செவ்வாய், 12 ஏப்ரல், 2011

ஊருக்குத்தான் உபதேசமா பிரதமர் அவர்களே!?


மட்டைப் பந்தாட்டத்தைக் காண நேரமிருந்த இவருக்கு வாக்களிக்க நேரமில்லை என்பதை காதில் பூ வைத்த மடையர்களும் கூட நம்ப மறுப்பார்கள்!  மெத்த படித்தவர்கள், அறிவாளிகள் என மற்றவர்களாலோ அல்லது தங்களைத் தாங்களாகவே மெச்சிக்கொள்பவர்களில் பலர் வாய்கிழிய பேசுவரே தவிர வாக்களிக்க முன்வருவதில்லை. அதற்கு நம் பிரதமரும் விதி விலக்கல்ல என்பது ஒரு அதிர்ச்சியான விஷயமே!

"இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை" எனப் பொறுப்பின்றி திரியாதே! மறவாமல் வாக்களி!! என்று அங்கலாய்க்காத அரசியற்கட்சிகளோ அல்லது ஜனநாயக விரும்பிகளோ குறைவில்லை.தேர்தல் நேரத்தில் ஓவ்வொருவரும் தவறாமல் வாக்களிக்கும் கடமையை செய்ய வேண்டும் எனவும், "49 ஓ" இருக்கும் போது எந்த வாக்காளரையும் தேர்வு செய்ய விரும்பாத பட்சத்தில் அதனை உபயோகிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் மக்களிடம் மன்றாடுகின்றது. ஊடகங்களும், வாக்களிக்காத அல்லது விரும்பாதவர்களை கடுமையாக "ரியாலிடி ஷோ, விவாத மேடை, தலையங்கம், அரசியல் களம்..." என்பது போன்ற நிகழ்ச்சியின் வாயிலாக சாடவும் செய்கின்றது. ஆனால்... நடப்பது என்ன? இந்நேரம்.காம் வாயிலாக நாம் அறிகின்ற செய்தி இது...  (Ref: http://www.inneram.com/2011041115448/manmohan-singh-didnt-cast-his-vote-in-assam-election-best-example)


கடந்த 20 ஆண்டுகளாக அசாமில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அப்போதிலிருந்து அவர் அசாமில் வாக்காளராக இருந்து வருகிறார்.  திஸ்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி எண் 175-ல் வாக்காளர் பட்டியலில் 721-வது பெயராக மன்மோகன் சிங்கின் பெயர் உள்ளது. அசாம் முன்னாள் முதல்வர் ஹிதேஸ்வர் சைகியாவின் மனைவியும், அசாம் முன்னாள் அமைச்சருமான ஹேமோபிரவா சைகியாவின் வீட்டில்தான் மன்மோகன் சிங் வாடகைக்கு இருப்பதாக பதிவாகி உள்ளது.  திஸ்பூர் தொகுதிக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் பிரதமர் மன்மோகன் சிங் அவரது வாக்கைப் பதிவு செய்யவில்லை என அந்த தொகுதியின் தேர்தல் அதிகாரியான ஜே.பாலாஜி தெரிவித்தார். 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மன்மோகன் சிங் வாக்களிக்கவில்லை. ஆனால் 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது மன்மோகன் வாக்களித்தார்.ஊருக்குத்தான் உபதேசமா பிரதமர் அவர்களே!?  பாராளுமன்றத்திற்கோ அல்லது சட்டசபைக்கோ தேர்தலுக்காகவது முறையாக மக்களை நேரடியாக சந்தித்திருந்தால் தானே அதன் மகிமைப் புரியும். அது சரி..! இதைப்பற்றி எல்லாம் சோனியாஜி அல்லவா கவலைப்பட வேண்டும்?!Download As PDF

3 கருத்துகள்:

Veluran சொன்னது…

On Economical aspect his NON VOTING has helped Saving in HUGE Expense to the Nation for his Travel to Assam.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஹா ஹா தலையே சரி இல்லாதப்ப.....

ஆனந்தி.. சொன்னது…

வலைச்சரத்தில் தங்களின் உபயோகமான பதிவை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2011/04/to-z-tips-pedia.html