செவ்வாய், 24 மே, 2011

கார்ட்டூன்களைப் பாருங்க...குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க-8!

என்னதான் கண்ணில் விளக்கெண்ணெய் இட்டுத் தேடினாலும் இன்றைய ஆளுங்கட்சிக்கு எதிர்மறையாக ஒரு கார்ட்டூனும் இது வரை பிரபல இதழ்களில் தென்படவில்லை. "அது சரி, எப்படி தென்படும்? தி.மு.க.வினை சாடுவதாகக் கருதி, இவர்களாகவே வரிந்துக் கட்டிக்கொண்டு அ.தி.மு.க.வினை அரியேற்றம் செய்ய பரப்புரைச் செய்துவரிகளாயிற்றே" எனப் பொருமும் நடுநிலைவாசிகளின் குரல் நம் காதிலும் விழுகின்றது.

'கஜானா காலி!' என்று கூவியவர் கிட்டத்தட்ட 600 கோடிக்கும் மேல் செலவிட்டு பசுமைத் தொழில்நுட்பத்தினில் உலகிலேயே முதன்முறையாக மக்கள் மன்றத்தினை அமைத்திட்டவர் கருணாநிதி என்பதற்காகவே வீம்புக் கட்டிக்கொண்டு கேரளத்து நாயர்களையும், நம்பூதிரிகளையும் வழி மொழிந்து ஜார்ஜ் கோட்டையை விட்டு நகர அஞ்சுகின்றார் என்ற பொதுமக்களின் புலம்பலுக்கு ஆளாகின்றார்.

'சமச்சீர் கல்வி'யினிலும் இது வரை 500கோடி செலவு செய்யப்பட்ட பாடப்புத்தகங்களை தூக்கியெறிந்து தனியார் முதலாளிகளுக்கு கல்விக் கொள்கையினை தாரை வார்ப்பதை பெற்றொர்கள், கல்வி ஆர்வலர்கள் பொருமுகின்றனர். 'துக்ளக்'சோ போன்றவர்கள் ஆலோசனையாளர்களாக இருந்தும் 'முகமது பின் துக்ளக்' வரலாற்று ஆட்சியினை நடத்துகின்றாரே ஜெயலலிதா என அ.தி.மு.கவினர் பலர் பொருமுவதும், வெளியினில் அதனை தெரிய விடாது உறுமுவதும் நாம் காணும் காட்சிகள்!

ஆளுங்கட்சியினை விமர்சனம் செய்தால் எங்கே மீண்டும் "ஆட்டோ" கலாச்சாரம் வந்துவிடுமோ எனும் தயக்கத்தினில் ஊடகங்கள் உள்ளனவா அல்லது போகப்போகப் பார்க்கலாம் என வாளாவியிருக்கின்றனரா என்பது அவர்களுக்கே வெளிச்சம்!
 
 























 
 
பின் குறிப்பு: தமிழகத்தினை எவர் ஆண்டாலும் மக்கள் நலனில் அக்கறைக் கொண்டு தமிழையும், தமிழர்களின் வாழ்வையும் மேம்படுத்தவேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம்.
 
சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தினமணி, தினமலர், கல்கி & துக்ளக் தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!







Download As PDF

1 கருத்து:

Chitra சொன்னது…

பின் குறிப்பு: தமிழகத்தினை எவர் ஆண்டாலும் மக்கள் நலனில் அக்கறைக் கொண்டு தமிழையும், தமிழர்களின் வாழ்வையும் மேம்படுத்தவேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம்.

......கனவுகள் மெய்ப்பட வேண்டும்.