வியாழன், 21 ஜூலை, 2011

கார்ட்டூன்களைப் பாருங்க...குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க-11!

உள்ளூர் கார்ட்டூன்கள் மட்டுமல்ல… இம் முறை வளைகுடா நாட்டு கார்ட்டூன்களை கண்டும் குலுங்கவோ குமுறவோ செய்யலாம். 

சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தினமணி, தினமலர், தினக்குரல், கல்கி, & துக்ளக் தமிழ் இதழ்களுக்கும், அரேப் நியூஸிற்க்கும் நன்றியோ நன்றிகள்!!

குறிப்பு: நேரமின்மையால் ஒரு கோர்வையாக இம்முறை கேலிச்சித்திரங்களை வகைப்படுத்த இயலவில்லை. பொருத்தருளவும்.

Download As PDF

திங்கள், 18 ஜூலை, 2011

நம்மாளுங்கக் கிட்ட தான் பாடம் படிச்சிருப்பாங்களோ இந்த உலக அரசியல்வாதிகள்?!

சிரித்து சிரித்து வயிறு புண்ணானால் அதற்கு நம் கம்பெனி பொறுப்பல்ல!…  படங்களைப்பாருங்க….’உலகிலுள்ள அரசியல்வாதிகளின் மக்கள் மன்ற நடவடிக்கைகளைப் பார்க்கறப்போ ’ நம்மாளுங்கக் கிட்ட தான் பாடம் படிச்சிருப்பாங்களோ ’ன்னு நினைக்க வைக்குது!

சீனாக்காரன் மட்டும் எந்தச் சிக்கலுமில்லாம எப்படி முன்னேறுகின்றான் என்பதை கடைசிக் காட்சியைக் கண்டால் புரியும். – ஹி… ஹி… அதுவும் நம்மாளுங்ககிட்ட இருந்து காப்பியடிச்சது மாதிரித்தான் தெரியுது!

கடைசியாக சீனா…
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

என்னே…
அமைதி!

என்னே…ஆதரவு!

என்னே…ஒத்துழைப்பு!
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இவுகளும் நம்ம முன்னாள் பிரதமர் தேவகவுடாவிடம் தான் பாடம் படிச்சாங்களோ?!?!

இச்சுவாரசியமானக் காட்சிகளை என்னுடன் பகிர்ந்த நண்பர் திரு. பாலமுருகன் அவர்களுக்கு நன்றி!
Download As PDF

திங்கள், 11 ஜூலை, 2011

…ங்கொய்யால, என்ன ஒரு மிருக சிந்தனை!...

அம்பியின் அலப்பறை - 2!  (நகைச்சுவையுடன் சமூக / அரசியல் அலசல்)

ஜல்லிக்கட்டு என்பது, விலங்குகளை கொடுமைப்படுத்துவதை தடுக்கும் சட்ட விதிகளை மீறும் நிகழ்வாக உள்ளது. பொழுதுபோக்கிற்காக, காளைகள் கொடுமைப் படுத்தப்படுகின்றன - பா.ஜ., எம்.பி.,யும், பாலிவுட் நடிகையுமான ஹேமமாலினி:

அம்பி: …ங்கொய்யால, என்ன ஒரு மிருக சிந்தனை! ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியால வீரம் என்கின்ற பெயரில் எத்தனை பேர் தங்கள் அங்கங்களை இழந்து “மாற்றுத் திறனாளி”களா மாற்றப்படறாங்கன்னு மனிதச் சிந்தனையோடு சொல்லியிருப்பீங்களோன்னு சித்த நேரத்துல சித்தம் தடுமாற இருந்தேன். சபாஷ்! மேனகா காந்திக்கு அடுத்தபடியா “மிருக சிந்தனை மாமேதை!”ன்னு உங்களுக்கு பட்டமே கொடுக்கலாமுங்க…

--------------------------------------------------------------------------------------------------------------

சட்ட அமைச்சர் சுப்பையா நீக்கம்! ஒன்றரை மாதத்தில் தமிழக அமைச்சரவையில் 2 வது முறையாக இன்று மாற்றம் - அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்:

அம்பி: ஒவ்வொரு நாளும் கோட்டைக்கு போறதுக்கு முன்னாடி மந்திரிகள் அனைவரும் தினமும் காலையில் செய்தித் தாள் படிக்கறது ரொம்ப நல்லது. இல்லைன்னா, இலாகா போச்சா இல்ல…. இருக்கையே போச்சான்னு கண்டுபிடிக்கறது ரொம்பவும் கஷ்டப்பட வேண்டிவரும்!

--------------------------------------------------------------------------------------------------------------

இலங்கை கடற்படையில் சீன வீரர்கள்? உஷாரான உளவு பிரிவுகள் விசாரணை
அம்பி: இன்னமும் ஒன்னும் கெட்டுப்பொயிடலை. இந்திய இறையாண்மைக்காகவும் பாதுகாப்பிற்காகவுமாவது இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைத்திட இந்தியா முயற்சிக்கணும். இன்னமும் சோனியாஜியின் ஈகோவிற்கு சோரம் போகாம நாட்டின் நலனை பார்க்கலைன்னா தானா வச்சு கிட்ட ’ஆப்பு’வை, சீனாக்காரன் அப்பப்ப அசைச்சு அசைச்சுத்தான் பார்ப்பான் மாப்பு!

--------------------------------------------------------------------------------------------------------------

போதையில் அட்டகாசம் சிறப்பு எஸ்ஐயை புரட்டி எடுத்த ஏட்டு

அம்பி: ஹி..ஹி… இது டிரைலர் பீஸ்! இதுக்கே இப்படின்னா… இன்னும் போகப் போக பார்க்கத்தான போறீங்க… மாஸ்டர் பீஸை!

--------------------------------------------------------------------------------------------------------------

சூரிய சக்திக்கு தமிழக அரசு வழங்குகிறது முக்கியத்துவம் : ஜெயலலிதா உறுதி

அம்பி: உதய சூரியனை முடக்க நினைச்சாலும், நிஜ சூரிய ஒளியின் வாயிலா மின்சாரம் சேமிக்கும் பணியை நல்லாவே முடுக்கி விடுங்க. சென்ற முறை ‘நிலத்தடி நீர் சேமிப்பு’ க்கு முக்கியத்துவம் கொடுத்தீங்க! அந்த எபிசோட் முடிஞ்சுடுதுன்னு விட்டுடாம அதையும் தொடர்ந்து கடைபிடிக்க வழி செய்யுங்க!

--------------------------------------------------------------------------------------------------------------

லோக்சபாவில் கற்றதை விட, விவசாயிகளிடம் அதிகம் கற்றேன்:ராகுல்

அம்பி: ஹி ஹி… இதுக்கே ஏன் இப்படி சந்தோஷப்படறீங்க. வர்ற எலெக்ஷன்ல வாக்காளர்களாகிய நாங்க புகட்டற பாடத்தையும் சேர்த்து இன்னும் நல்லா கத்துக்கத் தானே போகப்போறீங்க!

--------------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு: இதிலுள்ள செய்திகள், ஓவியங்கள் அனைத்தும் முன்னணி நாளிதழ்களிலும், இணையத்தளங்களிலும் சேகரிக்கப்பட்டது. அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். அரைவேக்காடு அம்பியின் பிரதிபலிப்பாக இருக்கும் கார்ட்டூனை வரைந்த பாலா அவர்களுக்கு சிறப்பு நன்றிகள்! Download As PDF

திங்கள், 4 ஜூலை, 2011

அரைவேக்காடு அம்பியின் அலப்பறை - 1

ஹி.. ஹி… நான் எம்புட்டு தான் புத்திசாலியாயிருந்தாலும் நம்மள “அரைவேக்காடு அம்பி”ன்னு தான் செல்லமா கூப்பிடறாங்க.  வீட்டுல தான் வாயைத் திறந்து தகிரியமா எதுவும் பேசமுடியலை. ”வாங்க பழகுவோம்.. பேசுவோம்..!”ன்னு தம்பி மூர்த்தி கூப்பிட்டதால, இந்த வலைப்பூவுல வந்தாவது வாயாற அனத்துலாமுன்னு கிளம்பி வந்துட்டேனுங்க… மக்கா... என்னைக் கொட்டறதும் ஷொட்டறதும் உங்க இஷ்டமுங்கோ...

-------------------------------------------------------------------------------------------------------------

உள்ளாட்சி தேர்தலுக்கு முன் கூட்டணிகுறித்து முடிவு: ராமதாஸ்

அரைவேக்காடு  அம்பி:  ங்கொய்யால யார்ர்ராஅது... பார்ர்ய்ய்ய்யா...”மனிதன் மாறிவிட்டான், மரத்தில் ஏறிவிட்டான்” எனப் பாடுவது?! அட... மறுபடியும் பார்ர்ய்ய்ய்யா...”சுச்சுவேஷன் சாங்” ன்னு சுழிச்சுகிட்டு போறதை!?
-------------------------------------------------------------------------------------------------------------
ஆந்திராவில் தனி தெலுங்கானா மாநில விவகாரம் கூண்டோடு ராஜினாமா செய்ய காங்கிரஸ் எம்.பி.,க்கள் முடிவு

அரைவேக்காடு  அம்பி: எப்படியும் வர்ற தேர்தல்ல இருக்கு ஆப்பு! இப்படி ஏதாவது தகால் தக்கடி வேலை செஞ்சாலாவது “கொள்கை”க்காக துறந்தோம்ன்னு ‘டெபாசிட்’டையாவது தேத்திக்கலாம் மாப்பு!.

-------------------------------------------------------------------------------------------------------------
பீகாரில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பாதித்தகுடும்பத்தினரை சந்தித்து ராகுல் ஆறுதல்

அரைவேக்காடு  அம்பி:  ஹி..ஹி... அதே போல அப்பா காலத்து ‘அமைதிப்படையால” அப்புறமா அம்மா காலத்து மத்திய அரசின் மங்குனி அயலுறவுக் கொள்கையால, மறைமுகமாக (?!?!) இலங்கையில் நேரிட்ட மனிதப் பேரவலத்தினில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை சந்தித்து ஆறுதலையும் நிவாரணத்தையும் அளிக்க ஆவனச் செய்வாரா நம்ம இராகுல்ஜி?!
-------------------------------------------------------------------------------------------------------------

ரீசார்ஜ் செய்து புகைக்கலாம் : வந்தாச்சு இ-சிகரெட் இனி, வராது கேன்சர்!
சிகரெட்டின் முனை மேல் நெருப்பு போல இருக்கும். ஆனால் அது எல்.ஈ.டி எனும் மின்னணு சாதனம். சுடாது. புகைவரும் ஆனால் கேடு வராது
அரைவேக்காடு  அம்பி:  ஹி.. ஹி... அப்படியே ’இ-சரக்கு’க்கும் கொஞ்சம் ஏற்பாடு பண்ணினா ரொம்ப புண்ணியமாப் போகும் நைனா! குடல் வெந்து குடும்பங்களும் நொந்து போகாம இருக்குமில்ல...

-------------------------------------------------------------------------------------------------------------
சீனாவின் கரன்சிக்கு இலங்கை அனுமதி

அரைவேக்காடு  அம்பி:  ஈழத் தமிழர் நிலப்பரப்பினில் பெரும்பான்மை விடுதலைப்புலிகள் ஆண்ட வரை சீனாக்காரன் ஏதேனும் சீன் போட முடிஞ்சாதான்னு நீங்களே யோசிச்சுப் பாருங்க..
-------------------------------------------------------------------------------------------------------------

இலங்கை போர் குற்றம் செய்ததாக ஐ.நா குழு கூறியுள்ளது: ஜெயலலிதா

அரைவேக்காடு  அம்பி:  முதல்வர் இருக்கையில் இருக்கற நீங்க ஒருத்தராவது உண்மையைக் கூற முனைந்துள்ளது சற்று ஆறுதலை தருகின்றது. இந்த விஷயத்துல காந்திஜியின் குரங்குப் பொம்மைப் போல (காணாமல், பேசாமல், கேட்காமல்... ஆனால் தந்தி மட்டும் அடித்துக் கொண்டு) மு.க. அமைதியா இருந்ததால இருந்ததால நீங்க சீன் போடறிங்களோன்னு ஒரு டவுட்டு இருக்கு. ஏன்னா ஒரு பக்கம் சட்டசபையில பொருளாதாரத் தடைன்னு தீர்மானம் போட்டுட்டு மறுபக்கம் வர்த்தக நோக்கிற்காக இலங்கைக்கு கப்பல் ஓட்ட அனுமதி கொடுத்திருக்கீங்களே! எங்களை வச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலை தானே...!?

-------------------------------------------------------------------------------------------------------------

முதல்வர் ஜெயலலிதா பெயரில் திடீர் நகர்: புறம்போக்கு இடம் ஆக்கிரமிக்க முயற்சி

அரைவேக்காடு  அம்பி: ஆரம்பிச்சுட்டாங்கய்யா... ஆரம்பிச்சுட்டாங்க! ஆட்சி மாறினாலும் காட்சி மாறலையே! இவுக போன ஆட்சியில பறிகொடுத்த இடங்களை மீட்கப் போறேன்னு பீளா விடறது இருக்கட்டும். இரத்தத்தின் இரத்தங்களை அடக்கிவாசிக்கச் சொல்லுங்க. இல்லன்னா... உள்ளாட்சி தேர்தல்ல இளம் வாக்காளர்கள் தி.மு.க. வுக்கு ஆப்பு வச்ச மாதிரி உங்க கட்சிக்கும் பெரிய ஆப்பா வச்சிடுவாங்க..

-------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு: இதிலுள்ள செய்திகள், ஓவியங்கள் அனைத்தும் முன்னணி நாளிதழ்களிலும், இணையத்தளங்களிலும் சேகரிக்கப்பட்டது. அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். அரைவேக்காடு அம்பியின் பிரதிபலிப்பாக இருக்கும் கார்ட்டூனை வரைந்த பாலா அவர்களுக்கு சிறப்பு நன்றிகள்!

Download As PDF