புதன், 24 ஆகஸ்ட், 2011

“மாப்பு…. வச்சுட்டான்யா ஆப்பு!" - அம்பியின் அலப்பறை – 4

ங்கொய்யால… நிசமாவே நம்மள வச்சு காமெடி பண்ணீட்டாங்களே..!



போலி ஆவணங்களுக்கு பவர் ஃஆப் அட்டர்னி பெற்ற நடிகர் சிங்கமுத்து, வடிவேலுவிற்க்கு நிலத்தினை விற்பனை செய்துள்ளார். உண்மையான உரிமையாளர் நில அபகரிப்பு வழக்கு தொடரவே “2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை திருப்பி ஒப்படைத்தார் நடிகர் வடிவேல்”

“மாப்பு…. வச்சுட்டான்யா ஆப்பு! ங்கொய்யால… நிசமாவே நம்மள வச்சு காமெடி பண்ணீட்டாங்களே..!”ன்னு வடிவேலு புலம்பறது உங்க காதுக்கும் கேட்குதா?!
---------------------------------------------------------------------------------------------------------------------------



"சமச்சீர் கல்வித் திட்டத்தைப் பற்றி நாங்கள் கூறிய போது, யாருமே கேட்கவில்லை. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு காரணமாக, திட்டம் அமல்படுத்திய பின், இப்போது பல்வேறு குறைகளைக் கூறி அங்கலாய்த்துக் கொண்டால் எப்படி?'' - சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா ஆவேசக் கேள்வி!

அடி ஆத்தி…!  மூட்டைப்பூச்சிக்காக  வீட்டைக் கொளுத்தறேன்னு  சொன்னதை நீங்கல்லாம்  ஏன்  ஒத்துக்கலைங்கற  மாதிரியில்ல  இருக்குது...?!?!
---------------------------------------------------------------------------------------------------------------------------



இறந்ததாக  நினைத்து  சவக்குழியில்  இறக்கியபோது  வாலிபர்  உயிர் பிழைத்தார்!  வேலூரில்  உள்ள  தனியார்  மருத்துவமனையில்  இறந்து விட்டதாக  டாக்டர்கள்  தெரிவித்துள்ள கல்குவாரி தொழிலாளி தற்போது தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை – தினகரன்

அரசு மருத்துவமனை சரியில்லைன்னு தான் ஜனங்க தனியாரை நாடறங்க. ஏழைங்கன்னாலே எல்லோருக்கு இளக்காரமா?. உயிர் காக்கற மருத்துவரே இப்படின்னா…. தமிழக அரசு, இவுகளுக்கும் அந்த மருத்துவமனைக்கும் தக்க தண்டனை கொடுத்தாத் தான் தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் சற்று பொருப்பும் மனித உயிர்கள் மீது மதிப்பும் வரும்!
---------------------------------------------------------------------------------------------------------------------------



புதிய  தலைமைச்  செயலகக்  கட்டடத்தை  மருத்துவமனை,  மருத்துவக்  கல்லூரியாக  மாற்றும் தமிழக முதல்வர்  ஜெயலலிதாவின்  அறிவிப்பிற்கு  மறுபரிசீலனை  தேவை – தினமணி தலையங்கம்.

”கேளா மன்னனும் கெடுவான்!” எனும் மொழிக்கேற்ப ஆளும் அரசின் செயல்களை அவ்வப்போது இதுமாதிரியான நடுநிலையான தலையங்கம் வாயிலாக வர்றது ஆரோக்கியமான விஷயம் தானே! ---------------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி: ஓவியர் பாலா மற்றும் அனைத்து முன்னணி தமிழ் ஊடகங்கள்


Download As PDF

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

வாங்க…வளைகுடா கார்ட்டூன்களைப் பார்க்கலாம்! - 1

குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்டுகின்றாயே என என் நண்பர்கள் என்னை சில நேரங்களில் கேலி செய்வதுண்டு.  சரி நம் பார்வையை எதிலெதில் அகலப்படுத்த இயலுமோ அதைப் புரிவோமே என முதல் சுழி இட்டு அதை தங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.  உலக நடப்பை நாமும் உன்னிப்பாக நோக்கலாமே இக் கார்ட்டூன்கள் வாயிலாக..  வாங்க… வளைகுடா கார்ட்டூன்களைப் பார்க்கலாம்!

சோமலியா நாட்டின் வறுமையை துகிலுரிக்கும் ஓவியம்
 
 தங்கம் விலை உயர்வு

 அமெரிக்காவின் சமீபத்திய அரசியற் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள்

 ஆட்சி மாற்றம் கோரி இன்னமும் நடக்கின்ற புரட்சியும் இராணுவ அடக்குமுறைகளுக்கும் இடையில் ரமதான் நோன்பு

வர்க்க ரீதியில் பிளவுண்டுள்ள  தன் குடிமக்களை மேம்படுத்த அமெரிக்கா திணறல் 

 அமெரிக்கா மூக்கை நுழைத்துவிடக்கூடாது என தாய்லாந்திற்க்கு உதவ முயலும் சீனா


 அமெரிக்காவின் நிதிச் சுமை (நெருக்கடி)

உஷ்ணத்தில் உலகப் பந்து


மனிதர்களின் மனதில் ஒரு வலுவான கருத்தாக்கத்தை பதியவைப்பதில் பேச்சின் / எழுத்தின் பங்கை விட, மிக எளிதான முறையிலான கார்ட்டூன்களின் பங்கு முதன்மையிடத்தினைப் பெற்றுவிடுகின்றது. இதனை பிரசுரித்த அரேப் நியூஸ் நாளிதழ் இதழிற்கும், கருத்தோவியம் வரைந்தவர்க்கும் மனமார்ந்த நன்றிகள்!
Download As PDF

சனி, 20 ஆகஸ்ட், 2011

நல்ல வேளை… மாட்டுக் கொட்டகையாய் மாத்தாம இருந்தாங்களே…!

அம்பியின் அலப்பறை – 3


டாஸ்மாக்கடையால்மனஉளச்சல்பெண்களைவக்கிரமாககேலிபேசும்குடிமகன்களால்தினமும்தகராறு தினகரன்

ஏனுங்க… இது ஏதோ இந்த ஆட்சியிலய முளைச்ச மாதிரி சொல்றீங்க! அரசு டாஸ்மார்க்கின் வருமானத்தினை முந்தைய ஜெ. அரசு பிள்ளையார் சுழி போட அதை அமோகமாக அபிவிருத்தி செஞ்ச சாதனை யாருன்னு எல்லாக் ‘குடிமகன்’களுக்கும் தெரியாததா என்ன?!



தலைமை செயலக புதிய கட்டிடத்தை மருத்துவமனை ஆக்குவதில் எனக்கு அதிருப்தி இல்லை – கலைஞர். மு. கருணாநிதி

நல்ல வேளை… மாட்டுக் கொட்டகையாய் மாத்தமா இருந்தாங்களே இந்தம்மா… அதுவரைக்கும் சந்தோஷம் தான்னு இவரு பெருமூச்சுவிடறது நமக்கும் கேட்காமலா இருக்கும்.?!






ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 20 சிலிண்டர்கள் பயன்படுத்துகின்றன -  மத்திய அமைச்சரவைக்கு ஆய்வுக்குழு தகவல்

என்னங்க நீங்க… பொதுமக்களின் பயன்பாட்டைப் பற்றிச் சொல்லாம உங்க சின்னவீடு, பெரிய வீடு கணக்கையெல்லாம் எடுத்துச் சொல்றீங்க. ஒரு சிலிண்டர் வாங்கினப் பின் அடுத்த சிலிண்டருக்கு 21
 நாள் கழிஞ்ச பின்னதான் பதியமுடியும்ங்கற விதி இருக்கறப்போ அது எப்படிங்க வருடத்துக்கு 20 சிலிண்டர் வரும்? ஹைய்யோ… அய்யோ!



கடந்த 30 ஆண்டுகளாக இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நாராயணமூர்த்தி அந்நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து நேற்று விலகினார். புதிய தலைவர் மற்றும் பணியாளர்களின் சிறப்பான செயல்பாடுகளால் இன்போசிஸ் நிறுவனம் மேலும் பல உயரங்களை எட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏனுங்க… இதே மாதிரி அரசியல்வாதிங்களும் செஞ்சா… நாட்டுக்கு எம்புட்டு நல்லது நடக்கும்.  பதவியிலிருந்து விலகிட்டு வேணும்ன்னா ஆலோசனை மட்டும் தரலாமில்லீங்களா…


Download As PDF

புதன், 17 ஆகஸ்ட், 2011

கார்ட்டூன்களைப் பாருங்க...குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க-12

வெள்ளையனே வெளியேறு! என அறைகூவல் விடுத்த காலம் போய் இன்று கொள்ளையனே வெளியேறு!! என்கின்ற நிலைக்கு நம்மை, நாட்டை ஆளும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மக்களை தள்ளிவிட்டு உள்ளனர்.  சுதந்திரம் என்பது...   அரசியல்வாதிகள் ஊழல் புரிவதற்கா..? அல்லது கார்ப்பரேட் முதலாளிகள் நிழலில் அரசாங்கத்தினை வழிநடத்துவதற்கா..? அல்லது அரசாங்க அதிகாரிகளின் வர்க்க பெருக்கிற்கா..? 

எது எப்படியோ... இப்படி மனம் விட்டு அனத்துவதற்ககாகவாது நமக்கு இந்தளவிற்கு வாய்ப்பிருக்கின்றதே என நினைத்து சுதந்திரத்தினை எண்ணி பெருமூச்சு.. மன்னிக்க பெருமகிழ்வுக் கொள்வோம்! வழக்கம் போலக் கார்ட்டூன்களைப் பாருங்க...குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க...





















குறிப்பு:
வழமைப்போல் மாநில ஆளும் அரசாங்கம் குறித்து கார்ட்டூன் இல்லையே என ஆதங்கம் வேண்டாம். காப்புரிமைச் சிக்கலில்லாத கார்ட்டூன்கள் இதுவரை எம் கண்களுக்கு படவில்லை. ஆதலால்... இம்முறையும் அவர்கள் தப்பித்து விட்டனர். ஹி..ஹி..
 
சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தினமணி, தினமலர், துக்ளக், கல்கி & துக்ளக்.. போன்ற அனைத்து  தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!
Download As PDF