செவ்வாய், 4 ஜனவரி, 2011

பாலைவன நாட்டிலே ஒரு கரைபுரண்டோடும் வெள்ளம்! - சவூதி அரேபியா.

சவூதி அரேபியாவினை பொதுவாக பாலைவனம் என்றே அனைவரும் நினைப்பர். ஆனால், இங்கே பூத்துக் குலுங்கும் சோலைவனமும் உண்டு. உலகமே பிரமிக்கும் தொழிற்வனமும் உண்டு. 

இங்கு நடப்பது மன்னராட்சி என்றாலும் மக்களின் நலனில் அரசு மிகவும் கவனமாக இருக்கின்றது. நம் இந்திய நாட்டில் அரசு மருத்துவமனைக்குச் சென்றாலே நம்மை மிகவும் கேவலமாகவோ அல்லது பரிதாபமாகவோ நோக்குவர். ஆனால் இங்கு அப்படியில்லை.  தனியார் மருத்துவமனையை விட அரசு மருத்துவமனைகள் மிகவும் நவீனமாகவும், மருத்துவ நிபுணர்களை உடையதாகவும் இருக்கும். பொதுமக்களுக்காக என்னதான் பார்த்து பார்த்து செய்தாலும் இயற்கையின் எதிர்பாராத இடர்பாடுகளைச் சந்திக்கத்தான் வேண்டியிருக்கின்றது.  

கடந்த மாதம் டிசம்பர் 30ந் தேதி அன்று பெய்த அடை மழையால் ஜெத்தா நகரமே ஸ்தம்பித்து வெள்ளக்காட்டில் மூழ்கியது என்றால்... நம்மவர்கள் பலர் நம்புவதற்கு வியப்பர். இதோ சிலகாட்சிகள்.



இங்குள்ள பிரபல ஆங்கில (ARAB NEWS) நாளிதழில்  வந்துள்ள நிழற்படங்கள்:
 
 









Download As PDF

2 கருத்துகள்:

மக்கள் தளபதி/Navanithan/ナパニ சொன்னது…

//சவூதி அரேபியாவினை பொதுவாக பாலைவனம் என்றே அனைவரும் நினைப்பர்.//
கண்டிப்பா...

இனிமே பேரிட்சைக்கு பதிலா நெல் நடுவாஙகளோ?
btw, வெள்ள நிவாரணம் அங்கயும் உண்டா? :-)

BADUR சொன்னது…

போன வருடமும் இதே சௌதியில் இதே போன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதே போல இந்த வருடமும் ஏற்பட்டுள்ளது...