சனி, 29 ஜனவரி, 2011

நவீன இந்திய அரசியல் வாய்ப்பாடு!

    இன்றைய அரசியற் சூழலில் இப்படியும் ஒரு அரசியல் வாய்ப்பாடு இந்திய அரசியற்வாதிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்க ஜனநாயகம்! வளர்க இவர்களது சமூக சேவை!!  சில வார்த்தைகளை தமிழ்படுத்தியதை தவிர அடியேனின் பங்கு குறிப்பிடும்படி ஏதுமில்லை.  இப்பதிவின் மூலம் எவருடைய மனதையும் புண்படுத்துவது எம் நோக்கமல்ல. அதே நேரத்தில் ஜனநாயகத்தை புண்படுத்துவோரை அறிந்துக் கொள்ளாமலிருப்பதும் அழகல்ல.   இதனை மின் அஞ்சல் மூலம் பகிர்ந்துக்கொண்ட திரு ஹாரிஷ் அவர்களுக்கும், நையாண்டியாக வரைந்த அந்த முகம் தெரியாத அந்த ஓவியக் கலைஞர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
















குறிப்பு: இந்த அட்டவணையில் எம் பெயர் இல்லை என மாநிலத் தலைவர்களோ அல்லது தேசியத்தலைவர்களோ கொதித்துப்போனால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஏனெனில், நாடு கடந்து தொலை தூரத்திலிருப்பதாலோ என்னவோ கல்லுளி மங்கனான எனக்கு இந்த அரசியற் கணக்கில் நான் சற்று ஞான சூன்யம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்,


.  



Download As PDF

சனி, 8 ஜனவரி, 2011

உணவிலே பல தேசியம் (கொடி) தெரியுதே!


இரும்பில் மட்டும் தான் இதயம் முளைக்குமா என்ன? உண்ணும் உணவுகளிலிருந்தே அந்தந்த நாட்டின் தேசியக் கொடிகளைக் காண்பிப்போமுல்ல!   இந்த வண்ணப்பட விருந்தினை மின் - அஞ்சல் மூலம் எமக்களித்த நண்பர் திரு. ஜோசப் தமிழ்செல்வன் அவர்களுக்கு நன்றி!















Download As PDF

செவ்வாய், 4 ஜனவரி, 2011

பாலைவன நாட்டிலே ஒரு கரைபுரண்டோடும் வெள்ளம்! - சவூதி அரேபியா.

சவூதி அரேபியாவினை பொதுவாக பாலைவனம் என்றே அனைவரும் நினைப்பர். ஆனால், இங்கே பூத்துக் குலுங்கும் சோலைவனமும் உண்டு. உலகமே பிரமிக்கும் தொழிற்வனமும் உண்டு. 

இங்கு நடப்பது மன்னராட்சி என்றாலும் மக்களின் நலனில் அரசு மிகவும் கவனமாக இருக்கின்றது. நம் இந்திய நாட்டில் அரசு மருத்துவமனைக்குச் சென்றாலே நம்மை மிகவும் கேவலமாகவோ அல்லது பரிதாபமாகவோ நோக்குவர். ஆனால் இங்கு அப்படியில்லை.  தனியார் மருத்துவமனையை விட அரசு மருத்துவமனைகள் மிகவும் நவீனமாகவும், மருத்துவ நிபுணர்களை உடையதாகவும் இருக்கும். பொதுமக்களுக்காக என்னதான் பார்த்து பார்த்து செய்தாலும் இயற்கையின் எதிர்பாராத இடர்பாடுகளைச் சந்திக்கத்தான் வேண்டியிருக்கின்றது.  

கடந்த மாதம் டிசம்பர் 30ந் தேதி அன்று பெய்த அடை மழையால் ஜெத்தா நகரமே ஸ்தம்பித்து வெள்ளக்காட்டில் மூழ்கியது என்றால்... நம்மவர்கள் பலர் நம்புவதற்கு வியப்பர். இதோ சிலகாட்சிகள்.



இங்குள்ள பிரபல ஆங்கில (ARAB NEWS) நாளிதழில்  வந்துள்ள நிழற்படங்கள்:
 
 









Download As PDF