலி ஆவணங்களுக்கு பவர் ஃஆப் அட்டர்னி பெற்ற நடிகர் சிங்கமுத்து, வடிவேலுவிற்க்கு நிலத்தினை விற்பனை செய்துள்ளார். உண்மையான உரிமையாளர் நில அபகரிப்பு வழக்கு தொடரவே “2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை திருப்பி ஒப்படைத்தார் நடிகர் வடிவேல்”

“மாப்பு…. வச்சுட்டான்யா ஆப்பு! ங்கொய்யால… நிசமாவே நம்மள வச்சு காமெடி பண்ணீட்டாங்களே..!”ன்னு வடிவேலு புலம்பறது உங்க காதுக்கும் கேட்குதா?!
---------------------------------------------------------------------------------------------------------------------------



"சமச்சீர் கல்வித் திட்டத்தைப் பற்றி நாங்கள் கூறிய போது, யாருமே கேட்கவில்லை. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு காரணமாக, திட்டம் அமல்படுத்திய பின், இப்போது பல்வேறு குறைகளைக் கூறி அங்கலாய்த்துக் கொண்டால் எப்படி?'' - சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா ஆவேசக் கேள்வி!

அடி ஆத்தி…!  மூட்டைப்பூச்சிக்காக  வீட்டைக் கொளுத்தறேன்னு  சொன்னதை நீங்கல்லாம்  ஏன்  ஒத்துக்கலைங்கற  மாதிரியில்ல  இருக்குது...?!?!
---------------------------------------------------------------------------------------------------------------------------



இறந்ததாக  நினைத்து  சவக்குழியில்  இறக்கியபோது  வாலிபர்  உயிர் பிழைத்தார்!  வேலூரில்  உள்ள  தனியார்  மருத்துவமனையில்  இறந்து விட்டதாக  டாக்டர்கள்  தெரிவித்துள்ள கல்குவாரி தொழிலாளி தற்போது தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை – தினகரன்

அரசு மருத்துவமனை சரியில்லைன்னு தான் ஜனங்க தனியாரை நாடறங்க. ஏழைங்கன்னாலே எல்லோருக்கு இளக்காரமா?. உயிர் காக்கற மருத்துவரே இப்படின்னா…. தமிழக அரசு, இவுகளுக்கும் அந்த மருத்துவமனைக்கும் தக்க தண்டனை கொடுத்தாத் தான் தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் சற்று பொருப்பும் மனித உயிர்கள் மீது மதிப்பும் வரும்!
---------------------------------------------------------------------------------------------------------------------------



புதிய  தலைமைச்  செயலகக்  கட்டடத்தை  மருத்துவமனை,  மருத்துவக்  கல்லூரியாக  மாற்றும் தமிழக முதல்வர்  ஜெயலலிதாவின்  அறிவிப்பிற்கு  மறுபரிசீலனை  தேவை – தினமணி தலையங்கம்.

”கேளா மன்னனும் கெடுவான்!” எனும் மொழிக்கேற்ப ஆளும் அரசின் செயல்களை அவ்வப்போது இதுமாதிரியான நடுநிலையான தலையங்கம் வாயிலாக வர்றது ஆரோக்கியமான விஷயம் தானே! ---------------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி: ஓவியர் பாலா மற்றும் அனைத்து முன்னணி தமிழ் ஊடகங்கள்


Download As PDF

7 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நிகழ்காலச் சமூகத்தின் கண்ணாடியாக இடுகை.

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தமைக்குப் பாராட்டுக்கள்..

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தங்கள் சிந்தனையை மிக அழகாகச் சொல்லியிருக்கீங்க..

சிரித்தேன்
சிந்தித்தேன்
இரசித்தேன்.

சக்தி கல்வி மையம் சொன்னது…

ஹா..ஹா...
அருமையான சிந்தனை...

பெயரில்லா சொன்னது…

நல்லாயிருந்தது நெல்லி...ரசித்தேன்...

RAMA RAVI (RAMVI) சொன்னது…

சிரிக்க சிந்திக்க வைக்கிறது உங்க பதிவு. பகிர்வுக்கு நன்றி.

Chitra சொன்னது…

1. comedy.
2. tragedy.
3. news.

கடம்பவன குயில் சொன்னது…

காமெடியுடன் செய்தி
கருத்துடன் செய்தி
ஆதங்கத்துடன் செய்தி
நல்ல வித்தியாசமான முயற்சிதான்.
நவரச கலவை. பாராட்டுக்கள்