காங்கிரசுக்காக இலங்கைத் தமிழர்களினைக் கண்டும் காணாது, தமிழகத்தின் போராட்டமுனையினை மழுங்கடித்து முள்ளிவாய்க்கால் மனிதப்பேரவலத்தினிற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருந்த கருணாநிதி அவர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்றே தமிழுணர்வாளர்கள் மனம் மகிழ்வர்.
பொதுவாக மாநிலங்களின் நலனில் தேசியம் பேசும் கட்சிகள் அக்கறைக்காட்டுவதேயில்லை. ஆதலால் தான் மாநிலக்கட்சிகள் பல மாநிலங்களில் அதன் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சியில் தொடர்கின்றன. தமிழனின் நலன்களை புறந்தள்ளுவதில் / காலை வாருவதில் இந்திய தேசியக் கட்சிகள் எவையுமே தயங்கியதில்லை. தன்னலம் கருதி இவைகளுடன் ஒத்துபோகின்ற காட்சிகளைத்தான் அனைத்துக்கட்சிகளிலும் காண்கின்றோம். தமிழகத்தின் தி.மு.க. ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்த பா.ஜ.க.வும் சரி, தற்போதுள்ள காங்கிரசும் சரி, நேரம் பார்த்து கருணாநிதியின் காலை வாருவதில் வல்லவர்களே! இருப்பினும், இவைகளை சமாளிப்பதில் கருணாநிதியோ வல்லவனுக்கு வல்லவன்!
ஓரங்கட்டப்பட வேண்டிய "பா.ம.க."வினை, அவர்களே எதிர்பாராவண்ணம் கூட்டணியில் இணைத்ததிலிருந்தே கருணாநிதியின் சாணக்கியத்தை உணர முடிகின்றது. காங்கிரஸ் தமக்காக கனியும் என்பதில் "இலவுக்காத்தகிளி"யின் கதையாய் ஆகிவிடக்கூடாதென்பதற்காகவே 'சோ' வின் பெருமுயற்சிக்கிணங்க ஜெ.வும் 'தன்னால் 'குடிகாரன்' என்று விமர்சிக்கப்பட்ட விஜய்காந்துடன் தற்போதுதான் கூட்டணி வைத் வைத்தபின்பு நிதானமாகக் காயை நகர்த்தியுள்ளார்.
அரசியல் சாணக்கியத்தில் இவருக்கு இணையாக தேசியக்கட்சிகள் எவையும் ஈடுகொடுக்க இயலவில்லை. இலங்கைத் தமிழரகளுக்கு துரோகம் இழைத்தவகையில் அவர்மீது தனிப்பட்ட கசப்பு நம்மில் பலருக்கு இருப்பினும், மத்தியில் ஆண்ட பா.ஜ.க.விற்கும் சரி, ஆள்கின்ற காங்கிரசாருக்கும் சரி அவர்களின் ஆட்சிக்கும் அரசியலிற்கும் நம்பகத்தன்மையுடனும் நாகரிகத்துடனும் இருந்தார் என்பதில் எவருக்குமே கருத்து வேறுபாடு இருந்ததில்லை. லாலு, முலாயம் சிங் யாதவ், மம்தா, ஜெ... இவர்களைப்போன்று சின்னஞ்சிறு விஷயங்களுக்கெல்லாம் குடைச்சல் கொடுத்ததில்லை. இவரைப்புறந்தள்ள விரும்பிய கட்சிகள் அடுத்த தேர்தலிலேயே மண்ணைக் கவ்வியது அனைவரும் அறிந்த வரலாறு ஆகும்.
கூட்டுக் களவாணிகளாக இருந்து விட்டு, சந்தியில் சிக்கியபின் காங்கிரஸ் மட்டும் ஏதோ தன்னைப் புனிதன் போல் காண்பித்துகொள்வதற்காகவே திட்டமிட்டு தி.மு.கவிற்கு எதிரான பகுதியினை மட்டுமே நீரா ராடியாவின் உரையாடல் ஊடகங்களுக்கு கசிய விட்டது. 2G ஸ்பெக்ட்ரம் விவகாரத்தினைக் கையில் எடுத்துக் கொண்டு எப்படியாவது தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியில் அமரவேண்டும் என்கிற காங்கிரஸின் குள்ளநரித்தனம் கருணாநிதியும் அறியாததல்ல. ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் காங்கிரசின் நிர்ப்பந்தத்தினால் தான் வாளாவியிருந்தோம் என்று உலகத்தமிழர்கள் தம் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்வினை அகற்ற இக்கூட்டணி பிளவினை பயன்படுத்திக்கொள்வார் கருணாநிதி.
ஈழத் தமிழர்களுகளுக்காக கை நோகக் கடிதம் எழுதிக் களைத்த கலைஞர் இனிக் கனல் பறக்க பிரச்சாரம் செய்யலாம். விரல் நோக தந்தி அடித்து வெறுத்தவர் இனி வெஞ்சினங்கொண்டு சீறி எழுந்து 'நெஞ்சுக்கு நீதி' யின் அடுத்தபாகத்தினை எழுத முயற்சிக்கலாம்.
இனி ஜெ.வே விரும்பினாலும் காங்கிரசுக்கு கருணாநிதி ஒதுக்குவதாகக் கூறிய 60 இடங்களை நிச்சயம் தர இயலாது. அப்படி கூட்டு வைக்கவேண்டுமெனில், விஜய்காந்தை கழட்டிவிடவேண்டிவரும் அல்லது கூட்டணிக்கட்சிகளின் எதிர்பார்ப்பிற்க்கும் குறைவாகவே தொகுதிகளை ஒதுக்குவார். ஒதுங்கிப்போவதா அல்லது ஒரு ஓரமாய் இக்கூட்டணிக்குள்ளேயே முடங்கிப்போவதா என்ற சங்கடத்தினில் தவிக்கும் கட்சிகள், தாங்கள் எடுக்கும் முடிவினை 'காலத்தின் கட்டாயமாக' பிரகடனப்படுத்துவார்கள்! அங்கே காங்கிரசு நுழைந்தால் கம்யூனிஸ்டுகள் தி.மு.க.வின் பக்கம் சாய வாய்ப்புண்டு!
காங்கிரசு எப்படியாவது விஜய்காந்துடன் கூட்டணி வைக்கமுயற்சித்தால், நிச்சயம் மும்முனைப் போட்டி வரும். அதில் தி.மு.க. எளிதில் வெல்லும் வாய்ப்பை பெறும். எப்படிப்பார்த்தாலும் காங்கிரசுடன் கூட்டுசேர்வதில் தி.மு.க.விற்கு கிடைக்கும் பலனை விட தனித்து நிற்பதால் கிடைக்கும் ஆதாயமே அதிகம். தி.மு.க.வினை 'கை' கழுவுவதால் அகில இந்திய அரங்கில் தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்டதாக காங்கிரசுக் காண்பிகும். ஆக.... கூட்டணியில் பிளவு, இருவருக்குமே மகிழ்வு!
ஒருவேளை, எக்கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் தமிழகத்திலேயே கூட்டணி ஆட்சி அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அப்போது தேர்தலுக்கு முந்தையக்கூட்டணியே தொடரும் என்பதும் ஐயப்பாடே!
தேர்தலுக்கு முன்னர் மட்டுமல்ல அதற்கு பின்னரும் அரசியல் சதுரங்கத்திற்குள் நடக்கும் வேடிக்கை லாங்க் ஜம்ப், ஹை ஜம்ப்பு களை, அதாங்க... கூட்டணித் தாவல்களைக் கண்டு மகிழ்வோம்!.
நன்றி: நிழற்படம் & கார்ட்டூன் - நாளிதழ்கள், இணையம்.
நன்றி: நிழற்படம் & கார்ட்டூன் - நாளிதழ்கள், இணையம்.
3 கருத்துகள்:
நல்ல ஆய்வு... நல்ல பகிர்வு.
எனது வலைபூவில் இன்று:
இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ
திமுக விலகல் : அரசியல் நாடகம்?
பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று காலை சந்தித்து கொடுக்க இருந்த தி.மு.க. அமைச்சர்களின் விலகல் கடிதம் திடீரென மாலையில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் ஏற்க முடியாத அளவுக்கு நிபந்தனைகளை விதிப்பதால் மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. விலகியதாக அறிவித்தது.
அதோடு பிரச்சனைகளின் அடிப்படையில் மட்டும் மத்திய அரசுக்கு ஆதரவு தருவது என்று தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுவில் கடந்த 6ஆம் தேதி முடிவு எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தி.மு.க. அமைச்சர்கள் இன்று டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை காலை 11 மணிக்கு சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை கொடுக்க இருந்தனர்.
இந்த நிலையில் தி.மு.க. அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதிமாறன், நடிகர் நெப்போலியன், ஜெகத்ரட்சன், பழனிமாணிக்கம், காந்தி செல்வன் உள்பட 6 பேர் கொடுப்பதாக இருந்த விலகல் கடிதம் திடீரென மாலை 6.30 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டம் முடிந்த பிறகு பிரதமரை சந்தித்து மனு கொடுக்க தி.மு.க. அமைச்சர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
///நிதானமான அலசல்!ஆனாலும் இந்த முடிவை ஈழப் போரின் உச்சக் கட்டத்தில் எடுத்திருந்தால் கலைஞர் போற்றிப் புகழப்பட்டிருப்பார்!ஆட்சி கலைக்கப்பட்டிருந்தால் கூட அறுதிப் பெரும்பான்மையுடன் தேர்தலில் வென்றிருக்க முடியும்!இப்போது நிலை வேறு!தொகுதிப் பங்கீட்டில் குழப்பம் ஏற்பட்டதால் "மக்களின்"?!நலன் பாதிக்கப்பட்டு விடுமே என்று எடுக்கப்பட்ட முடிவாகவே உலகம் பார்க்கும்!உண்மையும் அது தானே?ஆனாலும் காங்கிரஸ் மீண்டும் கூட்டணியில் இணைந்தால் உச்சபட்ச ஆதரவும் அம்போ!!!!!!!!!!!!!!!!!///
நல்ல நடுநிலையான அலசல். உண்மையாகவே பெரியவர் நல்லவராக இருந்திருந்தால் அவர் இந்த முடிவை என்றோ எடுத்து இருக்க வேண்டும். பாவம் அப்போது ஸ்பெக்ட்ரம் பணம் எண்ண வேண்டி இருந்ததால் முடியவில்லை.
கருத்துரையிடுக