ஞாயிறு, 1 ஜனவரி, 2012

சராசரியாய் கழிந்துவிடாமல்... 2012

தன்னானே.. தானேநன்னே..!!” என
தாளம் போட்டு ஆட்டமிட்டு
ஆனந்தத்துடனே நாம்
ஆங்கிலப் புத்தாண்டினை
 
 
வரவேற்கவே நினைத்திருக்க….
 
 
 தானேஎனும் புயல் வந்து
தாறுமாறாய் தாக்கிட
பூமித் தாயினை
புண்ணாக்கி மகிழ்ந்திட
 
 
மீனவர்களும் விவசாயிகளும்
இன்ன பிற சமூகத்தாரும்
மீளாத்துயரினிலே
மூழ்கியிருக்கும் வேளையிலே
முல்லைப் பெரியாறு முதல்
கூடங்குள அணு உலை வரை
இலங்கைத் தமிழர் முதல்
இந்தியத் தமிழர்கள் வரை
 
 
சந்திக்கும் சோதனைகளை
சாதனையாய் ஆக்கிடுவாயா!
சராசரியாய் கழிந்துவிடாமல்
சரித்திரம் தான் படைத்திடுவாயா!?

களிப்புடனே உன் வரவினை
கொண்டாடிட இயலாதிடினும்
புதிதாய் பூத்திட்ட உன்னை
புன்னகையுடன் வரவேற்கின்றோம்!.
 
 
வருகவே   வருக   2012!!
Download As PDF

5 கருத்துகள்:

suryajeeva சொன்னது…

விடியல் வரும் என்று காத்திராமல்.
விடியலை கொண்டு வருவோம்....

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

Ramani சொன்னது…

புத்தாண்டு சிறப்புக் கவிதை அருமை
தொடர்ந்து பதிவுகள் தர வேணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

A.R.ராஜகோபாலன் சொன்னது…

கருத்துக் கோர்வையான கவிதை அருமை
நன்றி வாழ்த்திற்கு

சிவகுமாரன் சொன்னது…

நானும் வரவேற்கிறேன் தங்களோடு சேர்ந்து .
வருக புத்தாண்டே.
தங்களுக்கும் தங்கள் சுற்றத்திற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

RAMVI சொன்னது…

//களிப்புடனே உன் வரவினைகொண்டாடிட இயலாதிடினும்புதிதாய் பூத்திட்ட உன்னைபுன்னகையுடன் வரவேற்கின்றோம்!. வருகவே வருக 2012!!//

ஆம்.

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்,மூர்த்தி.