திங்கள், 22 நவம்பர், 2010

கார்ட்டூனைப் பாருங்க... நீங்களும் இரசிப்பீங்க....

நிறைய பேருக்கு கார்ட்டூன் பார்க்க விருப்பமிருக்கும், ஆனா தேடி எடுக்க கொஞ்சம் பேருக்குத் தெரியாது அல்லது பலருக்கு நேரமிருக்காது. அதுக்குத்தானே நாம இருக்கோம். கார்ட்டூன் என்றாலே எனக்கு குஷி தான். எவ்வளவோ விஷயங்களை நையாண்டியாகவும் அதே நேரத்துல நறுக்கு தெறித்தாற்போலவும் எழுத்தாணியை விட தூரிகை சுவாரசியமாகச் சொல்லும். இன்னமும் நிறைய கார்ட்டூன் இருக்கு. விகடன் போன்ற இதழ்கள் காப்புரிமை பெற்றிருப்பதால அனைத்தையும் வெளியிட முடியலை. கீழே இருப்பவை உங்களுக்கும் பிடிக்கும்னு நம்பறேன்.













Download As PDF

திங்கள், 8 நவம்பர், 2010

மழலை முதல் மூத்தோர் வரை இணையத்திலிருந்துதமிழ் கற்க...

தாயகத்திலிருந்து  அயலகம் பெயர்ந்தோர் தங்கள் மழலைகளுக்கு தமிழினை எவ்வாறு சொல்லிக்கொடுப்பது என்கின்ற சிக்கலை தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தளம் எளிதாக தீர்க்கின்றது. இப்படியொரு இணையக்கல்வி இருப்பதினை ஏன் இன்னமும் நம் தமிழக அரசோ அல்லது மக்கள் தொடர்புச் சாதனங்களோ பெரிய அளவினில் பிரபல படுத்தவில்லை என்பது இன்னமும் வியப்பளிக்கின்றது!?  இதனுடன் தமிழகத்திலிருந்து விடுதலைப்போராட்டவீரர்களின் பங்கு, சிறந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், விடுதலைக்கு முன்பும் & பின்பும் ஆண்டவர்கள் மற்றும் ஆண்டுக்கொண்டிருப்பவர்கள், அவர்களின் ஆட்சி முறை, இயற்கை வளங்கள், தொழில் துறை என அனைத்து வித தகவல்களையும் அறியத் தருவார்களேயானால் வளரும் தலைமுறையினர் பெரிதும் பயன் பெறுவர். 

இத்தளத்திற்குச் செல்ல  சொடுக்கவும்...



தமிழ் இணைய வழிக்கல்வியின் மழலை பாடவிவரங்களுக்கு...
http://www.tamilvu.org/tvutab/courses/primer/bp70/html/bp70home.htm

தமிழ் இணைய வழிக்கல்வியின் முழு பாடவிவரங்களுக்கு...

இது போன்ற பயனுள்ள தளங்கள் ஏதேனுமிருப்பினும் தாங்களும் பகிர்ந்துக் கொள்ளலாம். அனைத்துவிதமான தகவலுடன் விரைவில் தொடர்புக்கொள்வோம். ஆக்கப்பூர்வமான நேர் / எதிர்மறை கருத்துக்கள் ஏதுமிருப்பின் அவசியம் பின்னூட்டமிடவும்.
Download As PDF