ஞாயிறு, 15 ஜனவரி, 2012

தை பிறக்கட்டும்... இயல்பு நிலை எய்தட்டும்...!

Download As PDF

வெள்ளி, 6 ஜனவரி, 2012

கார்ட்டூன்களைப் பாருங்க... குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க-19

தானே புயல் வந்து தாறுமாறாய் புதுவையையும் தமிழகத்தையும் வரலாறு காணாத அளவில் புரட்டி போட, போர்க்கால அடிப்படையில் நடக்க வேண்டிய நிவாரணப்பணிகள் மெத்தனமாக நிகழ்கின்றது.  இயற்கையின் சீற்றத்தினை ஒப்புக்கொள்வதிலோ துரிதமாக நிவாரணப் பணிகளை முடக்கிவிடுவதிலோ அரசு இயந்திரங்கள் முனைந்திடாமல் ஊடகங்கள் வாயிலாக பொய் பிரச்சாரம் செய்து தமிழக முதல்வரின் நன் மதிப்பினை பெறவே முயற்சிக்கின்றனர். சுனாமியால் உயிர்சேதம் எந்த அளவிற்கு இரணத்தினை உண்டு பண்ணியதோ அதே போல் தானே புயல் பொதுமக்களின் வாழ்வாதாரத்தினை புரட்டி போட்டுள்ளது. அண்டை மாவட்ட மக்களோ அல்லது மாவட்ட ஆட்சியினரோ தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாது இருப்பது கண்டனத்திற்குரியது. 

"எரிகின்ற வீட்டில் பிடுங்குகிற வரை இலாபம்" என்பது போல் அரசு நிர்ணயித்துள்ள  நிவாரணத் தொகையினில் கூட கை வைத்தும், பாரபட்சத்துடனும் செயல்படுவதினை சமீபத்திய சாலை மறியல்கள் நிரூபிக்கின்றன.

கடுமையான மின்பாதிப்பினை சமாளிக்க கடலூர் மாவட்ட மக்கள் மெழுகுவர்த்தியினைக் கூட பெறுவதற்கு பட்ட பாடு வேதனைக்குரியது. 

சரி, நாம் கார்ட்டூனை பார்த்து வழக்கம் போல்……. கு….. கு….வது உங்க இஷ்டமுங்க...!



















சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த துக்ளக், தினமணி, விகடன், கல்கி  ,... போன்ற அனைத்து தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!
Download As PDF

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

சராசரியாய் கழிந்துவிடாமல்... 2012

தன்னானே.. தானேநன்னே..!!” என
தாளம் போட்டு ஆட்டமிட்டு
ஆனந்தத்துடனே நாம்
ஆங்கிலப் புத்தாண்டினை
 
 
வரவேற்கவே நினைத்திருக்க….
 
 
 தானேஎனும் புயல் வந்து
தாறுமாறாய் தாக்கிட
பூமித் தாயினை
புண்ணாக்கி மகிழ்ந்திட
 
 
மீனவர்களும் விவசாயிகளும்
இன்ன பிற சமூகத்தாரும்
மீளாத்துயரினிலே
மூழ்கியிருக்கும் வேளையிலே
முல்லைப் பெரியாறு முதல்
கூடங்குள அணு உலை வரை
இலங்கைத் தமிழர் முதல்
இந்தியத் தமிழர்கள் வரை
 
 
சந்திக்கும் சோதனைகளை
சாதனையாய் ஆக்கிடுவாயா!
சராசரியாய் கழிந்துவிடாமல்
சரித்திரம் தான் படைத்திடுவாயா!?

களிப்புடனே உன் வரவினை
கொண்டாடிட இயலாதிடினும்
புதிதாய் பூத்திட்ட உன்னை
புன்னகையுடன் வரவேற்கின்றோம்!.
 
 
வருகவே   வருக   2012!!
Download As PDF