தமிழகம் முழுவது ஆறு கோடி மக்களை மகிழ்விக்க அரசியல்வாதிகள், என்னமாய் மாய்ந்து மாய்ந்து ஓரங்கமாகவும், கூட்டணியாகவும் நர்த்தனமிட அதைக் கண்டு நாம் மகிழாமல் இருப்பது முறைதானா? பாருங்க... பாருங்க... பார்த்துக்கிட்டே இருந்திடாம கொஞ்சம் பகுத்தறிவோடும் முடிவெடுங்க..!
இலவச மாயைகளை இரு பெரும் ஆளும் / எதிர் அணிகளுமே மக்களுக்கு வாரிவழங்குகின்றது. சிறிதும் கூச்சமின்றி ஆளும் கட்சியினரின் இலவச தேர்தல் அறிக்கையைக் காப்பியடித்ததோடின்றி நம்ப இயலாத அளவிற்கு பற்பல இத்யாதிகளையும் சேர்த்துக்கொண்டது அ.தி.முக. அதோடின்றி நம்பகத்தன்மையினில் ஜெயலலிதா இன்னமும் மாறவில்லை என்பதை இன்னல்கள் நிறைந்த காலக்கட்டங்களில் உறுதுணையாய் இருந்து, தன் ம.தி.மு.க. வைவிட அ.தி.மு.க. வின் வளர்ச்சிக்கு பாடுபட்ட வை. கோ. வை, தேர்தல் நேரத்தில் கழட்டிவிட்டு நம்பிக்கைத்துரோகம் புரிந்ததிலேயே புலப்படுகின்றது. பொதுவுடமைக் கூறி வாக்கு வாங்கும் அணிகளோ சிறுபான்மையாக மாறி ஏதோ தான் நிற்கும் தொகுதிகளில் வென்றால் போதும் என சமரச மார்க்கத்தில் சத்தமின்றி கரைந்துவிட்டது.
சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!
முக்கிய குறிப்பு: எதிரணிக் குறித்து அதிகம் கார்ட்டூன்கள் இல்லாததால் அவர்கள் ஏதோ உத்தமர்கள் என்று மேம்போக்காக நம் அறிவார்ந்த வாசகர்கள் சிந்திக்க மாட்டார்கள் என நம்புவோமாக...
6 கருத்துகள்:
அருமை
kalakkal
நன்றாக சிரித்தேன்!
சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!
.... :-)
முக்கிய குறிப்பு: எதிரணிக் குறித்து அதிகம் கார்ட்டூன்கள் இல்லாததால் அவர்கள் ஏதோ உத்தமர்கள் என்று மேம்போக்காக நம் அறிவார்ந்த வாசகர்கள் சிந்திக்க மாட்டார்கள் என நம்புவோமாக...
..... :-))))))))))
:-))
கருத்துரையிடுக