வியாழன், 22 டிசம்பர், 2011

அவசியம் தெரிஞ்சுக்கோங்க - சவூதியில் பணிபுரிய விரும்பறவங்க...



”அரையணா சம்பளம்ன்னாலும் அரசாங்க உத்யோகத்துல இருக்கறவனுக்கு பெண்ணைக்கொடு!” என்கின்ற முந்தைய நிலை மாறி ”என் பெண்ணை ஃபாரின் மாப்பிளைக்குத் தான் கொடுக்கணும்ன்னு இருக்கேன்” என்று கூறுமளவிற்கு ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகை பெருகிவிட்டனர் என்பது இன்றைய யதார்த்தம். பெண் தேடும் படலத்திற்கு என்றிராவிட்டாலும் பொதுவாக “வெளிநாட்டில் வேலைசெய்வது” என்பது நம்மில் பலருக்கு ஒருவித கனவு இருக்கத்தான் செய்கின்றது.  ”திரைகடலோடி திரவியம் தேடு!” என்று கூறிய நம் மூதாதையர்களின் மரபணுக்களின் வசியம் தான் இக்கனவா என்பதை கண்டறிவது இப்பதிவின் நோக்கமல்ல.. 
 நாம் எந்தவொரு பணியையும் துவக்குவதற்கு அதன் தன்மையை உணர்தல் அவசியம்.  இந்தியாவினை போலவே அனைத்து வெளிநாட்டிலும் தொழிலாளர் சட்டங்கள், சமூக நடைமுறைகள் இருக்கும் என்று எண்ணுவது மடமை. ஆதலால், நாம் எந்தவொரு நாட்டிற்கு செல்ல விழைகின்றோமோ, அங்குள்ளோரிடம் கருத்துக் கேட்பது மிகவும் நல்லது.  நாம் செல்லவிருக்கும் நாட்டின் தூதரகங்கள் வாயிலாக அறிவுரைப் பெற்றுவிட்டால், அங்கு கிடைக்கும் பணியும் மற்றுமுள்ள சூழலும் நமக்கு பொருந்துமா என்பதினை முன்கூட்டியே அறிந்திடலாம். அதன் மூலம் வருங்காலத்தில் தேவையற்ற சிக்கலில் சிக்காமல் மகிழ்வுடன் வாழ்வை தொடரலாம்.

சவூதி அரேபியாவிலுள்ள ஜெத்தா மாநகர அயலக தூதரகத்தின், சவூதியில் பணிபுரிய விழையும் அயல்நாட்டு மக்களுக்கான அறிவுரையை, சென்னையை சேர்ந்த திரு. ஜெயக்குமார் மொழிபெயர்த்துள்ளார். அதனை எனக்கு அனுப்பிவைத்த என் நெருங்கிய நண்பர் திரு. ஜோசப் செல்வன் அவர்களுக்கு நன்றியை செலுத்தி தங்களுடன் பகிர்கின்றேன். 









Download As PDF

புதன், 7 டிசம்பர், 2011

கார்ட்டூன்களைப் பாருங்க... குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க-18

அ.தி.மு.க ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததும் பாலாறு தேனாறு ஓடவிருப்பதாகவும், தடையில்லா மின்சாரமும் குடிநீரும் கிடைத்துவிடும் எனும் மூடநம்பிக்கையும், தொழிற்துறையும், கல்வியும் வளர்ந்துவிடும் எனும் எதிர்பார்ப்பும்…. புதிதாக வாக்களித்த இளைய தலைமுறையினர்க்கோ அல்லது ஓட்டு போடும் வயதிலிருந்திருந்தும் முந்தைய ஜெ.வின் ஆட்சியினை நினைவுக் கூற இயலாதவர்களுக்கும் வேண்டுமானால் இருந்திருக்கலாம்! விலைவாசி உயர்வு, பஸ்கட்டண உயர்வு, விரைவில் மின்கட்டண உயர்வு.. போன்றவை பேரதிர்ச்சியினையும் தந்திருக்கலாம்!!  ஆனால் அன்றாட அரசியலை உற்றுநோக்கும் அரசியல் ஆய்வகர்களுக்கு மட்டுமல்ல, ஜெ.வின் முந்தைய ஆட்சியில் பொருளாதார ரீதியில் தனியாக குடித்தனம் செய்த ஜாபக மறதியில்லாத அனைத்து குடிமகன்களும் இந்த ஆப்பினை... அதாங்க அபார உயர்வினை உள்ளாட்சித் தேர்தலுக்கு பின்பு வரும் என்பதை எதிர்பார்த்தே இருந்திருப்பர்!

 ஜெ.வின் சிறப்பு என்னவெனில்…. மற்ற ஆட்சியாளர்களை போல ஒவ்வொரு பொருளின் விலையும் ஒவ்வொரு முறையாக ஏற்றி பல முறை அதிருப்தியடைவதை விட, ஒரேயடியாக அனைத்தையும் ஏற்றி ஒரேயொரு முறை மட்டும் அதிருப்தியினை திருப்தியுடன் சம்பாதித்துக் கொள்பவர்.  மறதி மன்னர்களாகிய நாம் சில நாட்கள் கூவிக் கொண்டு பின்னர் அவரவர் பிழைப்பினைக் காண்பதிலேயே மும்முரமடைவர். வாங்கும் திறன் தமிழக மக்களுக்கு அதிகரித்துள்ளதால் இத்தகைய உயர்வுகள் அவர்களை பாதிக்காது என அவரோ அவரது அல்லக்கை ஊடகங்களோ திரித்தும் கூறும். அது உண்மையெனில், வாங்கும் திறன் வாய்ந்த மக்களுக்கு இலவச பிச்சைகள் இனி எதற்கு? 

இவரது சாணக்கியத்தனத்தினை, முன்பு ஆண்டவர்களை முடக்குவது எப்படி என்பதற்கே முழு நேரமும் மூளையை செலவிட்டு விரயமாக்காமல், சாமான்ய மக்களின் வாழ்வினை பாதிக்காத வகையில் ஆட்சி நடத்திக் காண்பிக்கட்டும்!  நாடும் மகிழும்; நாமும் மகிழ்வோம்!!  வாங்க நாம கார்ட்டூன்களை பார்க்க போகலாமுங்க. குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க!!


















சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த விகடன், தினமணி, துக்ளக்... போன்ற அனைத்து தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!

Download As PDF