கீழே வர்ற இந்த
சின்ன கதையை படிச்சுட்டு சிரிக்காம இருக்கறவங்களுக்கு, 1 குச்சி மிட்டாயும், 3 குருவி
ரொட்டியும் இலவசமாக தருவதாக ஒரு அறிவிப்பு வந்துருக்குங்க. நாஸ்தா பிரியர்களுக்கும் நகைச்சுவை
உணர்வு மங்கியவர்களுக்கும் ஜமாய்ச்சிட நல்ல ஒரு வாய்ப்பு! நழுவ விட்டுடாதிங்கோ!! சமீபத்துல மக்கள் மன்றத்துல, அதாங்க பார்லிமெண்ட்ல நடந்த
கதை தானுங்க…. இதோ மீதி உங்கள் பார்வைக்கு!
மக்களவையில் ஒரு
காங்கிரஸ் உறுப்பினர் பேசும் போது நம்ம பாக்யராஜ் ஸ்டைல்ல ஒரு குட்டிக் கதையை சொன்னாருங்க.
அவர் சொன்ன கதையை அப்படியே நீங்களும் கேட்டுக்கோங்க…
”அதாவது…. ஒரு
தந்தை தனது 3 மகன்களிடமும் 100ரூபாயினை தந்து அவருடைய அறை முழுவதும் நிரம்பும் படியான
பொருளை வாங்கிட்டு வரச் சொன்னாருங்க. உடனே
அவரோட முதல் மகன் ஏதோ ஒன்னு வாங்கி வந்தாருங்க. ஆனா, அது ஒரு குட்டி கப்போர்டு சைஸைக்
கூட நிரப்பலிங்க. உடனே இரண்டாவது மகன், இலவம்
பஞ்சா வாங்கி வந்து அறை முழுவதும் நிரப்ப பார்த்தாருங்க. ஆனாலும் அந்த முயற்சியும் அவுட்டாகி போச்சுங்க. மூணாவது மகன் நேரா கடைக்கு போயி ஒரு ரூபாய்க்கு
மெழுகுவர்த்தி வாங்கிவந்து தந்தையோட அறையில ஏத்துனாரு பாருங்க... உடனே வெளிச்சம் பளிச்சுன்னு
அறை முழுவதும் நிரம்பிடுச்சு!”
இந்தக் கதையை சொல்லிட்டு
கம்பீரமா அவை உறுப்பினர்களை பார்த்துகிட்டு, தன் தொண்டையைக் கனைச்சுகிட்டு அந்தக் காங்கிரஸ்
எம். பி, கொஞ்சம் எம்பி தன்னோட மாஸ்டர் பீஸை சொறுவுனாரு பாருங்க...
“இந்தக் கதையில
வர்ற மூணாவது மகனைப் போல தான் நம்ம பிரதமர் மன்மோகன் சிங். அவர் பதவியேற்ற நாளிலிருந்து
நம் இந்தியா முழுவதும் ஒளிவீசத் தொடங்கிவிட்டது!”
இத சொல்லி முடிச்சுட்டு
அப்பளத்துக்காக, சாரி அப்ளாசுக்காக காத்திருந்தவருக்கு கடைசிபெஞ்சு வழியா ஒரு ஆப்புதாங்க
வந்தது. அது என்னான்ன….
கடைசி பெஞ்ச்: “அடுங்கொய்யால…. பாக்கி 99ரூபாய் எங்கலேய் போச்சு…?”
ஹி. ஹி… இந்தக்
கதையை மின் அஞ்சல் வழியாக எனக்கு கிச்சு கிச்சு மூட்டி ஒரு குச்சி மிட்டாயும் 3 குருவி
ரொட்டியும் தர விடாம பண்ணின நண்பர் திரு. ஜெயராமன் அவர்களுக்கும், இதனை வடிவமைத்த மூலகர்த்தாவிற்க்கும்ஒரு பெரிய கும்புடு போட்டுகிட்டு நன்றியும் சொல்லிகிட்டு நான் நடையைக் கட்டறேனுங்கோ…
Download As PDF