ஞாயிறு, 27 மார்ச், 2011

ஆவியுடன் பேசிய பின்பே அ.தி.மு.க. வுடன் கூட்டணி - விஜய்காந்த்தின் பரபரப்பான பே (ய்)ச்சு!


இது வரை தனியாக தண்ணியடித்துக் கொண்டிருந்தவருக்கு ஊத்திக்கொடுக்க புது ஆளு கிடைச்சதாலோ என்னவோ வழக்கத்திற்கும் அதிகமாகவே சுதி ஏறி அதீத மதியுடனே  பேசிவருகின்றார் தே.மு.தி.க., தலைவர் விஜய்காந்த். 

அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, அம்பத்தூர் பொன்னேரி தொகுதிகளில் பிரசாரத்தின் போது விஜயகாந்த், "நான் முன்னரே தெரிவித்தது போல மக்களுடனும், தெய்வத்துடனும் தான் கூட்டணி வைத்திருக்கிறேன். சிறு வயதில் இருந்தே எனக்கு எம்.ஜி.ஆர் மீது அதிக பற்று உண்டு. அவர் எந்தெந்த படத்தில் என்னென்ன உடையில் வந்தார் என்று கூட என்னால் சொல்ல முடியும். விஜயகாந்த் ஏன் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ளார் என்று நீங்கள் நினைக்கலாம். பேரறிஞர் அண்ணா மீது கொண்டுள்ள பற்றால் தான் அவர் பெயர் கொண்ட அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்துள்ளேன். அண்ணாவின் ஆவி கூறியதின் பேரிலேயே அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்திருக்கிறேன். விஜயகாந்த் பணம் வாங்கிக் கொண்டு தான் அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்துள்ளார் என்று தி.மு.க.,வினர் கூறுகின்றனர். இது உளவுத் துறையின் தவறான தகவல் ஆகும்." என்கிறார். (செய்தி உதவி: தினமலர் 27 மார்ச் 2011).


அவர் என்னவோ தெளிவாக பே(ய்)சியது போல் தான் தெரிகின்றது. ஆனால் நமக்குத்தான் தலைச்சுத்துகின்றது! என் சிறுமதியினுள் குடைந்த சில கேள்விகள்...

1. தெய்வத்துடனும் கூட்டணி அதே நேரத்தில் ஆவியின் வாக்கிற்க்கு கட்டுபட்டு அ.தி.மு.க. வுடன் உறவு. அது சரி எம்.ஜி.ஆரின் ஆவி ஏன் இவருக்கு இதுவரை எதுவும் கூறவில்லை?!*!?!*?!
2. இந்த தேர்தலுக்கு முன்பு வரை அண்ணாவின் ஆவியுடன் ஏன் தொடர்புக்கொள்ளவில்லை?!
3. அ.தி.மு.க. விடம் பணம் வாங்கியொன்றும் கூட்டணி அமைக்கவில்லை என நேரடியாக கூறவேண்டியதுதானே!? தேவையின்றி ஏன் உளவுத்துறையை இழுக்கவேண்டும்?


பிரியாணி இல்லாம வாசம் வராது! (ஹி.. ஹி... ஹி... தேர்தல் நேரமல்லவா...! அதான் நெருப்பில்லாம புகையாதுங்கற பழமொழி மாறி பிரியாணியா வந்துடுச்சி!!) ஆனா... ங்கொய்யால...  அது ஆம்பூரா இல்ல தலப்பாக்கட்டாங்கறது தான் கேள்வி!


Download As PDF

6 கருத்துகள்:

Senthil சொன்னது…

vkanth thinking everybody fool!!!!!

senthil, doha

ஆகாயமனிதன்.. சொன்னது…

நேற்றைய, இன்றைய, நாளைய, முதல்வர்களும்...போடும் கணக்குகளும்...
http://aagaayamanithan.blogspot.com/2010/08/blog-post_6490.html

ELANGOVAN சொன்னது…

good article!

shiva சொன்னது…

Dai ennadaaa Vijaya kantha thanni adichuttu pesuriyaa??? Yarudaa kooda irunthu vaarthu koduthathu JJ aaa.

Chitra சொன்னது…

பிரியாணி இல்லாம வாசம் வராது! (ஹி.. ஹி... ஹி... தேர்தல் நேரமல்லவா...! அதான் நெருப்பில்லாம புகையாதுங்கற பழமொழி மாறி பிரியாணியா வந்துடுச்சி!!)


.......பட்டையை கிளப்புறீங்க..... ஹா,ஹா,ஹா,ஹா....

Chitra சொன்னது…

இன்றுதான் முதலாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்! Follow பண்றேன். :-)