புதன், 30 மார்ச், 2011

கார்ட்டூன்களைப் பாருங்க...குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க!-6

தமிழகம் முழுவது ஆறு கோடி மக்களை மகிழ்விக்க அரசியல்வாதிகள், என்னமாய் மாய்ந்து மாய்ந்து ஓரங்கமாகவும், கூட்டணியாகவும் நர்த்தனமிட அதைக் கண்டு நாம் மகிழாமல் இருப்பது முறைதானா? பாருங்க... பாருங்க... பார்த்துக்கிட்டே இருந்திடாம கொஞ்சம் பகுத்தறிவோடும் முடிவெடுங்க..!



இலவச மாயைகளை இரு பெரும் ஆளும் / எதிர் அணிகளுமே மக்களுக்கு வாரிவழங்குகின்றது. சிறிதும் கூச்சமின்றி ஆளும் கட்சியினரின் இலவச தேர்தல் அறிக்கையைக் காப்பியடித்ததோடின்றி நம்ப இயலாத அளவிற்கு பற்பல இத்யாதிகளையும் சேர்த்துக்கொண்டது அ.தி.முக.  அதோடின்றி  நம்பகத்தன்மையினில் ஜெயலலிதா இன்னமும் மாறவில்லை என்பதை இன்னல்கள் நிறைந்த காலக்கட்டங்களில் உறுதுணையாய் இருந்து, தன் ம.தி.மு.க. வைவிட அ.தி.மு.க. வின் வளர்ச்சிக்கு பாடுபட்ட வை. கோ. வை,  தேர்தல் நேரத்தில்  கழட்டிவிட்டு நம்பிக்கைத்துரோகம் புரிந்ததிலேயே புலப்படுகின்றது.  பொதுவுடமைக் கூறி வாக்கு வாங்கும் அணிகளோ சிறுபான்மையாக மாறி ஏதோ தான் நிற்கும் தொகுதிகளில் வென்றால் போதும் என சமரச மார்க்கத்தில் சத்தமின்றி கரைந்துவிட்டது.




















சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!


முக்கிய குறிப்பு:  எதிரணிக் குறித்து அதிகம் கார்ட்டூன்கள் இல்லாததால் அவர்கள் ஏதோ உத்தமர்கள் என்று மேம்போக்காக நம் அறிவார்ந்த வாசகர்கள் சிந்திக்க மாட்டார்கள் என நம்புவோமாக...



Download As PDF

ஞாயிறு, 27 மார்ச், 2011

ஆவியுடன் பேசிய பின்பே அ.தி.மு.க. வுடன் கூட்டணி - விஜய்காந்த்தின் பரபரப்பான பே (ய்)ச்சு!


இது வரை தனியாக தண்ணியடித்துக் கொண்டிருந்தவருக்கு ஊத்திக்கொடுக்க புது ஆளு கிடைச்சதாலோ என்னவோ வழக்கத்திற்கும் அதிகமாகவே சுதி ஏறி அதீத மதியுடனே  பேசிவருகின்றார் தே.மு.தி.க., தலைவர் விஜய்காந்த். 

அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, அம்பத்தூர் பொன்னேரி தொகுதிகளில் பிரசாரத்தின் போது விஜயகாந்த், "நான் முன்னரே தெரிவித்தது போல மக்களுடனும், தெய்வத்துடனும் தான் கூட்டணி வைத்திருக்கிறேன். சிறு வயதில் இருந்தே எனக்கு எம்.ஜி.ஆர் மீது அதிக பற்று உண்டு. அவர் எந்தெந்த படத்தில் என்னென்ன உடையில் வந்தார் என்று கூட என்னால் சொல்ல முடியும். விஜயகாந்த் ஏன் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ளார் என்று நீங்கள் நினைக்கலாம். பேரறிஞர் அண்ணா மீது கொண்டுள்ள பற்றால் தான் அவர் பெயர் கொண்ட அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்துள்ளேன். அண்ணாவின் ஆவி கூறியதின் பேரிலேயே அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்திருக்கிறேன். விஜயகாந்த் பணம் வாங்கிக் கொண்டு தான் அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்துள்ளார் என்று தி.மு.க.,வினர் கூறுகின்றனர். இது உளவுத் துறையின் தவறான தகவல் ஆகும்." என்கிறார். (செய்தி உதவி: தினமலர் 27 மார்ச் 2011).


அவர் என்னவோ தெளிவாக பே(ய்)சியது போல் தான் தெரிகின்றது. ஆனால் நமக்குத்தான் தலைச்சுத்துகின்றது! என் சிறுமதியினுள் குடைந்த சில கேள்விகள்...

1. தெய்வத்துடனும் கூட்டணி அதே நேரத்தில் ஆவியின் வாக்கிற்க்கு கட்டுபட்டு அ.தி.மு.க. வுடன் உறவு. அது சரி எம்.ஜி.ஆரின் ஆவி ஏன் இவருக்கு இதுவரை எதுவும் கூறவில்லை?!*!?!*?!
2. இந்த தேர்தலுக்கு முன்பு வரை அண்ணாவின் ஆவியுடன் ஏன் தொடர்புக்கொள்ளவில்லை?!
3. அ.தி.மு.க. விடம் பணம் வாங்கியொன்றும் கூட்டணி அமைக்கவில்லை என நேரடியாக கூறவேண்டியதுதானே!? தேவையின்றி ஏன் உளவுத்துறையை இழுக்கவேண்டும்?


பிரியாணி இல்லாம வாசம் வராது! (ஹி.. ஹி... ஹி... தேர்தல் நேரமல்லவா...! அதான் நெருப்பில்லாம புகையாதுங்கற பழமொழி மாறி பிரியாணியா வந்துடுச்சி!!) ஆனா... ங்கொய்யால...  அது ஆம்பூரா இல்ல தலப்பாக்கட்டாங்கறது தான் கேள்வி!


Download As PDF

சனி, 26 மார்ச், 2011

உள்ளம் கொள்ளைப் போகுதே... மழலைகளின் அழகினைக்கண்டு

துள்ளாத மனமும் துள்ளும்... இந்த மழலைகளின் நிழற்படத் தொகுப்பினைக் கண்டு. அது என்னவோ தெரியலிங்க... மழைக்காலம் வெயில்காலம் என்பது போல் என்னைச் சுற்றி உள்ளவங்களுக்கு மகப்பேறு காலமாக உள்ளது. மாங்காய் திருட வாய்ப்பில்லை இந்த மாமரமில்லா வளைகுடாநாட்டில். அதனால் என்ன மகிழ்ச்சியில் மனம் லயிக்க மனங்கவர் மழலைகளின் அணிவகுப்பினைக் காண்போமே!






































நன்றி: பல்வேறு இணையதளங்கள்



Download As PDF

திங்கள், 21 மார்ச், 2011

கார்ட்டூன்களைப் பாருங்க... குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க! - 5

'கிச்சு கிச்சு' மூட்டுதா.. இல்ல 'கிர்ர்ன்னு' தலையை சுத்தவைக்குதா... 'குலுங்கக் குலுங்கச்' சிரிக்கவைக்குதா... அதுவுமில்ல குமுறி குமுறி அழணும்னு தோணுதா... பாகம் - 5ஐ  பார்த்துட்டு நீங்களேச் சொல்லுங்க. 

பணிப்பளுவினால் பதிவிடுவதில் சிறிது இடைவெளி விடலாம் என்றிருந்தபோது, "அதெப்படி விடுவது?! தமிழகம் முழுவது ஆறு கோடி மக்களை மகிழ்விக்க அரசியல்வாதிகள், என்னமாய் மாய்ந்து மாய்ந்து ஓரங்கமாகவும், கூட்டணியாகவும் நாடகமிட நீங்கள் வாளாகவிருப்பது சரிதானா?" என்றுக் கேட்டதோடன்றி தான் இரசித்த கார்ட்டூனையும் தோழமையுடன் அனுப்பிவைத்து உற்சாகமளித்த திருமதி.அன்பரசி ஜான் அவர்களுக்கு முதல் நன்றி!  சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!




























சில இதழ்களின் உள்நோக்கம் வேறாக இருப்பினும் அவர்கள் வெளியிடும் கார்ட்டூன்கள் நமது நடப்பு அரசியலை தெள்ளத்தெளிவாகவும் அதே நேரத்தில் இரசிக்கும்படியும் அமைவதினால் அவைகளை  தொகுத்துள்ளேன்.




Download As PDF