செவ்வாய், 28 ஜூன், 2011

கார்ட்டூன்களைப் பாருங்க...குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க-10!

தற்போதைய பரபரப்பான செய்திகளில் பெரிதும் அடிபடுவது கார்ப்பரேட் (ஆ)சாமிகளின் கொட்டங்கள் தான். புட்டபர்த்தி சாய்பாபா இறந்தப் பின்பு ஆசிரமத்தின் சில அறைகளில் கிடைத்த கோடிக்கணக்கில் மதிப்புள்ள தங்கங்களும், ரூபாய் கட்டுக்களும் பிடிபட, அவரின் வழிநடக்கும் பக்தர்கள் பலருக்கும், அவரின் புனிதத் தன்மைக் குறித்து சந்தேகம் எழ ஆரம்பித்துள்ளது.115 நாட்களாக கங்கை நதியை தூய்மைப் படுத்தக்கோரியும், நிலக்கரி சுரங்க திருட்டுக்களை தடுக்கக் கோரியும் உண்ணாநோன்பினை மேற்கொண்டு உயிர் துறந்த சுவாமி நிகம் ஆனந்தை ஆன்மிகத்தின் போர்வாளாகக் கருதும் தேசியக் கட்சிகளோ, இயக்கங்களோ கண்டுக்கொள்ளவே இல்லை. ஆனால் போலி பாபா இராம் தேவ் 9 நாட்கள் கூட தொடர இயலாமல் ஜகா வாங்கியதை ஏதோ பெரிய சாதனையாக ஊடகங்கள் திரித்துக் கூறுகின்றன. உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாகவே ஒருபடி மேலே சென்று தில்லியில் உண்ணாநோன்பில் நடந்தது என்ன விசாரிக்க விழைந்ததை வரவேற்கும் நிலையினில், சுவாமி நிகம் ஆனந்தின் உண்ணா நோன்பிற்கு காந்தி பிறந்த நாட்டிலேயே மதிப்பின்றி அதனால் உயிர் துறக்க நேரிட அது குறித்து ஏன் மௌனம் சாதிக்கின்றது என்பது தான் வியப்பாக இருக்கின்றது!சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தினமணி, தினமலர், கல்கி, & துக்ளக் தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!


Download As PDF

2 கருத்துகள்:

Riyas சொன்னது…

சூப்பருங்க.. எல்லா கார்ட்டுனும் அருமை

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தினமணி, தினமலர், கல்கி, & துக்ளக் தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!//

பகிர்ந்து தந்த உங்களுக்கும் நன்றிகள்.