உங்கள் திறமைக்கு ஒரு சவால்! எந்தெந்தக் கார்ட்டூன் எந்த இதழில் வந்துள்ளது எனக் கண்டுபிடியுங்கள்! ("ங்கொய்யால... நேரமில்லாததால கருத்துப்படத்துல எந்தெந்த இதழ்ன்னு சரியா கனெக்ஷன் கொடுக்கமுடியலன்னு சொல்லவேண்டியதுதானடா !" என அன்புடன் எம்மைப் பற்றி அளவளாவுவது புரிகின்றது!)
தமிழகத்தை மகிழ்விக்க எதிரெதிர் சித்தாங்கங்களுடன் அணி சேர்ந்துள்ள ஆளும் / எதிர்க்கட்சிக் கூட்டணிகள் எடுத்துள்ள சிரத்தைகளை சிரிப்பாகவோ அல்லது சீரியாதாகவோ காண கீழேயுள்ள கார்ட்டூன்களை பாருங்கள்! நடுநிலையோடு அனைத்துக் கருத்துப்படங்களையும் வழங்கலாம் என நினைத்திருந்தாலும் ஆளும் கட்சிக்கு எதிராகத்தான் மிகுதியானக் கருத்துப்படங்கள் கிடைத்துள்ளன.
தினமணியில் வந்த 'திரும்பிப் பார்க்கின்றோம்!' எனும் இக் கார்ட்டூன், ஏதோ நம் முதல்வரை மட்டும் குறைக்கூறுவது போல் உள்ளது. அதிகாரத்தில் உள்ளதினால் அவருக்கான பொருப்பு கூடுதலாக இருப்பினும், பொருப்புடன் இருக்கவேண்டிய எதிர்க் கட்சிகளோ அல்லது பெரும்பாலான ஊடகங்களோ ஒரு சார்புநிலைக் கொள்கையுடன் பிறரைச் சாடுவதில் தான் விரயம் செய்தனரே தவிர, ஆக்கபூர்வமான முறையினில் திட்டமிட்ட தமிழ் இனப்படுகொலையினை தடுக்க முன்வரவில்லை என்பதே கசப்பான உண்மை!
"காட்டிக் கொடுத்த கருணாவினாலும், கண்டும் காணாமல் இருந்த கருணாநிதியினாலும்" தான் ஈழத் தமிழினம், தவிர்க்கப்பட வேண்டிய ஒரு கொடுமையான இனப்படுகொலையினைச் சந்திக்க நேர்ந்தது. இம்மனிதப் பேரவலத்திற்குப் பின்னரே சில ஊடகங்கள் தன் நிலையினை மாற்றிக்கொண்டன. எவ்வாறாக இருப்பினும் சமகாலத்தில் இருக்கும் நாம் மறந்தாலும் அல்லது மறக்கடிக்கப்பட்டாலும் வரலாறு இவர்களை மன்னிக்கவே மன்னிக்காது.
"காட்டிக் கொடுத்த கருணாவினாலும், கண்டும் காணாமல் இருந்த கருணாநிதியினாலும்" தான் ஈழத் தமிழினம், தவிர்க்கப்பட வேண்டிய ஒரு கொடுமையான இனப்படுகொலையினைச் சந்திக்க நேர்ந்தது. இம்மனிதப் பேரவலத்திற்குப் பின்னரே சில ஊடகங்கள் தன் நிலையினை மாற்றிக்கொண்டன. எவ்வாறாக இருப்பினும் சமகாலத்தில் இருக்கும் நாம் மறந்தாலும் அல்லது மறக்கடிக்கப்பட்டாலும் வரலாறு இவர்களை மன்னிக்கவே மன்னிக்காது.
சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தினமணி, தினமலர், விகடன், கல்கி & துக்ளக் தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!
5 கருத்துகள்:
super brother
thaanga mudijalaiiiiiii........
ஈழ இறுதிப்போரின் போது நிலவிய தமிழகமக்களின் மனக்குமுறல் மற்றும் தாக்கத்தை நீர்த்துப் போகச் செய்ததில், திருமா, பாமாக, அதிமுக, வைகோ, நெடுமாறன் எனப் பலர் பிரிந்தும் இணைந்தும் இருந்தது ஒரு காரணம் எனினும், ஆட்சியில் இருந்துகொண்டே, மத்திய அரசின் இலங்கை தமிழர் அழிப்புச் செயல்பாடுகளின் நடவடிக்கைகளை அறிந்திருந்தும் தன்சுயலாபத்திற்காய் , காங்கிரஸை (சோனியவை) எதிர்க்காது, அவர்களுக்கு சாமரம் வீசிய முக முக்காலத்திலும் மன்னிக்கூடாத, முடியாத இனத்துரோகம் செய்து விட்டார் என்ற ஈழத்தமிழர்களின் கோபம் நியாயமானதே.
"காட்டிக் கொடுத்த கருணாவினாலும், கண்டும் காணாமல் இருந்த கருணாநிதியினாலும்" தான் ஈழத் தமிழினம், தவிர்க்கப்பட வேண்டிய ஒரு கொடுமையான இனப்படுகொலையினைச் சந்திக்க நேர்ந்தது. இம்மனிதப் பேரவலத்திற்குப் பின்னரே சில ஊடகங்கள் தன் நிலையினை மாற்றிக்கொண்டன. எவ்வாறாக இருப்பினும் சமகாலத்தில் இருக்கும் நாம் மறந்தாலும் அல்லது மறக்கடிக்கப்பட்டாலும் வரலாறு இவர்களை மன்னிக்கவே மன்னிக்காது!
----------------------------------------------------------------------
திரு. வாசன் அவர்களுக்கு.... கருணாநிதி அவர்களோ ஸ்பெக்ட்ரத்திலிருந்து விடுபடவே முனைப்பாக, கண்மூடித் தனமாக சோனியாவிற்கேற்ப தாளமிட, மற்ற சக்திகள் அனைத்தும் ஆக்கபூர்வமாக தமிழர்களைக் காத்திட முனைந்திடாது அவரைக் குறை கூறுவதிலேயே தன் கடன் முடிந்ததாக பொருப்பின்றி இருந்தமையால் இத்துரோக வரலாற்றில் அனைவருக்குமே பங்கு உண்டு எனும் வகையில் குறிப்பிட்டிருந்தேன். இருப்பினும் மறைமுகமாக ஆளும் அரசிற்கு ஆதரவாக என் வரிகள் அமைந்துவிட்டனவோ எனக் கருதி மேற்கண்ட வரிகளை தற்போது இணைத்துள்ளேன். தங்களின் ஆக்கபூர்வமானக் கருத்திற்கும் சுட்டிக் காட்டியமைக்கும் நன்றி!
நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
கருத்துரையிடுக